For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்கள் முகத்தில் குழிகள் அதிகம் உள்ளதா? அதை மறைக்க இதோ சில வழிகள்!!!

By Maha
|

சிலரது முகத்தில் குழிகள் அதிகம் காணப்படும். முகத்தில் குழிகள் இருந்தால், அவை முக அழகை கெடுப்பதோடு, பல்வேறு சரும பிரச்சனைகளான வெள்ளைப்புள்ளிகள், கரும்புள்ளிகள், முகப்பரு போன்றவை அதிகம் வருதற்கு வழிவகுக்கும். மேலும் யாருக்கு முகத்தில் குழிகள் அதிகம் உள்ளதோ, அவர்களது முகத்தில் எண்ணெய் அதிகம் வழிவதோடு, அழுக்குகளும் அதிகம் சேரும்.

அதற்காக கவலைப்பட வேண்டாம். இப்பிரச்சனை இருந்தால், அதனை ஒருசில ஃபேஸ் மாஸ்க்குகள் மூலம் சரிசெய்யலாம். அந்த ஃபேஸ் மாஸ்க்குகளைப் போட்டால், முகத்தில் உள்ள குழிகள் மறைவதோடு, முகத்தின் பொலிவும் அதிகரிக்கும். சரி, இப்போது முகத்தில் உள்ள மேடு பள்ளங்களை மறைய வைக்கும் அந்த ஃபேஸ் மாஸ்க்குகள் என்னவென்று பார்ப்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வெள்ளரிக்காய்

வெள்ளரிக்காய்

வெள்ளரிக்காய் முகத்தில் இருக்கும் குழிகளை மறைக்க உதவும். அதற்கு அதன் குளிர்ச்சித் தன்மை தான் காரணம். எனவே வெள்ளரிக்காயை துருவி, அதில் சிறிது ரோஸ்வாட்டர் சேர்த்து கலந்து, அதனை முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், முகத்தில் உள்ள மேடு பள்ளங்களை மறைக்கலாம்.

முட்டை வெள்ளைக்கரு

முட்டை வெள்ளைக்கரு

முட்டையின் வெள்ளைக்கருவிற்கு முகத்தில் உள்ள குழிகளை மறைக்கும் சக்தி உள்ளது. அதற்கு முட்டையின் வெள்ளைக்கருவை முகத்தில் தடவி உலர வைத்து, குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இப்படி வாரம் ஒருமுறை செய்து வந்தால், முகத்தில் உள்ள குழிகளை மறைக்கலாம்.

MOST READ: இத படிச்சீங்கன்னா தினமும் வாழைத்தண்டு சாப்பிடணும்னு அடம்பிடிக்க ஆரம்பிச்சிடுவீங்க...

பப்பாளி

பப்பாளி

பப்பாளி சருமத்தின் நிறத்தை அதிகரிக்க மட்டுமின்றி, முகத்தில் உள்ள குழிகளையும் தான் மறைக்கப் பயன்படுகிறது. எனவே நன்கு கனிந்த பப்பாளியை அரைத்து முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, பின் கழுவு வேண்டும்.

தக்காளி

தக்காளி

உண்மையில் முகத்தில் உள்ள குழிகள், சருமத்துளைகள் திறந்து, மீண்டும் மூடாமல் இருப்பதால் ஏற்படும். தக்காளி திறந்துள்ள சருமத்துளைகளை மூட உதவும் எனவே தக்காளியை அரைத்து முகத்தில் தடவி மென்மையாக வட்ட வடிவில் மசாஜ் செய்து, சிறிது நேரம் ஊற வைத்து, பின் கழுவ வேண்டும்.

கடலை மாவு

கடலை மாவு

கடலை மாவில் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, முகத்தில் தடவி சிறிது நேரம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இப்படி தினமும் முகத்திற்கு மாஸ்க் போட்டு வந்தால், முகத்தில் உள்ள பள்ளங்கள் மெதுவாக மறைவதை நன்கு காணலாம்.

பாதாம் பேஸ்ட்

பாதாம் பேஸ்ட்

பாதாமில் வைட்டமின் ஈ ஏராளமாக நிறைந்துள்ளது. இது திறந்துள்ள சருமத் துளைகளை மூட உதவும். அதற்கு சிறிது பாதாமை இரவில் படுக்கும் போது பாலில் ஊற வைத்து, மறுநாள் காலையில் அதனை அரைத்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி உலர வைத்து கழுவ வேண்டும்.

MOST READ: தாய்ப்பால் கொடுப்பதால் ஒரு தாயின் மார்பகம் என்ன ஆகிறது? வாங்க தெரிஞ்சிக்கலாம்

தேன் மற்றும் சர்க்கரை

தேன் மற்றும் சர்க்கரை

தேன் மற்றும் சர்க்கரை கூட சருமத்தில் உள்ள பள்ளங்களை மறைக்க உதவும். அதிலும் தேன் சிறந்த டோனர் மட்டுமின்றி, சருமத்துளைகளை இறுக்கும். அத்தகைய தேனுடன் சர்க்கரையை சேர்த்து கலந்து, முகத்தில் தடவி மென்மையாக ஸ்கரப் செய்து கழுவ வந்தால், சருமத்தில் உள்ள அழுக்குகள் மற்றும் இறந்த செல்கள் நீங்குவதோடு, முகத்தில் உள்ள குழிகளும் மறையும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Effective Remedies You Can Use To Get Rid Of Large Pores

In this article, we at Boldsky are listing out some of the best remedies that you can use to get rid of large open pores. Read on to know more about it.
Desktop Bottom Promotion