For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வெயிலால் முகத்தில் ஏற்பட்ட கருமையை நீக்க வேண்டுமா? இதோ சில டிப்ஸ்...

By Maha
|

என்ன தான் மழைப் பெய்தாலும், சூரியக்கதிர்கள் சருமத்தை மிகவும் கடுமையாக பாதிக்கின்றன. சூரியக்கதிர்கள் அளவுக்கு அதிகமாக சருமத்தைத் தாக்கும் போது, அதனால் சருமத்தின் நிறம் கருமையாகிவிடுகிறது.

இரண்டே நாட்களில் முகத்தில் உள்ள கருமை நீங்க சில அற்புத வழிகள்!!!

இப்படி கருமையான சருமத்தை வெள்ளையாக்க என்ன வழி உள்ளது என்று பலரும் தேடுவோம். அத்தகையவர்களுக்காக விடுமுறை நாட்களில் வீட்டில் இருக்கும் போது எப்படி வெயிலால் சருமத்தில் ஏற்பட்ட கருமையைப் போக்குவது என்று கொடுக்கப்பட்டுள்ளது.

அக்குள் கருமையாக உள்ளதா? அதை எளிதில் போக்க இதோ சில டிப்ஸ்...

கெமிக்கல் கலந்த பொருட்களை சருமத்தில் பயன்படுத்த வேண்டுமெனில் பலமுறை யோசிக்க வேண்டும். ஆனால் இயற்கைப் பொருட்களைக் கொண்டு முகத்தில் மாஸ்க் போட்டால், எந்த ஒரு பக்க விளைவும் இல்லாமல், சருமத்தில் உள்ள கருமை நீங்குவதோடு, சருமமும் ஆரோக்கியமாக இருக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
எலுமிச்சை சாறு மற்றும் தேன்

எலுமிச்சை சாறு மற்றும் தேன்

2 டீஸ்பூன் எலுமிச்சை சாற்றில் 2 டீஸ்பூன் தேன் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 30 நிமிடம் ஊற வைத்து, பின் முகத்தைக் கழுவ வேண்டும். இப்படி செய்து வந்தால், முகத்தில் வெயிலால் ஏற்பட்ட கருமை மறையும்.

கடலை மாவு மற்றும் மஞ்சள் தூள்

கடலை மாவு மற்றும் மஞ்சள் தூள்

இந்த ஃபேஸ் பேக், வெயிலால் ஏற்பட்ட கருமையை குறைப்பதோடு, பொலிவை அதிகரிக்கும். அதற்கு 4 டீஸ்பூன் கடலை மாவுடன், 1 டீஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் சிறிது பால் சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து, முகம் மற்றும் கழுத்தில் தடவி 30 நிமிடம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.

பேக்கிங் சோடா

பேக்கிங் சோடா

இந்த முறை கூட முகத்தில் உள்ள கருமையைப் போக்கும். அதற்கு பேக்கிங் சோடாவை ரோஸ் வாட்டரில் கலந்து, முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பின் கழுவ வேண்டும்.

ஓட்ஸ்

ஓட்ஸ்

இது ஒரு நேச்சுரல் ஸ்கரப்பர். இந்த ஸ்கரப் செய்வதற்கு சிறிது ஓட்ஸ் உடன், பால் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி மென்மையாக ஸ்கரப் செய்ய வேண்டும். பின் முகத்தைக் கழுவிய பிறகு, வைட்டமின் ஈ ஆயிலை முகத்தில் தடவி மசாஜ் செய்து விட வேண்டும்.

எலுமிச்சை சாறு மற்றும் உப்பு

எலுமிச்சை சாறு மற்றும் உப்பு

எலுமிச்சை ஓரு சிறப்பான ப்ளீச்சிங் தன்மை வாய்ந்த பொருள். அந்த எலுமிச்சையின் சாற்றில் சிறிது உப்பு சேர்த்து கலந்து, குளிக்கும் போது இந்த கலவையைக் கொண்டு சருமத்தை மென்மையாக ஸ்கரப் செய்து, குளிர்ந்த நீரில் கழுவினால், சருமத்தில் உள்ள கருமைகள் அகலும்.

வெள்ளரிக்காய்

வெள்ளரிக்காய்

வெள்ளரிக்காய் கூட சரும கருமையை நீக்க உதவும். அதற்கு வெள்ளரிக்காயை பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி 30 நிமிடம் ஊற வைத்து, பின் அலச வேண்டும். இதனால் சருமத்தில் இருக்கும் கருமை மட்டுமின்றி, கரும்புள்ளிகள், பருக்கள் போன்றவையும் நீங்கும்.

கற்றாழை ஜெல்

கற்றாழை ஜெல்

கற்றாழை ஜெல்லை சருமத்தில் பயன்படுத்தினால், சருமத்தில் ஏதேனும் தொற்றுகள் இருந்தால் நீங்குவதோடு, சருமமும் ஈரப்பசையுடன் இருக்கும். அதற்கு கற்றாழை ஜெல்லை முகத்தில் தடவி மென்மையாக சிறிது நேரம் மசாஜ் செய்து, பின் குளிர்ந்த நீரில் முகத்தைக் கழுவ வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Remove Sun Tan Fast At Home

There are some quick ways to remove tan. Have a look at some natural tan removing tips.
Story first published: Friday, August 7, 2015, 13:56 [IST]
Desktop Bottom Promotion