For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்களுக்கு இருப்பது எந்த வகையான சருமம் என்று தெரியாதா...?

By Maha
|

பலருக்கும் தங்களுக்கு இருப்பது என்ன வகையான சருமம் என்று தெரியாது. இப்படி தெரியாமலேயே கடைகளில் விற்கப்படும் பல க்ரீம்களைப் பயன்படுத்துவதால், பலரும் பல்வேறு சரும பிரச்சனைகளுக்கு ஆளாகின்றனர். மேலும் இந்த பிரச்சனைக்கு க்ரீம்கள் மீது தவறு சொல்லக்கூடாது.

ஒவ்வொரு ஆணும் தெரிந்து கொள்ள வேண்டிய ஷேவிங் பற்றிய விஷயங்கள்!!!

அனைத்திற்கும் காரணம் நாம் தான். கடைகளில் விற்கப்படும் க்ரீம்களில் தெளிவாக எந்த வகையான சருமத்தினர் பயன்படுத்த வேண்டுமென்று குறிப்பிடப்பட்டிருக்கும். ஆனால் அதை கவனிக்காமல் பரவாயில்லை என்று பலரும் பயன்படுத்துவதால், அந்த க்ரீம்கள் அழகை கெடுக்கின்றன. குறிப்பாக ஆண்கள் தான் இந்த மாதிரியான பிரச்சனைகளுக்கு உள்ளாவார்கள்.

அந்தரங்க முடியை ஷேவிங் செய்யும் போது மனதில் கொள்ள வேண்டியவைகள்!!!

சரி, இப்போது உங்களுக்கு இருப்பது எந்த வகையான சருமம் மற்றும் எந்த மாதிரியான பராமரிப்புக்களை மேற்கொள்ள வேண்டும் என்று பார்ப்போம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வறட்சியான சருமம்: அறிகுறி

வறட்சியான சருமம்: அறிகுறி

முகத்தை கழுவிய பின்னர், சருமம் இறுக்கமடைகிறதா? மேலும் முகத்தில் ஆங்காங்கு தோலுரிந்து காணப்படுகிறதா? அப்படியெனில் உங்களுக்கு இருப்பது வறட்சியான சருமமாகும்.

வறட்சியான சருமத்தை பராமரிக்கும் முறை

வறட்சியான சருமத்தை பராமரிக்கும் முறை

எண்ணெய் பசை நிறைந்த கிளின்சர்களைப் பயன்படுத்த வேண்டும். மேலும் தினமும் சருமத்திற்கு மாய்ஸ்சுரைசர் பயன்படுத்த வேண்டும். ஆண்கள் ஷேவிங் செய்த பின்னர் மற்றும் இரவில் படுக்கும் முன் எண்ணெய் பசை நிறைந்த மாய்ஸ்சுரைசரைப் பயன்படுத்த வேண்டும். வாரம் இரண்டு முறை ஸ்கரப் செய்ய வேண்டும்.

எண்ணெய் பசை சருமம்: அறிகுறி

எண்ணெய் பசை சருமம்: அறிகுறி

முகம் கழுவிய பின்னரும், முகத்தில் எண்ணெய் வழிவது போன்று இருக்கிறதா? அடிக்கடி முகப்பருக்கள், கரும்புள்ளிகள் வருவதோடு, சருமத்தில் மேடு பள்ளங்கள் அதிகம் உள்ளதா? அப்படியெனில் உங்களுக்கு இருப்பது எண்ணெய் பசை சருமமாகும்.

