For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பருக்கள் வராமல் இருக்க ஆயுர்வேதம் சொல்லும் முக்கிய குறிப்புகள்!!!

By Maha
|

கண்டிப்பாக ஒவ்வொருவரும் பருக்களால் மிகுந்த கஷ்டத்தை அனுபவித்திருப்போம். இதற்காக எத்தனையோ க்ரீம்களை வாங்கிப் பயன்படுத்தியிருப்போம். இருப்பினும் எந்த ஒரு பலனும் கிடைத்தபாடில்லை. ஆனால் நம் பாரம்பரிய இயற்கை மருத்துவ முறையான ஆயுர்வேதத்தில் பருக்கள் வராமல் இருக்கவும், வந்த பருக்கள் விரைவில் நீங்கவும் ஒருசில குறிப்புக்கள் உள்ளன.

முகப்பரு சொல்லும் உடல் ஆரோக்கியம் பற்றிய உண்மைகள்!!!

பொதுவாக ஆயுர்வேத மருத்துவத்தினால் பலன் சற்று தாமதமாக கிடைத்தாலும், நிரந்தரமாக இருக்கும். எனவே பொறுமையுடன், ஆயுர்வேத முறையைக் கடைப்பிடித்தால், நிச்சயம் பருக்களைப் போக்கலாம். சரி, இப்போது பருக்கள் வராமல் இருக்க ஆயுர்வேதம் சொல்லும் முக்கிய குறிப்புகள் என்னவென்று பார்ப்போம்.

முகப்பரு வர ஆரம்பிச்சுடுச்சா? உடனே சமையலறைக்கு போங்க...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
முகத்தைக் கழுவவும்

முகத்தைக் கழுவவும்

பலரும் குளிர்ந்த நீரில் தான் முகத்தைக் கழுவுவோம். ஆனால் குளிர்ந்த நீரில் முகத்தைக் கழுவினால், சருமத்தில் எண்ணெய் பசையின் சுரப்பு அதிகரித்து, அதனால் பருக்கள் வரும் என்று தெரியுமா? எனவே தினமும் 3-4 முறை வெதுவெதுப்பான நீரில் முகத்தைக் கழுவ வேண்டும்.

கசப்பான உணவுகள் அவசியம்

கசப்பான உணவுகள் அவசியம்

ஆயுர்வேத மருத்துவமானது, உணவில் கசப்பான உணவுப் பொருட்களை அதிகம் சேர்க்கச் சொல்லும். ஏனெனில் கசப்பான உணவுப் பொருட்கள் இரத்தத்தை சுத்தம் செய்வதோடு, சருமத்தில் எண்ணெய் சுரப்பையும் கட்டுப்படுத்தும். எனவே கசப்பான உணவுப் பொருட்களான பாகற்காயை வாரம் ஒருமுறை உணவில் சேர்ப்பதோடு, தினமும் சிறிது வேப்பிலையை உட்கொள்வது, பருக்கள் வருவதைத் தடுத்துவிடுவதோடு, உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும்.

துளசி பேஸ்ட்

துளசி பேஸ்ட்

நீங்கள் பருக்களால் கஷ்டப்பட்டால், துளசி இலையை அரைத்து பேஸ்ட் செய்து, பருக்களின் மீது வைத்து உலர வைத்து கழுவ வேண்டும். இப்படி வாரம் மூன்று முறை செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும். வேண்டுமானால், துளசியை நீரில் போட்டு கொதிக்க வைத்து, அந்நீரை டோனர் போன்று பயன்படுத்தலாம்.

யோகா

யோகா

யோகா உடல் ஆரோக்கியத்தை மட்டும் மேம்படுத்துவதோடு, பல சரும பிரச்சனைகளையும் குணப்படுத்த உதவும். அதற்கு வாயில் காற்றினை நிரப்பி சிறிது நேரம் கழித்து மெதுவாக காற்றினை வெளிவிட வேண்டும். இப்படி தினமும் 10-12 நிமிடம் செய்து வந்தால், நல்ல மாற்றத்தை நீங்களே உணர்வீர்கள்.

மஞ்சள் சிகிச்சை

மஞ்சள் சிகிச்சை

பருக்களைப் போக்க ஆயுர்வேதம் என்று வரும் போது, அதில் நிச்சயம் மஞ்சளும் இடம் பெறும். அதற்கு மஞ்சள் மற்றும் இஞ்சியை சரிசமமாக எடுத்துக் கொண்டு அரைத்து பேஸ்ட் செய்து, இரவில் படுக்கும் போது பாதிக்கப்பட்ட இடத்தில் தடவ வேண்டும். இப்படி ஒரு 3 நாட்கள் தொடர்ந்து செய்து வந்தால், விரைவில் குணமாகும்.

தக்காளி ஜூஸ்

தக்காளி ஜூஸ்

தக்காளியை அரைத்து சாறு எடுத்து, அந்த சாற்றினை தினமும் இரவில் படுக்கும் முன் முகத்தில் தடவிக் கொண்டு தூங்க செல்ல வேண்டும். இப்படி அன்றாடம் பின்பற்றி வந்தால், முகம் பருக்களின்றி பொலிவோடு இருக்கும்.

சந்தன பேஸ்ட்

சந்தன பேஸ்ட்

சந்தனப் பொடியை வேப்பிலை தண்ணீர் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி உல வைத்து கழுவ வேண்டும். இப்படி செய்தால், சருமத்தில் உள்ள எந்த ஒரு பிரச்சனையும் நீங்கி, சருமம் பிரகாசமாகவும், சுத்தமாகவும் இருக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Treating Acne Through Ayurveda

Ayurvedic treatment is the best ways to treat acne and pimple. Read to know the ayurveda remedies for acne and pimple.
Story first published: Thursday, October 1, 2015, 14:42 [IST]
Desktop Bottom Promotion