For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கரும்புள்ளிகளை நீக்க சில சிம்பிளான வழிகள்!!!

By Maha
|

இன்றைய இளம் வயதினர் அதிகம் அனுபவிக்கும் ஒரு சரும பிரச்சனை தான் கரும்புள்ளிகள். இந்த கரும்புள்ளிகள் மூக்கு, கண்கள் மற்றும் உதடுகளுக்கு கீழே வரக்கூடும். கரும்புள்ளிகள் இருக்கும் இடத்தைப் பார்த்தால் கருப்பாக ஆரோக்கியமற்ற இடம் போன்று காணப்படும். உங்களுக்கு இந்த பிரச்சனை உள்ளதா? அதற்காக பல முயற்சிகளை எடுத்துள்ளீர்களா? இருப்பினும் எந்த ஒரு பலனும் கிடைத்தபாடில்லையா?

அப்படியெனில் தமிழ் போல்ட் ஸ்கை கொடுத்துள்ள சில சிம்பிளான வழிகளைப் பின்பற்றினால், நிச்சயம் கரும்புள்ளிகளின் பிரச்சனையில் இருந்து விடுபடலாம். பொதுவாக கரும்புள்ளிகள் வருவதற்கு முக்கிய காரணம், சருத்துளைகளில் அழுக்குகள் தங்கி, அவ்விடத்தில் அடைப்பை ஏற்படுத்தி கருமையாக மாற்றும். மேலும் சிலருக்கு சருமத்துளைகளில் அழுக்குகள் தங்கி சிறு கட்டிகளாக இருக்கும். இந்த கட்டியை சிலர் கையால் எடுக்க முயல்வார்கள்.

ஆனால் இப்படி கையால் கரும்புள்ளிகளை எடுக்க முயற்சித்தால், உடனே அதனை நிறுத்துங்கள். சரி, இப்போது கரும்புள்ளியை நீக்க உதவும் சில சிம்பிளான இயற்கை வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதைப படித்து பாருங்களேன்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேக்கிங் சோடா

பேக்கிங் சோடா

பேக்கிங் சோடா, கரும்புள்ளிகளை நீக்க மிகவும் சிறப்பான பொருள். அதற்கு பேக்கிங் சோடாவை நீர் சேர்த்து பேஸ்ட் செய்து, முகத்தில் கரும்புள்ளிகள் உள்ள இடத்தில் தடவி சிறிது நேரம் தேய்த்து, பின் ஈரமான துணியால் துடைத்து எடுக்க வேண்டும்.

பட்டை

பட்டை

பட்டையை பொடி செய்து, அதனை தேன் அல்லது எலுமிச்சை சாறு சேர்த்து பேஸ்ட் செய்து கரும்புள்ளிகள் உள்ள இடத்தில் தடவி ஊற வைத்து தேய்த்து கழுவ வேண்டும். இதனால் கரும்புள்ளிகளைப் போக்கலாம்.

எலுமிச்சை

எலுமிச்சை

எலுமிச்சையில் ஏற்கனவே ப்ளீச்சிங் தன்மை இருப்பதால், இவற்றைப் பயன்படுத்தினால், சருமத்தில் உள்ள அழுக்குகள் முற்றறிலும் வெளியேறி, சருமத்தின் நிறமும் பொலிவும் அதிகரித்துக் காணப்படும்.

ஓட்ஸ்

ஓட்ஸ்

ஓட்ஸ் பொடியை தயிருடன் சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து, முகத்திற்கு மாஸ்க் போட்டால், இறந்த செல்கள், சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் நீங்கி சருமம் பொலிவோடு இருக்கும்.

தேன்

தேன்

தேன் சருமத்திற்கும், கரும்புள்ளிகளை நீக்குவதற்கும் சிறந்தது. மேலம் சருமத்தினை இறுக்குவதற்கும், சருமத்தின் நிறத்தை அதிகரிப்பதற்கும் தேன் மிகவும் சிறப்பான பொருள். ஆகவே இதனை முகத்திற்கு போடும் மாஸ்க்கிலோ அல்லது தினமும் முகத்தில் தடவி சிறிது நேரம் ஊற வைத்து கழுவி வருவதோ நல்லது.

க்ரீன் டீ

க்ரீன் டீ

க்ரீன் டீ போட்டு குடித்த பின்னர், அதன் இலைகளைக் கொண்டு முகத்தை ஸ்கரப் செய்து வந்தால், கரும்புள்ளிகள் நீங்குவதோடு, சருமமும் புத்துணர்ச்சியுடன் பொலிவோடு காணப்படும்.

பால்

பால்

பால் மிகவும் அற்புதமான கரும்புள்ளிகளைப் போக்க உதவும் அழகு பராமரிப்பு பொருள். எனவே அந்த பாலைக் கொண்டு தினமும் 2-3 முறை முகத்தை பஞ்சு பயன்படுத்தி துடைத்து எடுக்க வேண்டும். இதன் மூலம் சருமம் மென்மையாகவும், வறட்சியின்றியும் இருக்கும்.

முட்டை

முட்டை

முட்டையின் வெள்ளைக்கருவைப் பயன்படுத்தி முகத்திற்கு மாஸ்க் போட்டால், அது சருமத்தில் உள்ள இறந்த செல்கள் மற்றும் அழுக்குகளை முற்றிலும் வெளியேற்றி, கரும்புள்ளிகளைப் போக்கும்.

தண்ணீர்

தண்ணீர்

தண்ணீரை தினமும் போதிய அளவில் குடித்து வருவதன் மூலம், உடலில் தங்கியுள்ள நச்சுக்கள் வெளியேறும். மேலும் தினமும் முகத்தை 3 முறை கழுவி வர வேண்டும். இதனாலும் முகத்தில் அழுக்குகள் தங்குவதைத் தடுக்கலாம்.

சர்க்கரை

சர்க்கரை

சர்க்கரையை ஆலிவ் ஆயில் சேர்த்து கலந்து, அதனைக் கொண்டு முகத்தை ஸ்கரப் செய்ய வேண்டும். இதன் மூலம் சருமத் துளைகளில் உள்ள அழுக்குகள் வெளியேறுவதோடு, சருமமும் ஈரப்பசையுடன் அழகாக இருக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Simple Remedies To Remove Blackheads

Remove blackheads at home. We give you simple home remedy tips to remove blackheads. Try them out.
Story first published: Monday, February 16, 2015, 16:47 [IST]
Desktop Bottom Promotion