குளிர்காலத்தில் சரும அழகை மேம்படுத்த ஆயுர்வேதம் கூறும் சில குறிப்புகள்!

ஆயுர்வேதம் கெமிக்கல் இல்லாத பொருட்களைக் கொண்டு சிகிச்சை அளிக்கக்கூடியது. இந்த ஆயுர்வேதம் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த மட்டுமின்றி, சரும ஆரோக்கியத்தையும், அழகையும் அதிகரிக்க உதவுகிறது

Subscribe to Boldsky

குளிர்காலத்தில் சருமம் பொலிவின்றியும், வறட்சியுடனும் உள்ளதா? இதற்காக பல க்ரீம்களையும், மாய்ஸ்சுரைசர்களையும் பயன்படுத்தி வருகிறீர்களா? இருப்பினும், சரும வறட்சி போனபாடில்லையா? அப்படியெனில் ஆயுர்வேதம் கூறும் சில ஆலோசனைகளைப் பின்பற்றி வாருங்கள்.

 Ayurvedic Tips To Get Glowing Skin This Winter

பொதுவாக ஆயுர்வேதம் கெமிக்கல் இல்லாத பொருட்களைக் கொண்டு சிகிச்சை அளிக்கக்கூடியது. இந்த ஆயுர்வேதம் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த மட்டுமின்றி, சரும ஆரோக்கியத்தையும், அழகையும் அதிகரிக்க உதவுகிறது.

இங்கு குளிர்காலத்தில் சரும அழகை மேம்படுத்த ஆயுர்வேதம் கூறும் சில டிப்ஸ்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

இஞ்சி டீ

குளிர் காலத்தில் இஞ்சி டீ குடிப்பதால், குடலியக்கம் சீராகி, உடலில் உள்ள டாக்ஸின்கள் முழுமையாக வெளியேற்றப்பட்டு, உடலில் இரத்த ஓட்டம் அதிகரித்து, சரும பொலிவு அதிகரிக்கும். அதற்கு 2 துண்டு இஞ்சியை ஒரு கப் சுடுநீரில் போட்டு, 10 நிமிடம் கழித்து குடிக்க வேண்டும். இப்படி ஒரு நாளைக்கு 3-4 முறை குடித்து வர நல்ல பலன் கிடைக்கும்.

வெதுவெதுப்பான உணவுகள்

குளிர் காலத்தில் குளிர்ச்சியான உணவுகளை சாப்பிடுவதைத் தவிர்த்து, வெதுவெதுப்பான நிலையிலான உணவுகளில் சிறிது நெய் சேர்த்து கலந்து உட்கொண்டு வர, திசுக்கள் மற்றும் உறுப்புக்களில் ஏற்படும் தேய்மானம் தடுக்கப்படும்.

அதிலும் கேரட், பூசணிக்காய், சர்க்கரைவள்ளிக் கிழங்கு போன்றவற்றைக் கொண்டு சூப் தயாரித்து குடித்தால், சருமம் பொலிவடையும்.

 

திரிபலா

உடலில் உள்ள டாக்ஸின்களை வெளியேற்ற ஆயுர்வேதம் பரிந்துரைக்கும் ஓர் பொருள் தான் திரிபலா. அதிலும் திரிபலாவில் இருக்கும் நெல்லிக்காயில் வைட்டமின் சி அதிகம் உள்ளது.

இது சரும செல்கள் பாதிக்கப்படுவதைத் தடுத்து நல்ல பாதுகாப்பை வழங்கும். ஆகவே சருமம் பொலிவோடு இருக்க, 1 டம்ளர் வெதுவெதுப்பான நீரில் 1 டீஸ்பூன் திரிபலா பவுடர் சேர்த்து கலந்து, இரவில் படுக்கும் முன் குடிக்க வேண்டும்.

 

நல்லெண்ணெய்

குளிர்காலத்தில் குளிக்கும் முன் நல்லெண்ணெயை வெதுவெதுப்பாக சூடேற்றி தலை முதல் கால் வரை தடவி மசாஜ் செய்து, 15-20 நிமிடம் ஊற வைத்து பின் குளிக்க வேண்டும்.

இப்படி தினமும் செய்வதால், சருமத்தின் மென்மைத்தன்மை அதிகரிப்பதுடன், நாள் முழுவதும் பொலிவோடும், புத்துணர்ச்சியுடனும் காட்சியளிக்கலாம்.

 

யோகா

தினமும் யோகாவை செய்து வந்தால், உடலின் மெட்டபாலிசம் மேம்படும், செரிமானம் தூண்டப்படும் மற்றும் உடலில் உள்ள டாக்ஸின்கள் வெளியேறும். ஆகவே அழகாக ஜொலிக்க தினமும் தவறாமல் யோகாவை செய்து வாருங்கள்.

கபல்பதி ப்ராணயாமம்

மூச்சுப் பயிற்சியான கபல்பதி ப்ராணயாமத்தை தினமும் 10 நிமிடம் செய்து வருவதன் மூலம், நுரையீரல் சுத்தமாகி, முகம் பிரகாசமாக காட்சியளிக்கும். குறிப்பாக இச்செயலை காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் செய்து வருவது இன்னும் நல்லது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Ayurvedic Tips To Get Glowing Skin This Winter

Here are some ayurvedic tips to get glowing skin this winter. Read on to know more...
Please Wait while comments are loading...
Subscribe Newsletter