குளிர்காலத்தில் வறட்சியான சருமத்தை பொலிவோடு வெளிக்காட்ட உப்பு ஸ்கரப் பண்ணுங்க...

By:
Subscribe to Boldsky

குளிர்காலத்தில் சருமத்தின் வறட்சி அதிகம் இருக்கும். இத்தகைய வறட்சியினால் சருமமானது மென்மையிழந்து, பொலிவிழந்து, சொரசொரவென்று இருக்கும். இதனால் நம் சருமத்தைப் பார்க்க நமக்கே அருவெறுப்பாகவும், அசிங்கமாகவும் இருக்கும். ஆனால் இதனை சரிசெய்ய அருமையான வழி உள்ளது. அது என்னவெனில் வீட்டில் இருக்கும் உப்பு கொண்டு ஸ்கரப் செய்வது தான்.

உப்பு கொண்டு ஸ்கரப் செய்வதால், சருமத்தில் உள்ள இறந்த செல்கள், சொரசொரப்பாக இருக்கும் சருமம் போன்றவை நீங்குவதோடு, சருமம் மென்மையாக வறட்சியடையாமல் பட்டுப்போன்று இருக்கும். மேலும் இந்த முறையை வீட்டிலேயே எளிமையாக செய்யலாம்.

உப்பைக் கொண்டு பலவாறு ஸ்கரப் செய்யலாம். இங்கு அதில் சில உப்பு ஸ்கரப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றைப் படித்து பார்த்து வீட்டில் முயற்சி செய்து வறட்சி இல்லாத மென்மையான சருமத்தைப் பெறுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

ரோஸ்மேரி-ஆயில் ஸ்கரப்

1 1/2 கப் உப்பை எடுத்துக் கொண்டு, அதில் 1/4 கப் தேங்காய் எண்ணெய் மற்றும் 6 துளிகள் ரோஸ்மேரி எண்ணெய் சேர்த்து கலந்து, அதனை காற்றுப்புகாத டப்பாவில் போட்டு பராமரித்து, அவ்வப்போது சருமத்தை ஸ்கரப் செய்து வந்தால், சருமத்தில் உள்ள சொரசொரப்பு நீங்கி, சருமம் பட்டுப் போன்று பொலிவாக காணப்படும்.

ஹேர்பல் ஸ்கரப்

1 1/2 கப் எப்சப் உப்பு, 3/4 கப் பேக்கிங் சோடா மற்றும் 3/4 கப் மூலிகைப் பொடிகளை சேர்த்து கலந்து, காற்றுப் புகாத டப்பாவில் போட்டுக் கொள்ள வேண்டும். பின் ஸ்கரப் செய்யும் போது, அதில் சிறிது எடுத்துக் கொண்டு, அத்துடன் லாவெண்டர் எண்ணெய் அல்லது சந்தன எண்ணெய் சேர்த்து கலந்து, சருமத்தில் தடவி ஸ்கரப் செய்து, கழுவ வேண்டும். லாவெண்டர் எண்ணெய் பயன்படுத்துவதால், சருமம் ரிலாஸ் ஆகும்.

பாதாம் எண்ணெய் ஸ்கரப்

1 கப் கல் உப்பில், 1/2 கப் பாதாம் எண்ணெய் மற்றும் 15 துணிகள் லெமன் கிராஸ் எண்ணெய் சேர்த்து கலந்து, அதனைக் கொண்டு தினமும் ஸ்கரப் செய்ய வேண்டும். இதனால் லெமன் கிராஸ் எண்ணெயால் சருமம் புத்துணர்ச்சியுடன் இருக்கும். பாதாம் எண்ணெயில் வைட்டமின் ஈ இருப்பதால், அது சருமத்தை மென்மையாக வைத்துக் கொள்ளும்.

கற்றாழை ஸ்கரப்

2 கப் கல் உப்பு, 1 1/3 கப் கற்றாழை ஜெல், 2 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து கலந்து, அதனைக் கொண்டு சருமத்தை ஸ்கரப் செய்தால், சருமத்தில் உள்ள இறந்த செல்கள் மற்றும் அழுக்குகள் நீங்கி, சருமம் அழகாக இருக்கும்.

ஆலிவ் ஆயில் ஸ்கரப்

கல் உப்பு மற்றும் ஆலிவ் ஆயிலை சரிசமமாக எடுத்து, அதனை சிறிது நேரம் ஊற வைத்து, பின் அவற்றைக் கொண்டு சருமத்தை ஸ்கரப் செய்து, வெதுவெதுப்பான நீரில் குளிக்க வேண்டும். இதனை குளிர்காலத்தில் செய்வது மிகவும் நல்லது.

புதினா எண்ணெய் ஸ்கரப்

சூடான 1 கப் ஆலிவ் ஆயிலில், 1/4 கப் நீர்ம கிளிசரின் சோப்பு சேர்த்து, பின் 2 கப் உப்பு மற்றும் 5 துளிகள் ரோஸ்மேரி எண்ணெய் மற்றும் புதினா எண்ணெய் சேர்த்து கலந்து ஸ்கரப் செய்ய வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

6 Salt body scrub recipes for winter

Here are a few simple homemade salt body scrub recipes just for you.
Please Wait while comments are loading...
Subscribe Newsletter