For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சரும கோளாறுகளுக்கு தீர்வளிக்கும் சிறந்த உணவுகள்!

|

சரும கோளாறுகள் மட்டும் தான் வகை வகையாக வரும். வறட்சியான சருமம், எண்ணெய் பசை சருமம் மற்றும் கடினமான சருமம் என ஒவ்வொரு வகையான சருமத்திற்கும் ஒவ்வொரு வகையாக சரும கோளாறுகள், பிரச்சனைகள் வரும். இதற்கு ஒரே மருந்துகளை பயன்படுத்த முடியாது. ஏனெனில், ஒரே வகையான மருந்து எல்லா வகை சருமத்திற்கும் ஒத்துப்போகாது. இதுதான் பலருக்கு நீண்ட காலமாக சரும பிரச்சனை சரியாகாமல் போவதற்கான காரணம். பொதுவாக சிலர் ஏதாவது ஒரு தீர்வு கூறுகிறேன் என சொல்லிவிட்டு போய்விடுவார்கள். ஆனால், அது அவர்களின் சருமத்திற்கு ஒத்துப்போகாத மருந்தாக இருக்கும். அதனால், வேறு எதவாது சரும பிரச்சனைகள் ஏற்படும்.

சரும வறட்சியைப் போக்க பாலை எப்படியெல்லாம் யூஸ் பண்ணலாம்..?

எனவே, முடிந்த வரை சரும பிரச்சனைகளுக்கு இரசாயன மருந்துகள் மூலம் தீர்வு தேடுவதை தவிர்த்து இயற்கை முறையை பின்பற்ற பழகுங்கள். இயற்கை முறையில் பெரிய அளவிலான ஒவ்வாமைகள் ஏற்படாது. மற்றும் உடலுக்கும் நன்மை விளைவிக்குமே தவிர பக்க விளைவுகளை தராது. இங்கு நமது அன்றாட உணவுகளில் ஒரு சில உணவுகளை சரியான அளவில் உட்கொள்வதன் மூலமாக சரும பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பது எப்படி என தெரிந்துக் கொள்ள போகிறோம்...

சரும வறட்சியைப் போக்க பாலை எப்படியெல்லாம் யூஸ் பண்ணலாம்..?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ப்ளூபெர்ரி

ப்ளூபெர்ரி

ப்ளூபெர்ரியில் அதிக அளவில் வைட்டமின் சி'யும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்களும் இருக்கின்றன. ப்ளூபெர்ரி சுவை தருவது மட்டுமல்லாது, சருமத்தில் இருக்கும் வடுக்களை போக்குவதற்கும், நிறத்தை அதிகரிப்பதற்கும் உதவுகிறது. இதிலிருக்கும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் சருமத்தில் இருக்கும் இறந்த செல்களை அகற்ற உதவுகிறது.

கொழுப்புச்சத்துள்ள மீன்

கொழுப்புச்சத்துள்ள மீன்

மீன்களில் உள்ள ஒமேகா 3 கொழுப்பு அமிலத்தின் சத்து சருமத்தில் உள்ள எண்ணெய் அளவை கட்டுப்படுத்த உதவுகிறது. மற்றும் இது சருமத்தில் உள்ள நுண்துளைகளை அடைக்கவும் உதவுகிறது. ஒமேகா 3 அமிலம் உங்களது முகம் பொலிவடையவும் உதவும்.

தானியங்கள்

தானியங்கள்

தானிய வகைகளை உட்கொள்வதன் மூலமாக மறைமுகமாக சரும பிரச்சனைகளுக்கு தீர்வு காண இயலும். அஜீரண கோளாறுகளின் காரணமாக சிலருக்கு சரும பிரச்சனைகள் ஏற்பட காரணங்கள் இருக்கின்றன. அவர்கள் தானிய வகை உணவுகளை உட்கொள்வதன் மூலம் அஜீரண கோளாறுகள் ஏற்படாது. எனவே இதன் மூலமாக சரும பிரச்சனைகள் வராது தடுக்கலாம்.

தண்ணீர்

தண்ணீர்

அதிக அளவில் நீர் பருகுவதனால், சருமத்தில் வறட்சி ஏற்படாது மற்றும் முகம் பொலிவடையும்.

கிரீன் டீ

கிரீன் டீ

கிரீன் டீயில் இருக்கும் ஆன்டி-ஆக்ஸிடன்ட், சரும செல்களை புதுப்பிக்க உதவுகிறது. இதனால், சரும கோளாறுகள் ஏற்படுவது குறையும். அதனால், சருமம் புத்துயிர் பெற விரும்புவோர், தினமும் கிரீன் டீ பருகுங்கள்.

தயிர்

தயிர்

பெரும்பாலும் செரிமான கோளாறுகளினாலும் சரும பிரச்சனைகள் ஏற்படுகின்றன. தயிரில் இருக்கும் ஆரோக்கிய பாக்டீரியாக்கள் செரிமான கோளாறுகளை சரி செய்கிறது. எனவே, இதன் மூலம் சரும பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வு காண இயலும். மற்றும் தயிரை முகத்தில் அப்பளை செய்து முகம் கழுவி வந்தால், சருமம் புத்துணர்ச்சி அடையும்.

சர்க்கரைவள்ளி கிழங்கு

சர்க்கரைவள்ளி கிழங்கு

சருமத்தின் ஆரோக்கியத்திற்கு மிகவும் தேவையான சத்து வைட்டமின் ஏ. சர்க்கரைவள்ளி கிழங்கில் இது அதிகமாக இருக்கிறது. வைட்டமின் ஏ சத்தின் மூலமாக முகத்தில் ஏற்படும் சுருக்கங்களை குறைக்க முடியும்.

ப்ராக்கோலி

ப்ராக்கோலி

ப்ராக்கோலியில் வைட்டமின் ஏ, சி மற்றும் ஈ இருக்கின்றன. இதில் வைட்டமின் ஈ சருமத்தின் முதிர்ச்சி தன்மையை குறைக்க உதவுகிறது. இதனால் நீங்கள் இளமையாக காட்சியளிக்க ப்ராக்கோலி உதவுகிறது.

வெண்ணெய்பழம் (அவகேடோ)

வெண்ணெய்பழம் (அவகேடோ)

வெண்ணெய்பழம் என கூறப்படும் அவகேடோவில் வைட்டமின் ஏ மற்றும் சி'யின் சத்துகள் இருக்கின்றன. இது சருமத்திற்கு நன்மை விளைவிக்கும் சத்துகள் ஆகும். மற்றும் இதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் சருமத்தில் இருக்கும் நச்சுக்கிருமிகளை அழிக்க உதவுகிறது.

வைட்டமின் டி

வைட்டமின் டி

வைட்டமின் டி, நம் சருமத்திற்கு சூரிய ஒளியில் இருந்து கிடைக்கும் நன்மைகளை தரவல்லது. வேறெந்த வைட்டமின் சத்துகளிலும் இந்த நற்குணம் இல்லை. எனவே வைட்டமின் டி சத்துகள் நிறைந்த உணவுகளை நீங்கள் உட்கொள்வது உங்களது சருமத்திற்கு நல்ல பயன் தரும். பால் மற்றும் முட்டையில் அதிக அளவில் வைட்டமின் டி சத்து இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

10 Best Foods To Treat Skin Problems

do you know about the 10 best foods to treat skin problems, read here.
Desktop Bottom Promotion