For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வாழைப்பழ தோல் எப்படி உங்கள் சருமத்திற்கு நிறம் அளிக்கும்?

வாழைப் பழ தோல் பல விதங்களில் உடலுக்கு நன்மை தருகிறது. அதுபோலவே சரும அழகையும் அதிகப்படுத்துகிறது. வாழைப் பழ தோலைக் கொண்டு செய்யும் அழகுக் குறிப்புகளை இங்கு காண்போம்.

|

வாழைப்பழ தோலில் அதிகளவு சத்துக்கள் இருக்கிறது. நார்சத்தும் உள்ளது. இதிலுள்ள பி6 மற்றும் பி12 உடலிலுள்ள நொதிகள் மற்றும் புரோட்டினை ஊக்குவிக்கிறது. இதனால் கொலாஜனும் அதிகரிக்கிறது.

beauty benefits of banana peel

உங்கள் அழகை அதிகப்படுத்த எப்படி வாழைப் பழ தோலை உபயோகிப்பது என பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
இயற்கையான ப்ளீச்சிங் :

இயற்கையான ப்ளீச்சிங் :

ஒரு வாழைப் பழ தோல் மற்றும் 2 ஸ்பூன் ஓட்ஸ் எடுத்துக் கொள்ளுங்கள். அவ்ற்றுடன் சிறிது சர்க்கரை கலந்து நைஸாக அரைத்துக் கொள்ளுங்கள்.

இவற்றுடன் சிறிது பால கல்ந்து முகத்தில் த்டவுங்கள். 10 நிமிடம் கழித்து முகத்தை கழுவுங்கள். இதனுடையை ப்ளீச்சிங் குணம் சருமத்திலுள்ள அழுக்கு, செல்களை அகற்றி நிறத்தை தரும்.

 சரும டோனர் :

சரும டோனர் :

வாழைப்பழத் தோலை முகத்தில் தேயுங்கள். தோல் நிறம் பிரவுனாக மாறும் வரை தேய்க்கலாம். பின்னர் 10 நிமிடம் கழித்து கழுவுங்கள். சருமம் பளபளக்கும்.

கருவளையம் மறைய :

கருவளையம் மறைய :

வாழைப் பழ தோலிலுள்ள நாரை எடுத்து அதனுடன் கற்றாழையின் ஜெல்லை கலந்து நன்றாக மசித்துக் கொள்லுங்கள். இதனை கண்களுக்கு அடியில் தேய்த்து 5 நிமிடம் கழித்து கழுவுங்கள். இவ்வாரு செய்தால் கருவளையம் மறைந்துவிடும்.

சரும நிறம் தர :

சரும நிறம் தர :

வாழைப் பழ தோலை நன்ராக மசித்து அதனுடன் 1 ஸ்பூன் சமையல் சோவை கலந்து முகத்தில் த்டவுங்கள். 15 நிமிடம் கழித்து க்ழுவ வேண்டும். இது சருமத்திற்கு நிறம் தரும். கருமையை போக்கிவிடும்.

வறட்சி சுருக்கம் போக்க :

வறட்சி சுருக்கம் போக்க :

பாலாடையுடன் வாழைப் பழத்தோலை கலந்து பேஸ்ட் போல் செய்து முகத்தில் போடுங்கள். 20 நிமிடம் கழித்து கழுவவும். வறட்சி போய் மிருதுவாகும். சுருக்கங்களும் மறையும். வாரம் இருமுறை செய்யலாம்.

 எண்ணெய் சருமத்திற்கு :

எண்ணெய் சருமத்திற்கு :

வாழை பழத் தோலை மசித்து அதனுடன் சிறிது எலுமிச்சை சாறு கலந்து முகத்தில் தடவுங்கள். 10 நிமிட கழித்து முகம் கழுவினால் எண்ணெய் பிசுபிசுப்பு முகத்தில் இருக்காது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

beauty benefits of banana peel

Remedy to get rid of dark circle using banana peel,
Story first published: Thursday, December 8, 2016, 11:08 [IST]
Desktop Bottom Promotion