For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்க முகம் பளிச்சுன்னு வெள்ளையாகணுமா? இந்த ஃபேஸ் பேக்குகளை போடுங்க...

By Maha
|

பெண்களுக்கு வெள்ளையாக இருக்க வேண்டுமென்ற எண்ணம் அதிகம் இருக்கும். அதிலும் தென்னிந்திய பெண்களுக்கு இதன் மேல் உள்ள ஆசையைப் பற்றி சொல்லித் தான் தெரிய வேண்டுமென்பதில்லை. ஏனெனில் தென்னிந்திய பெண்கள் தங்களின் சரும நிறத்தை அதிகரிப்பதற்கு கடைகளில் விற்கப்படும் கண்ட கண்ட க்ரீம்களை வாங்கி அன்றாடம் பயன்படுத்துவார்கள். அப்படி பயன்படுத்துவதால், அது தற்காலிகமாக சருமத்தின் நிறத்தை அதிகரித்துக் காட்டலாம். ஆனால் சோப்பு போட்டு முகத்தை கழுவிவிட்டால், அது போய்விடும்.

இதனால் பல தென்னிந்திய பெண்கள் தங்களின் சரும நிறத்தையும், அழகையும் அதிகரிக்க முடியாமல் தவிக்கின்றனர். ஆகவே தமிழ் போல்ட் ஸ்கை சருமத்தின் நிறத்தை அதிகரிக்க உதவும் சில ஈஸியான ஃபேஸ் பேக்குகளை கொடுத்துள்ளது. அதைப் படித்து அவற்றை தவறாமல் பின்பற்றி வாருங்கள். நிச்சயம் உங்கள் சருமத்தின் நிறம் அதிகரிப்பதை நன்கு காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பால் பவுடர் மற்றும் எலுமிச்சை சாறு

பால் பவுடர் மற்றும் எலுமிச்சை சாறு

பால் பவுடரில் எலுமிச்சை சாறு மற்றும் தேன் சேர்த்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து, பின் முகத்தை கழுவ வேண்டும். இப்படி செய்து வந்தால், முகத்தின் நிறம் அதிகரிப்பதை உங்களால் உணர முடியும்.

ஓட்ஸ் மற்றும் புளித்த தயிர்

ஓட்ஸ் மற்றும் புளித்த தயிர்

ஓட்ஸை முதல் நாள் இரவிலேயே ஊற வைத்து, மறுநாள் காலையில் அதனை அரைத்து பேஸ்ட் செய்து, புளித்த தயிர் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி ஊற வைத்து கழுவ வேண்டும். இப்படி தொடர்ந்து செய்து வந்தால், நல்ல பலனை விரைவில் காணலாம்.

உருளைக்கிழங்கு

உருளைக்கிழங்கு

எலுமிச்சையைப் போலவே, உருளைக்கிழங்கிலும் ப்ளீச்சிங் தன்மை அதிகம் உள்ளது. ஆகவே உருளைக்கிழங்கை பேஸ்ட் செய்து, அதனை தினமும் முகத்தில் தடவி நன்கு ஊற வைத்து கழுவினால், முகம் பொலிவோடு மின்னும்.

மஞ்சள் மற்றும் தக்காளி

மஞ்சள் மற்றும் தக்காளி

மஞ்சள் மற்றும் தக்காளி சாற்றினை ஒன்றாக கலந்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி மாஸ்க் போட்டு வந்தால், அது சருமத்தின் நிறத்தை அதிகரிக்கும்.

பாதாம் எண்ணெய்

பாதாம் எண்ணெய்

பாதாம் எண்ணெயை வெதுவெதுப்பாக சூடேற்றி, முகத்தில் தடவி மசாஜ் செய்து நன்கு ஊற வைத்தால், முகத்தில் இரத்த ஓட்டம் அதிகரித்து, முகம் பிரகாசமாக இருக்கும்.

கடலை மாவு

கடலை மாவு

கடவை மாவில் மோர் சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி உலர வைத்து கழுவ வேண்டும். இப்படி அன்றாடம் செய்து வந்தால், சருமத்தின் நிறம் அதிகரிக்கும்.

புதினா

புதினா

புதினாவில் புத்துணர்ச்சியூட்டும் தன்மை அதிகம் உள்ளது. மேலும் சருமத்தில் உள்ள அழுக்குகளை முற்றிலும் வெளியேற்றும் சக்தி உள்ளது. அதற்கு புதினா இலையை அரைத்து சாறு எடுத்து, அதனை முகத்தில் தடவி 10-15 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும்.

வாழைப்பழ ஃபேஸ் பேக்

வாழைப்பழ ஃபேஸ் பேக்

வாழைப்பழத்திற்கும் சருமத்தின் நிறத்தை அதிகரிக்கும் தன்மை உள்ளது. அதற்கு நன்கு கனிந்த வாழைப்பழத்தை மசித்து, அதில் தேன் மற்றும் 1 டீஸ்பூன் புளித்த தயிர் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி மாஸ்க் போட வேண்டும்.

சந்தன மாஸ்க்

சந்தன மாஸ்க்

எண்ணெய் பசை சருமம் உள்ளவர்கள், சந்தனப் பொடியை நீரில் கலந்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி மாஸ்க் போட்டு வந்தால், சருமத்தின் நிறம் அதிகரிப்பதை நன்கு காணலாம். மேலும் இந்த மாஸ்க் முகத்தை புத்துணர்ச்சியுடன் வெளிக்காட்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Essential Face Packs For Skin Whitening

Talking of getting that whiter complexion, free from patches and pigmentation, homemade face mask for skin whitening have proven to be the most successful solution till date! 
Desktop Bottom Promotion