For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கோடைக்காலத்தில் ஏற்படும் சரும பிரச்சனைகளில் இருந்து தப்பிப்பதற்கான டிப்ஸ்

|

ஒவ்வொரு வருடமும் அனைவரும் எதிர்பார்க்கும் காலம் தான் கோடைக்காலம். குடும்பத்தினர் அனைவரும் ஒன்றாக கூடி மகிழ, ஊரில் இருக்கும் சொந்தங்களை சென்று பார்த்து வர என நாம் அனைவரும் வழி மீது விழிவைத்து காத்திருக்கும் காலம் தான் கோடைக்காலம். இதே போல மறுமுனையில் கோடைக்காலத்திற்காக சரும தொல்லைகளும் நம் வருகைக்காக காத்திருக்கும். கொளுத்தும் வெயில், வெளியூர் பிரயாணம், அலைச்சல், வியர்வை அருவியென ஊற்றும், தினம் தினம் நண்பர்களுடன் மைதானங்களில் விளையாட்டு என பல காரணங்களினால் நமக்கு சரும தொல்லைகள் ஏற்பட வாய்ப்புகள் இருக்கின்றன.

கோடையில் சருமம் கருமையாகாமல் அழகாக இருக்க சில டிப்ஸ்...

பெரும்பாலும், உடல் அரிப்பு, சரும எரிச்சல், படர்தாமரை, படை, வேர்க்குரு போன்ற சரும தொல்லைகள் தான் கோடைக்காலங்களில் ஏற்படும். இவை எல்லாம் உங்களுக்கு ஏற்படாமல், மிக சந்தோசமாகக் கொண்டாட சில பல வழிகளை நீங்கள் பின்பற்ற வேண்டும். அதை நீங்கள் சரியாக பின்பற்றினாலே நீங்கள் இந்த சரும தொல்லைகள் ஏற்படாது நிம்மதியாக உங்களது கோடைக்காலத்தை கால் மேல் கால் போட்டு ஹாயாக கொண்டாடலாம்....

வெயிலால் கருமையாக மாறிய சருமத்தின் நிறத்தை சரிசெய்ய சில டிப்ஸ்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அரிப்பு

அரிப்பு

பெரும்பாலும் கோடை வந்துவிட்டது என நமக்கு உணர்த்துவதே இந்த உடல் அரிப்பு தான். சரும வறட்சி உள்ளவர்களுக்கு தான் அதிகம் கோடைக்காலத்தில் அரிப்பு ஏற்படுகிறது. இது அவர்களுக்கு ஒருவகையான அழற்சியின் காரணமாகவும் நிறைய வியர்வை ஏற்படுவதனாலும் ஏற்படுகிறது. இதை தவிர்க்க அவர்கள் கோடைக்காலங்களில் காலை மட்டும் இல்லாது மாலை வேலைகளிலும் நன்கு குளித்தாலே வியர்வை தொல்லை தவிர்த்து உடல் அரிப்பிலிருந்து விடுபடலாம்.

சொறி

சொறி

அதிகப்படியான வெப்பத்தினாலும், உடலில் சூடு அதிகரித்தால் தோலில் சொறி ஏற்படலாம். இதற்கு நீங்கள் எடைக்குறைவான உடைகளை அணியவேண்டும். மேலும் மிகவும் இறுக்கமான உடைகளை அணிவதை தவிர்க்க வேண்டும். வியர்வை சருமத்திலேயே தங்குவதனால் தான் இவ்வாறான சொறி ஏற்படுகிறது.

 படர்தாமரை

படர்தாமரை

படர்தாமரை ஏற்படாமல் இருக்க நீங்கள் நன்கு உங்களது கை கால்களை சோப்பு போட்டு கழுவ வேண்டும். தேகத்தில் தங்கும் நச்சு கிருமிகளினால் தான் படர்தாமரை ஏற்படுகிறது. அதே போல வியர்வையை உடையிலேயே தங்குவது போல தன்மை கொண்ட துணிகளை அணிவதை தவிர்க்கவேண்டும்.

ஈஸ்ட் தொற்று

ஈஸ்ட் தொற்று

பெண்களுக்கு வெயில் காலத்தில் அவர்களது பிறப்புறுப்பில் ஈஸ்ட் தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உண்டு. உங்களுக்கு ஒருவேளை கோடைக்காலத்தில் தான் முதல் முறையாக ஈஸ்ட் தொற்று ஏற்படுகின்றது என்றால் நீங்கள் மருத்துவரை அணுகுவது தான் சரியான முறை.

சேற்றுப்புண்

சேற்றுப்புண்

வெயில் காலங்களில் உங்களது கால் விரல் இடுக்குகளில் சேற்றுப்புண் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. இதை தவிர்க்க. நீங்கள் அதிகமாக நீரில் விளையாடிவிட்டோ அல்லது நீர் தேக்கங்களில் இருந்துவிட்டு வந்தாலோ நன்றாக துணியை வைத்து ஈரம் முழுவதும் கையும் அளவிற்கு துடைக்க வேண்டும். மற்றும் ஆன்டி-ஃப்ங்கள் கிரீம்களை பயன்ப்படுத்துவது உங்களுக்கு சரியான தீர்வினை அளிக்கும்

படை

படை

கோடைக்காலத்தில் பலருக்கு ஏற்படும் சரும பிரச்சனைகளில் படை நோயும் ஒன்று. பூசிகள் கடித்தது போல ஆங்காங்கே தோல்களில் தடிப்பு தடிப்பாக வருவதுதான் படை. உணவுகளினால் ஏற்படும் அழற்சியினால் கூட ஏற்படலாம் என மருத்துவர்கள் கூறுகின்றனர். படை வராமல் தடுப்பதற்கு இறுக்கமான ஆடைகளை அணிவதை தவிர்த்திடுங்கள். மற்றும் அதிகாமாக சுடு நீரில் குளிப்பதை தவிர்க்கவும். படை ஏற்பட்ட இடத்தில் ஆன்டிஹிஸ்டமைன் (Antihistamine)கிரீமினை தடவி வந்தால் படை குணமாகும்.

வேர்க்குரு

வேர்க்குரு

கோடைக்காலத்தின் செல்ல பிள்ளை தான் வேர்க்குரு. இது குடுக்கும் கொடைச்சல் வேறு எந்த சரும கோளாறுகளினாலும் தர இயலாது. வியர்வை உடலிலேயே தங்கிவிடுவதனாலும், உடல் சூட்டினாலும் தான் வேர்க்குரு ஏற்படுகிறது. சரியாக குளிப்பதும், குளிர்ந்த உணவுகள் எடுத்துக்கொள்வதன் மூலமாகவும் வேர்க்குரு ஏற்படாது பார்த்துக்கொள்ள முடியும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

How To Treat Or Avoid Summer Skin Problems

Do you know how to treat or avoid summer skin problems? If no, read here.
Desktop Bottom Promotion