For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கருப்பா இருக்குறேன்னு ஃபீல் பண்றீங்களா? அப்ப இத ட்ரை பண்ணி பாருங்க...

By Maha
|

சருமத்தின் நிறத்தை அதிகரிக்க டிவிக்களில் எத்தனை க்ரீம்கள் விளம்பரம் செய்யப்பட்டாலும், அவற்றால் சருமத்தின் நிறத்தை மட்டும் வெள்ளையாக்க முடியாது. உண்மையில் சருமம் கருமையாக இருப்பதற்கு நம் சருமத்தில் உள்ள நிறமியான மெலனின் அளவு தான் காரணம். சிலருக்கு இந்த மெலனின் அளவு அதிகமாக இருக்கும். அத்தகையவர்கள் கருப்பாக இருப்பார்கள்.

உடனடியாக வெள்ளையாக வேண்டுமா? முல்தானி மெட்டி ஃபேஸ் பேக் போடுங்க...

என்ன தான் சருமத்தை வெள்ளையாக்கலாம் என்று பல க்ரீம்கள் விற்கப்பட்டாலும், உண்மையில் சருமத்தை பால் போன்று வெள்ளையாக்க முடியாது. ஆனால் மாறாக சருமத்தை பொலிவோடு பராமரிக்கலாம். மேலும் வெயிலின் தாக்கத்தினால் கருமையான சருமத்தை நீக்கி, நமது உண்மையான நிறத்திற்கு கொண்டு வர முடியும்.

ஏழே நாட்களில் வெள்ளையாக ஆசையா? இத ட்ரை பண்ணுங்க...

அதுமட்டுமின்றி, கருப்பாக இருந்தால் கவலைப்படாதீர்கள். ஏனெனில் கருப்பாக இருப்பவர்களின் சருமத்தில் உள்ள மெலனின், உடலின் நோயெதிர்ப்பு சக்தியை வலிமையாக வைத்திருக்கும். இதனால் தான் கருப்பாக இருப்பவர்கள் அதிக அளவில் நோய்களின் தாக்கத்திற்கு உள்ளாகாமல் இருக்கிறார்கள்.

சருமத்தை வெள்ளையாக மாற்ற எலுமிச்சையைப் பயன்படுத்தும் வழிகள்!!!

சரி, இப்போது சருமத்தின் நிறத்தை சீராக பராமரிக்க உதவும் அந்த ஃபேஸ் பேக்குகள் என்னவென்று பார்ப்போமா!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
எலுமிச்சை ஃபேஸ் பேக்

எலுமிச்சை ஃபேஸ் பேக்

ஒரு பௌலில் எலுமிச்சையை பிழிந்து சாறு எடுத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் தயிர் சேர்த்து கலந்து, சருமத்தில் தடவி உலர வைத்து, வெதுவெதுப்பான நீரில் கழுவி வர வேண்டும். இப்படி வாரம் ஒருமுறை செய்து வந்தால், வெயிலால் கருமையான சருமத்தைப் போக்கலாம்.

கோதுமை ஃபேஸ் பேக்

கோதுமை ஃபேஸ் பேக்

ஒரு டேபிள் ஸ்பூன் கோதுமை மாவில், 2 டேபிள் ஸ்பூன் ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து, சருமத்தில் தடவி உலர வைத்து, வெதுவெதுப்பான பாலில் கழுவி வந்தாலும், சருமம் பொலிவோடு இருக்கும்.

தேன் ஃபேஸ் பேக்

தேன் ஃபேஸ் பேக்

சருமத்தின் பொலிவை அதிகரிக்க உதவும் பொருட்களில் ஒன்று தான் தேன். அதற்கு தினமும் தேனை முகத்தில் தடவி உலர வைத்து, ஈரமான காட்டனால் துடைத்து, பின் வெதுவெதுப்பான நீரால் கழுவ வேண்டும்.

ஒட்ஸ்

ஒட்ஸ்

1 டேபிள் ஸ்பூன் ஓட்ஸ் பொடியுடன், 2 டேபிள் ஸ்பூன் ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி வட்ட சுழற்சியில் சிறிது நேரம் மசாஜ் செய்து, 15-20 நிமிடம் ஊற வைத்து, பின் ஈரமான துணியால் துடைத்து எடுத்து, பின் கழுவ வேண்டும்.

 மஞ்சள் ஃபேஸ் பேக்

மஞ்சள் ஃபேஸ் பேக்

மஞ்சள் கூட சருமத்தின் நிறத்தை சீராக பராமரிக்க உதவுவதோடு, சரும செல்களுக்கு நல்ல பாதுகாப்பையும் வழங்கும். அதற்கு பெண்கள் அதனைக் கொண்டு தினமும் பூசி குளிப்பதோடு, ஃபேஸ் பேக்காகவும் போடலாம். இல்லாவிட்டால், 1 டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூளுடன், 2 டேபிள் ஸ்பூன் பால் சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து, சருமத்தில் தடவி உலர வைத்து, பின் கழுவ வேண்டும். இப்படி மாதம் இரண்டு முறை செய்து வந்தால், நல்ல மாற்றத்தைக் காணலாம்.

தக்காளி ஃபேஸ் பேக்

தக்காளி ஃபேஸ் பேக்

1 தக்காளியை அரைத்து, அதனை ஈரமான சருமத்தில் தடவி உலர வைத்து, பின் மீண்டும் தடவி உலர வைத்து, இறுதியில் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், சருமத்தின் நிறத்தில் மாற்றம் தெரிவதோடு, முகத்தில் வளரும் தேவையற்ற முடியையும் தவிர்க்கலாம்.

ஆரஞ்சு தோல்

ஆரஞ்சு தோல்

ஆரஞ்சு தோலை வெயிலில் உலர வைத்து பொடி செய்து, அதனை நீர் சேர்த்து பேஸ்ட் செய்து, சருமத்தில் தடவி உலர வைத்து, பின் ஈரமான துணியால் துடைத்து, அதனை தொடர்ந்து வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இப்படி செய்தால், இயற்கையான பொலிவு கிடைக்கும்.

தயிர்

தயிர்

தயிரில் ப்ளீச்சிங் தன்மை இருப்பதால், இதுவும் சருமத்தின் நிறத்தைப் பாதுகாப்பதில் முக்கிய பங்கை வகிக்கிறது. அதற்கு 3 டேபிள் ஸ்பூன் தயிருடன் 1 டேபிள் ஸ்பூன் ஓட்ஸ் பொடி சேர்த்து கலந்து, சருமத்தில் தடவி சிறிது நேரம் ஸ்கரப் செய்து, பின் உலர்ந்ததும் மென்மையாக தேய்த்து கழுவ வேண்டும். இப்படி செய்தால் நல்ல பலனைக் காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Face Packs To Make Skin Fair

These face packs that make your skin fair have bleaching properties which enhance the skin tone. Take a look at these simple fairness tips.
Desktop Bottom Promotion