For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மேனியின் அழகை மெருகூட்டும் சாமந்தி - ஆயுர்வேத குறிப்புகள்!

By Hemalatha
|

சருமத்தை அழகாக்குவதில் இயற்கையானவைப் போல பாதுகாப்பானது எதுவுமில்லை. செலவும் குறைவு, கெமிக்கலும் இல்லை. ஆயுர்வேதத்தில் நிறைய பொருட்கள் உங்கள் சருமத்தின் நிறத்தினை அதிகரிக்கச் செய்து, மேனிக்கு மினுமினுப்பு அளிக்கிறது. அதனால்தான் வெளி நாட்டவரும் இப்போது ஆயுர்வேதம், போன்ற நம் நாட்டு இயற்கை முறைகளின் பக்கம் வருகின்றனர்.

Ayurvedhic beauty tips for glowing skin

சிலருக்கு என்ன செய்தாலும் சருமம் பொலிவின்றி காணப்படும். க்ரீம்கள் எல்லாம் அப்போதைக்கு தீர்வு அளிப்பது போல இருந்தாலும், நிரந்தரமான அழகினை தருவதில்லை என உங்களுக்கு தோன்றுகிறதா?

அப்படியெனில் இந்த குறிப்பு நிச்சயம் உங்கள் சாய்ஸில் இடம் பெறும். என்ன வழிகளில் உங்கள் அழகினை மெருகூடலாம் என பார்க்கலாம்.

சாமந்தி பூ ஃபேஸ் பேக் :

உங்களுக்கு தெரியுமா? கிராமங்களில் சாமந்தி பூவினை அரைத்து, குழந்தைகளுக்கு பூசி குளிக்க வைப்பார்கள். குழந்தை தங்க நிறத்திற்கு மாறும். இது அனுபவப் பூர்வமான உண்மை. இங்கே சாமந்திப் பூ வினைக் கொண்டு ஃபேஸ் பேக் எப்படி செய்வது என பார்க்கலாம்.

சாமந்தி பூவின் இதழ்களைப் பிரித்தெடுத்து அவற்றை பாலுடன் சேர்த்து நன்றாக மைய அரைத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு ஸ்பூன் தேனினை சேர்த்து, நனறாக கலந்து முகத்தில் மாஸ்க் போல போடுங்கள். 15 நிமிடங்கள் கழித்து காய்ந்ததும் கழுவி விடுங்கள்.

வாரம் இரு முறை இந்த மாஸ்க் போட்டு வந்தால், சருமம் இறுக்கமடையும். முகப்பருக்கள் மறைந்து விடும். சருமம் மினுமினுக்கும்.

மஞ்சள்-கடலை மாவு ஃபேஸ் பேக் :

இது மிகவும் எளிதாக வீட்டில் இருக்கக் கூடியவை. திருமண சமயங்களில் உடனடியாக கருமை போய், நிறம் அதைகரிக்க வேண்டுமென்றால், இந்த ஃபேஸ் பேக்கை உபயோகிங்கள். சருமமும் பளபளப்பாகும்.

4 ஸ்பூன் க்டலை மாவில், அரை ஸ்பூன் மஞ்சள் சேர்த்து, சிறிது பால் கலந்து குழைத்துக் கொள்ளுங்கள். இதனை முகத்தில் போட்டு, 15 நிமிடங்கள் கழித்து கழுவ வேண்டும். உடனடியாக கருமை நீங்கி சருமம் ஜொலிப்பதை நீங்கள் உணர்வீர்கள்.

குறிப்பு : இந்த பேக்கை அதிக நேரம் போட்டு காய விடக்கூடாது. சருமத்தில் நுண்ணிய சுருக்கங்கள் வர காரணமாகிவிடும்.

அரோமா ஃபேஸ்பேக் :

இந்த அரோமா பேக் சருமத்தில் அருமையான பலன்களை தரும். சருமத்தில் உள்ள அழுக்குகள் வெளியேற்றி, போஷாக்கினை அளிக்கிறது. அதில் சேர்த்துள்ள மூலிகைகள் சருமத்திற்கு ஜொலிப்பினை தருகின்றன.

தேவையானவை :

அரைத்த சந்தனம் - 1 ஸ்பூன்
ரோஜா எண்ணெய் - 2 துளிகள்
லாவெண்டர் எண்ணெய் -1 துளி
கடலை மாவு-2 ஸ்பூன்
மஞ்சள் - ஒரு சிட்டிகை


மேலே கூறிய அனைத்தையும் சிறிது மோர் கலந்து பேஸ்ட் போல் செய்து கொள்ளுங்கள். 10-15 நிமிடங்கள் அப்படியே விடவும். வாரம் இரு முறை செய்தால், உங்களுக்கு இளமையான சருமம் கிடைக்கும்.

ஆயுர்வேத ஸ்க்ரப் :

அரிசிமாவு 1 ஸ்பூன் எடுத்துக் கொள்ளுங்கள். அதே அளவு சந்தந் பொடியையும் அதில் சேர்க்கவும். இப்போது, சிறிது சங்கு பொடி(விருப்பமிருந்தால்) சேர்த்து, அதனுடன், அரை ஸ்பூன் பால், கடலை மாவு , மற்றும் 1 ஸ்பூன் ரோஸ் வாட்டர் ஆகியவற்றை சேர்த்து ஒன்றாக கலக்கவும்.

இதனை முகத்தில் போட்டு தேய்த்து கழுவுங்கள். இதனை வாரம் ஒரு முறை செய்யலாம். அழுக்குகளை அறவே நீக்கி, உங்கள் சருமத்தை பளிச்சிட வைக்கும்.

English summary

Ayurvedhic beauty tips for glowing skin

Ayurvedhic beauty tips for glowing skin
Desktop Bottom Promotion