For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்களுக்கு வெள்ளையாக ஆசையா? அப்ப இந்த ஃபேஸ் பேக்குகளை ட்ரை பண்ணுங்க...

By Maha
|

வெள்ளையாக இருக்க வேண்டுமென்ற ஆசை ஒவ்வொருவருக்குள்ளும் நிச்சயம் இருக்கும். அப்படி வெள்ளையாகும் ஆசை இருக்கும் ஒவ்வொருவருமே தங்கள் சருமத்தை வெள்ளையாக்குவதற்கு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருவார்கள். அதில் பெரும்பாலானோர் செய்வது கடைகளில் விற்கப்படும் க்ரீம், ஃபேஸ் பேக், ஃபேஸ் மாஸ்க், ஸ்கரப் போன்றவற்றை வாங்கி சருமத்தில் பயன்படுத்துவதோடு, அழகு நிலையங்களுக்குச் சென்றும் பல பராமரிப்புக்களை மேற்கொள்வார்கள்.

ஆனால் இப்படியெல்லாம் செய்வதால் சருமத்தின் நிறம் தற்காலிகமாகத் தான் அதிகரித்து வெளிப்படுமே தவிர, நிரந்தரமாக இருக்காது. மேலும் சருமத்தின் ஆரோக்கியமும் பாழாகி இருக்கும். ஆகவே சருமத்தின் நிறம் இயற்கையாக அதிகரிக்க தமிழ் போல்ட் ஸ்கை ஒருசில நேச்சுரல் ஃபேஸ் பேக்குகளைக் கொடுத்துள்ளது. அதைப் படித்து முயற்சித்துப் பாருங்களேன்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பப்பாளி

பப்பாளி

சருமத்தின் நிறத்தை அதிகரிக்க பப்பாளி பெரிதும் உதவியாக இருக்கும். அதனால் தான் பல க்ரீம்களில் பப்பாளி சேர்க்கப்பட்டுள்ளது. எனவே அந்த பப்பாளியை அரைத்து அதில் தயிர் சேர்த்து முகத்திற்கு மாஸ்க் போட்டால் நல்ல பலன் கிடைக்கும்.

எலுமிச்சை

எலுமிச்சை

எலுமிச்சையில் ப்ளீச்சிங் தன்மை இருப்பதால், அந்த எலுமிச்சையின் சாற்றினை கடலை மாவு ஃபேஸ் பேக்குடன் சேர்த்து மாஸ்க் போடுங்கள். இது சருமத்தின் நிறத்தை அதிகரிக்கும்.

உருளைக்கிழங்கு

உருளைக்கிழங்கு

எலுமிச்சைக்கு அடுத்தபடியாக சருமத்தை வெள்ளையாக்க உதவும் பொருள் தான் உருளைக்கிழங்கு. இந்த உருளைக்கிழங்கைக் கொண்டு தினமும் முகத்தை துடைத்து எடுத்தாலோ அல்லுது அதனை அரைத்து பேஸ்ட் செய்து, முகத்திற்கு மாஸ்க் போட்டாலோ, சருமத்தின் நிறம் அதிகரிக்கும்.

தக்காளி

தக்காளி

தக்காளியைக் கொண்டு தினமும் சருமத்திற்கு மாஸ்க் போட்டால், சருமத்தின் நிறம் அதிகரிப்பதை நீங்கள் காணலாம். அதற்கு தக்காளி அரைத்து அதனை முகத்தில் தடவி சிறிது நேரம் ஊற வைத்து கழுவ வேண்டும்.

பாதாம்

பாதாம்

பாதாமில் வைட்டமின் ஈ வளமாக உள்ளது. இது சருமத்தின் அழகை அதிகரித்து வெளிக்காட்ட தேவையான முக்கியமான வைட்டமின் ஆகும். அதற்கு பாதாமை அரைத்து பேஸ்ட் செய்து, அதனை முகத்தில் தடவி மசாஜ் செய்து வரை வேண்டும்.

கடலை மாவு

கடலை மாவு

கடலை மாவும் சருமத்தின் நிறத்தை அதிகரிக்க உதவும் பொருட்களில் ஒன்றாகும். அதிலும் கடலை மாவில் சிறிது மஞ்சள் தூள் மற்றும் பால் சேர்த்து பேஸ்ட் செய்து, வாரம் 2-3 முறை முகத்திற்கு மாஸ்க் போட்டால் நல்ல மாற்றத்தை விரைவில் காணலாம்.

புதினா

புதினா

புதினா சருமத்தை குளிர்ச்சி அடையச் செய்யும். மேலும் இது சரும துளைகளை திறந்து அதனுள் இருக்கும் அழுக்குகளை முற்றிலும் வெளியேற்றும் மற்றும் சருமத்தின் நிறத்தையும் அதிகரிக்கும். அதற்கு புதினா சாற்றினைக் கொண்டு அவ்வப்போது முகத்தை துடைத்து எடுங்கள்.

வாழைப்பழம்

வாழைப்பழம்

வாழைப்பழத்தை வேக வைத்து, தோலுரித்து பழத்தை மசித்து, அதில் சிறிது மில்க் க்ரீம் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும்.

முட்டை மாஸ்க்

முட்டை மாஸ்க்

முட்டையில் புரோட்டீன் அதிகம் உள்ளது. எனவே முட்டையின் வெள்ளைக்கருவை முகத்தில் தடவி மாஸ்க் போட்டல் சருமத்தின் நிறம் அதிகரிப்பதை நன்கு காணலாம்.

கேரட்

கேரட்

கேரட்டை அரைத்து பேஸ்ட் செய்து, அதில் சிறிது தயிர் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி மாஸ்க் போட்டு வந்தாலும், சரும நிறம் அதிகரிக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

10 Fair Face Packs For Indian Skin

Do you want to become fair overnight but your oily face doesn't allow it? If yes, then we have a handful of fair face packs for oily skin you can now try. 
Story first published: Friday, February 13, 2015, 19:06 [IST]
Desktop Bottom Promotion