For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சரும சுருக்கத்தைப் போக்கும் கற்றாழை!!!

By Maha
|

வயது அதிகரித்தால், சருமத்தில் சுருக்கமும் அதிகரிப்பது இயற்கையான ஒன்று தான். ஆனால் இன்றைய காலத்தில் இளம் தலைமுறையினர் பலருக்கு விரைவிலேயே சருமத்தில் சுருக்கங்களானது ஏற்படுகிறது. இதனால் இளமையிலேயே முதுமையான தோற்றத்தில் காட்சியளிக்கிறார்கள். மேலம் இதற்காக பல்வேறு க்ரீம்களை பயன்படுத்தி வருகிறார்கள்.

இருப்பினும் அவற்றினால் எந்த ஒரு பலனும் கிடைப்பதில்லை, மாறாக சருமத்தின் இயற்கை அழகு தான் பாதிக்கப்படுகிறது. எனவே சருமத்தில் சுருக்கம் ஏற்பட்டால், அதனைப் போக்க இயற்கை நமக்கு தந்த ஒரு அற்புதமான ஒரு பொருள் தான் கற்றாழை. கற்றாழையினால் சருமத்தில் உள்ள சுருக்கங்கள் மட்டுமின்றி, பல்வேறு பிரச்சனைகளும் நீங்கும். இங்கு கற்றாழையை சருமத்திற்கு பயன்படுத்தினால் கிடைக்கும் நன்மைகளைப் பார்ப்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மென்மையான சருமம்

மென்மையான சருமம்

கற்றாழையின் ஜெல்லை சருமத்திற்கு தினமும் தடவி ஊற வைத்து கழுவி வந்தால், சருமத்திற்கு தேவையான வைட்டமின்கள் மற்றும் கனிமச் சத்துக்கள் கிடைத்து, சருமத்தின் ஆரோக்கியம் பாதுகாக்கப்பட்டு, சருமம் மென்மையாக இருக்கும்.

பொலிவான சருமம்

பொலிவான சருமம்

கற்றாழை ஜெல்லை சருமத்திற்கு பயன்படுத்தி வந்தால், அவை சருமத் துளைகளில் தங்கியுள்ள நச்சுக்கள் மற்றும் இறந்த செல்களை முற்றிலும் வெளியேற்றி, சருமத்தை பொலிவோடு வைத்துக் கொள்ளும்.

சிறந்த மாய்ஸ்சுரைசர்

சிறந்த மாய்ஸ்சுரைசர்

கற்றாழை ஜெல்லை சிறந்த மாய்ஸ்சுரைசர் என்றும் சொல்லலாம். ஏனெனில் இதனை சருமத்திற்கு அன்றாடம் பயன்படுத்தி வந்தால், சருமம் வறட்சி அடைவதைத் தடுக்கலாம். இதனால் சருமம் அழகாக மின்னும்.

சுருக்கங்கள்

சுருக்கங்கள்

தினமும் இரவில் படுக்கும் போது, கற்றாழை ஜெல்லை முகம் மற்றும் கண்களைச் சுற்றி தடவி வந்தால், சருமத்திற்கு தேவையான வைட்டமின்களான ஏ, ஈ மற்றும் சி போன்றவை கிடைத்து, சருமம் சுருக்கமடைவதைத் தடுக்கலாம். முக்கியமாக கண்களைச் சுற்றி தடவும் போது, கற்றாழையின் ஜெல் கண்களில் படாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள். ஏனெனில் இவை கண்களுக்கு பாதிப்பை ஏற்படுத்திவிடும்.

முதுமையைத் தடுக்கும்

முதுமையைத் தடுக்கும்

1:1 என்ற விகிதத்தில் கற்றாழை ஜெல் மற்றும் நீரில் கலந்த போராக்ஸ் நீரை எடுத்துக் கொண்டு, நன்கு கொதிக்க விட்டு, பின் குளிர வைத்து, அத்துடன் 1 கப் தேங்காய் எண்ணெய் சேர்த்து நன்கு கலந்து, பின் அந்த கலவையை சருமத்திற்கு பயன்படுத்தி வந்தால், அவை சுருக்கத்தையும், விரைவில் முதுமை தோற்றம் வருவதையும் தடுக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Treat Wrinkled Skin With Aloe Vera

While there are ways to ensure that your skin does not age, you can always reduce these signs especially wrinkles, using aloe vera.
Story first published: Tuesday, July 1, 2014, 17:54 [IST]
Desktop Bottom Promotion