For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்க முகத்தில் மேடு பள்ளங்கள் அதிகமாக உள்ளதா? அதை மறைக்க சில டிப்ஸ்...

By Maha
|

சிலருக்கு முகத்தில் சரும துளைகள் பெரியதாக காணப்படும். இதனால் அவர்கள் முகச் சருமத்தைப் பார்த்தால் மேடு பள்ளங்களாக காணப்படும். இது அவர்களின் முகத்தின் அழகையே கெடுக்குமளவு இருக்கும்.

மேலும் இத்தகைய நிலை முதுமைத் தோற்றத்தையும் கொடுக்கும். இதனைத் தடுக்க முகத்திற்கு ஒருசில ஃபேஸ் பேக்குகளைப் போட வேண்டும். இப்படி தவறாமல் முகத்திற்கு ஃபேஸ் பேக் போட்டு வந்தால், சருமத்தில் உள்ள மேடு பள்ளங்களை மறைக்கலாம்.

சரி, இப்போது முகச் சருமத்தில் உள்ள மேடு பள்ளங்களை மறைக்க உதவும் ஃபேஸ் பேக்குகளைப் பார்ப்போமா!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
முட்டை வெள்ளைக்கரு மற்றும் எலுமிச்சை

முட்டை வெள்ளைக்கரு மற்றும் எலுமிச்சை

ஒரு முட்டையின் வெள்ளைக்கருவுடன் 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, அதனை முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, குளிர்ந்த நீரில் கழுவினால், விரிவடைந்த சருமத் துளைகள் சுருங்கும்.

கடலை மாவு மற்றும் தயிர்

கடலை மாவு மற்றும் தயிர்

2 டேபிள் ஸ்பூன் தயிருடன், 1 டேபிள் ஸ்பூன் கடலை மாவு சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து, முகம் மற்றும் கழுத்தில் தடவி நன்கு உலர வைத்து குளிர்ச்சியான நீரில் கழுவ வேண்டும்.

பப்பாளி

பப்பாளி

பப்பாளிக்கு சருமத்துளைகளை சுருங்க வைக்கும் தன்மை உள்ளது. அதற்கு நன்கு கனிந்த பப்பாளியை அரைத்து, அதை முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து குளிர்ந்த நீரில் கழுவவும். இப்படி தினமும் செய்து வந்தால், சருமத்துளைகளின் அளவு சுருங்கியிருப்பதை நன்கு காணலாம்.

பச்சை பால்

பச்சை பால்

தினமும் முகத்தை காய்ச்சாத பாலை காட்டனில் நனைத்து முகத்தில் தடவி 5 நிமிடம் ஊற வைத்து, பின் சுத்தமான காட்டனை நீரில் நனைத்து துடைத்து எடுக்க வேண்டும். இதன் மூலமும் சருமத் துளைகளை சுருங்கச் செய்யலாம்.

ஐஸ் கட்டிகள்

ஐஸ் கட்டிகள்

தினமும் ஐஸ் கட்டிகளைக் கொண்டு முகத்தை 10 நிமிடம் மசாஜ் செய்து, 15 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் முகத்தை கழுவ வேண்டும். இதன் மூலம் சருமம் இறுக்கமடையும்.

தக்காளி மற்றும் தேன்

தக்காளி மற்றும் தேன்

1 தக்காளியை அரைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி உலர வைத்து கழுவ வேண்டும். இப்படி செய்வதால் அதில் உள்ள வைட்டமின் சி, பிம்பிள், முகப்பரு போன்றவற்றை போக்கி, சருமத் துளைகளையும் சுருங்கச் செய்யும்.

வெள்ளரிக்காய் ஜூஸ் மற்றும் ரோஸ் வாட்டர்

வெள்ளரிக்காய் ஜூஸ் மற்றும் ரோஸ் வாட்டர்

வெள்ளரிக்காய் ஜூஸில் சிறிது ரோஸ் வாட்டர் கலந்து, முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, பின் கழுவ வேண்டும்.

கற்றாழை ஜெல் மற்றும் தேன்

கற்றாழை ஜெல் மற்றும் தேன்

1 டேபிள் ஸ்பூன் கற்றாழை ஜெல்லுடன், 1 டீஸ்பூன் தேன் சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து கழுவினால், முகம் பொலிவோடு இருக்கும்.

தயிர்

தயிர்

தினமும் தயிரை முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து கழுவினால், விரிவடைந்த சருமத் துளைகள் சுருங்கி, முகம் இளமையோடு பொலிவாகவும், மென்மையாகவும் காணப்படும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Face Packs To Reduce Skin Pores

Try these home remedies to reduce large skin pores. These natural remedies for large pores also make skin look younger. Here are some of the tips to reduce skin pores.
Story first published: Saturday, May 9, 2015, 15:45 [IST]
Desktop Bottom Promotion