For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஒரே மாதத்தில் முகத்தில் உள்ள கருமையை நீக்க வேண்டுமா? இதோ அதற்கான ஃபேஸ் பேக்குகள்!

By Maha
|

வெள்ளைத் தோலின் மீது மோகம் இல்லாதவர்களே இருக்க முடியாது. என்ன தான் மற்றவர்களிடம் கருப்பு தான் அழகு என்று சொல்லிக் கொண்டாலும், வெள்ளையாக இருக்க தான் விரும்புவோம் மற்றும் அதற்கான முயற்சிகளிலும் ஈடுபடுவோம். மேலும் பெண்களைப் போலவே ஆண்களுக்கும் வெள்ளையாக ஆசை இருக்கும்.

சருமத்தை வெள்ளையாக்க முயற்சிப்போர் செய்யும் தவறுகள்!!!

அதற்காக பலரும் கடைகளில் விற்கப்படும் பேர்னஸ் க்ரீம்களை வாங்கிப் பயன்படுத்துவார்கள். ஆனால் சருமத்திற்கு ஒரு பொருளைப் பயன்படுத்துவதாக இருந்தால், அது இயற்கைப் பொருளாக இருப்பதே சிறந்தது. ஏனெனில் கெமிக்கல் கலந்த க்ரீம்கள் சில நேரங்களில் அலர்ஜியை ஏற்படுத்தி, அது அழகை பெரிதும் பாதிக்கும்.

கருப்பா இருந்தாலும் களையா தெரிய டெய்லி 10 நிமிடம் செலவழிச்சா போதும்...

எனவே உங்களுக்கு வெள்ளையாக ஆசை இருந்தால், கீழே கொடுக்கப்பட்டுள்ள ஃபேஸ் மாஸ்க்குகளைப் போடுங்கள். இந்த ஃபேஸ் மாஸ்க்குகளை அடிக்கடி போட்டு வந்தால் ஒரே மாதத்தில் உங்கள் சருமத்தில் உள்ள கருமை நீங்கி, சருமத்தின் நிறம் அதிகரித்திருப்பதைக் காண்பீர்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பால் பவுடர் மற்றும் தேங்காய் தண்ணீர்

பால் பவுடர் மற்றும் தேங்காய் தண்ணீர்

1 டேபிள் ஸ்பூன் பால் பவுடரில் சிறிது தேங்காய் தண்ணீர் சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி உலர வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இதனால் பால் பவுடரில் உள்ள புரோட்டீன் மற்றும் லாக்டிக் ஆசிட் சருமத்தில் உள்ள கருமையைப் போக்குவதோடு, சரும செல்களை ஆரோக்கியத்துடனும், புத்துணர்ச்சியுடனும் வைத்துக் கொள்ளும்.

மஞ்சள் தூள் மற்றும் தயிர்

மஞ்சள் தூள் மற்றும் தயிர்

1 டீஸ்பூன் தயிரை நன்கு அடித்துக் கொண்டு, அதில் 3 சிட்டிகை மஞ்சள் தூள் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து பின் கழுவ, சருமத்தில் உள்ள கருமை நீங்குவதுடன், பிம்பிள் மற்றும் அதனால் ஏற்பட்ட தழும்புகள் இருந்தாலும் நீங்கும்.

எலுமிச்சை சாறு மற்றும் பால் பவுடர்

எலுமிச்சை சாறு மற்றும் பால் பவுடர்

1 டீஸ்பூன் பால் பவுடரில் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, பின் கழுவ, கரும்புள்ளிகள் நீங்குவதுடன், வெயிலால் ஏற்பட்ட கருமையும் அகலும். இந்த முறையை கை, கால்களுக்கும் பின்பற்றலாம்.

உருளைக்கிழங்கு சாறு மற்றும் கடலை மாவு

உருளைக்கிழங்கு சாறு மற்றும் கடலை மாவு

1 டீஸ்பூன் கடலை மாவை எடுத்துக் கொண்டு, அதில் சிறிது உருளைக்கிழங்கு சாற்றினை ஊற்றி பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, பின் கழுவ வேண்டும். இதனால் உருளைக்கிழங்கில் உள்ள ப்ளீச்சிங் தன்மை சரும கருமையை அகற்றும்.

தக்காளி மற்றும் தயிர்

தக்காளி மற்றும் தயிர்

அரைத்த தக்காளி மற்றும் தயிரை சரிசம அளவில் எடுத்து ஒன்றாக கலந்து, முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து கழுவ, தயிர் மற்றும் தக்காளியில் உள்ள அமிலம் சரும கருமைகளை அகற்றும் மற்றும் நல்ல மாய்ஸ்சுரைசராகவும் இருக்கும். இந்த முறையை தினமும் செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

பாதாம் பேஸ்ட் மற்றும் தேன்

பாதாம் பேஸ்ட் மற்றும் தேன்

சிறிது பாதாமை நீரில் ஊற வைத்து அரைத்து, அதில் தேன் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி நன்கு 20 நிமிடம் ஊற வைத்து, பின் கழுவ சருமத்தின் நிறம் அதிகரிப்பதோடு, முகப்பரு தழும்புகளும் நீங்கும். இந்த முறையை தினமும் செய்து வந்தால் ஒரே மாதத்தில் சரும நிறம் அதிகரித்திருப்பதைக் காணலாம்.

கடலை மாவு மற்றும் மில்க் க்ரீம்

கடலை மாவு மற்றும் மில்க் க்ரீம்

இந்த ஃபேஸ் பேக் வறட்சியான சருமத்திற்கு ஏற்றது. அதற்கு 1 டீஸ்பூன் மில்க் க்ரீம்மில் சிறிது கடலை மாவு சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து பின் கழுவ வேண்டும். இதனால் சரும வறட்சி தடுக்கப்படுவதோடு, சரும நிறமும் மேம்படும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Seven Homemade Skin Whitening Face Pack and Masks

Here we will share some face packs and skin tips to improve the skin color and induce the skin whitening.
Desktop Bottom Promotion