பாதாமை எப்படி உபயோகித்தால் சருமத்தின் நிறம் அதிகரிக்கும் ?

பாதாம் அதிக ஆன்டி ஆக்ஸிடென்டுகளை கொண்டது. பலவித விட்டமின் மற்றும் மினரல்களை பெற்றது. இது ஆரோக்கியம் மற்றும் அழகு இரண்டிற்கும் உபயோகிக்கிறோம். சரும நிறத்தை அதிகரித்து, சுருக்கத்தை போக்கும்.

Subscribe to Boldsky

சருமம் பிறந்ததிலிருந்து ஒரே மாதிரி இருந்தால் பிரச்சனையே இல்லை. ஆனால் பலவித சூழ் நிலைகளாலும் வெயிலாலும், மாசினாலும், நிறமிழந்து கருமைடைந்து மங்கி பொலிவின்றி இருக்கும்.

Almond to improve skin tone

சருமம் ஆரோக்கியத்தின் முகவரியும் கூட. மென்மையான பளிச்சென்ற சருமம் அழகு மட்டுமல்ல ஆரோக்கியத்தின் வெளிப்பாடு. நிறம் பொருட்டு இல்லை இங்கே.

உங்களின் இயற்கையான நிறத்தை மீட்டெடுக்க பாதாம் எப்படி உபயோகப்படுத்தலாம் என பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

பாதாம் மற்றும் பால் :

பாதாம் இரவே ஊற வைத்துவிடுங்கள். மறு நாள் பாலுடன் அரைத்து முகத்தில் போடவும். 20 நிமிடம் கழித்து கழுவுங்கள். இவ்வாறு வாரம் இருமுறை செய்தால் இழந்த நிறம் பெறலாம்.

பாதாம் மற்றும் தேன் :

பாதாம் பொடியுடன் சிறிது தேன் கலந்து முகத்தில் தடவுங்கள். 15 நிமிடம் கழித்து கழுவினால் முகம் பிரகாசமடையும்.

பாதாம் மற்றும் பப்பாளி :

இரண்டுமே இறந்த செல்களை வெளியேற்றும் அத்னால் உண்டான கருமை படிப்படியாக மறையும். பாதாம் பொடியுடன் பப்பாளியை கலந்து முகத்தில் போடுங்கள்.

10 நிமிடம் கழித்து கழுவினால் நல்ல பலன் தரும். முக்கியமாக எண்னெய் சருமம் உள்ளவர்கள் இதனை கடைபிடிக்கவும்.

 

பாதாம் மற்றும் ஓட்ஸ் :

பாதாம் பொடி மற்றும் ஓட்ஸ் பொடி ஆகிய்வற்றை சம அளவு கலந்து யோகார்ட் கலந்து முகத்தில் மாஸ்க் போல போடுங்கள். காய்ந்ததும் கழுவினால் முகத்தின் நிறம் உடனடியாக அதிகரிப்பதை பார்ப்பீர்கள்.

பாதாம் மற்றும் வாழைப்பழம் :

வாழைப்பழம் சருமத்தை இருதுவாக்கி பளபளப்பை தரும். பாதாம் பொடியுடன் மசித்த வாழைப்பழத்தை கலந்து முகத்தில் போடுங்கள். சருமம் உயிர்ப்புடனும் நிறம் பெற்றும் இருக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Almond to improve skin tone

Almond can be used for both health and beauty benefits. here, in this article, described methods of using almond for skin whitening
Please Wait while comments are loading...
Subscribe Newsletter