எண்ணெய் பசை சருமத்தை பராமரிக்கும் முறை

எண்ணெய் பசை சருமத்தை பராமரிக்கும் முறை

சாலிசிலிக் ஆசிட் நிறைந்த ஜெல் ஃபேஷியல் கிளின்சர் பயன்படுத்தினால், சருமத்தில் அதிக அளவில் எண்ணெய் சுரப்பது தடுக்கப்படும். மேலும் முகத்தை கழுவிய பின்னர், எண்ணெய் பசை சருமத்தினருக்கான டோனர் பயன்படுத்த வேண்டும். மேலும் எண்ணெய் பசை இல்லாத மாய்ஸ்சுரைசரை தினமும் ஒருமுறை பயன்படுத்த வேண்டும். முக்கியமாக ஆண்கள் ஷேவிங் செய்த பின்னர், எண்ணெய் பசை இல்லாத ஆஃப்டர் ஷேவ் லோசனைப் பயன்படுத்துவது, சருமத்தின் அழகை இன்னும் அதிகரித்து பொலிவோடு காட்டும்.

சென்சிடிவ் சருமம்: அறிகுறி

சென்சிடிவ் சருமம்: அறிகுறி

சென்சிடிவ் சருமத்தினருக்கு, சூரியக்கதிர்களின் தாக்கத்தினால் சருமத்தில் சிவப்பு சிவப்பாக சிறு புள்ளிகள், அரிப்புக்கள், எரிச்சல்கள் போன்றவை ஏற்படக்கூடும். மேலும் எந்த ஒரு க்ரீம்மை பயன்படுத்தினாலும், சருமத்தில் அரிப்புக்கள் ஏற்படக்கூடும். மேலும் அவ்வப்போது பருக்களும் வரக்கூடும்.

சென்சிடிவ் சருமத்தை பராமரிக்கும் முறை

சென்சிடிவ் சருமத்தை பராமரிக்கும் முறை

சென்சிடிவ் சருமத்தினர் அதிக நறுமணம் கொண்ட மற்றும் ஆல்கஹால் கலந்த பொருட்களை தவிர்க்க வேண்டும். ஏனெனில் இவை சருமத்தில் அரிப்புக்களையும், எரிச்சல்களையும் ஏற்படுத்தும். மேலும் இந்த வகை சருமத்தினர் இயற்கை பொருட்களைக் கொண்டு சருமத்தைப் பராமரிப்பது நல்லது. அதுமட்டுமல்லாமல், இந்த வகையான சருமம் கொண்டவர்கள், கடுமையான ஃபேஷியல் ஸ்கரப்புகளைத் தவிர்க்க வேண்டும்.

காம்பினேஷன் சருமம்: அறிகுறி

காம்பினேஷன் சருமம்: அறிகுறி

இந்த வகை சருமத்தினருக்கு T-zone பகுதிகளான நெற்றி, மூக்கு மற்றும் தாடையில் மட்டும் அதிகப்படியான எண்ணெய் இருப்பதோடு, கன்னங்கள் வறட்சியாக இருக்கும்.

காம்பினேஷன் சருமத்தை பராமரிக்கும் முறை

காம்பினேஷன் சருமத்தை பராமரிக்கும் முறை

காம்பினேஷன் சருமம் கொண்டவர்கள், T-zone பகுதிகளில் எண்ணெய் பசை சருமத்தினருக்கான பராமரிப்பு முறையையும், கன்னங்களில் வறட்சியான சருமத்தினருக்கான பராமரிப்பு முறையையும் மேற்கொள்ள வேண்டும். மேலும் இவர்கள் முதுமைத் தோற்றத்தைத் தவிர்க்க தினமும் சன்ஸ்க்ரீன் பயன்படுத்த வேண்டும். அதுமட்டுமின்றி, வாரம் ஒருமுறை களிமண் மாஸ்க்கை T-zone பகுதிகளில் போட்டு வர வேண்டும் மற்றும் மற்ற பகுதிகளில் எண்ணெய் பசை இல்லாத மாய்ஸ்சுரைசரைப் பயன்படுத்த வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Treat Your Skin According To Your Skin Type

The article enlists pointers on identifying your skin type and skincare regimen for your skin. It covers dry skin, sensitive skin, oily skin and combination skin.
Story first published: Tuesday, June 16, 2015, 14:29 [IST]
Desktop Bottom Promotion