For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சருமத்தில் உள்ள தழும்புகளை மறைக்க சில சூப்பர் டிப்ஸ்...

By Maha
|

சருமத்தில் உள்ள தழும்புகள் உங்கள் அழகைக் கெடுக்கிறதா? குறிப்பாக இத்தகைய தழும்புகளானது பெண்களுக்கு தான் முகத்தில் அதிகம் இருக்க வாய்ப்புள்ளது. ஏனெனில் சமையல் செய்யும் போது எண்ணெய் முகத்தில் பட்டாலோ அல்லது குக்கரை தூக்கும் போது கைகளை சுட்டுக் கொண்டாலோ, முதலில் அவை காயமாகி, பின் அவை தழும்புகளாக சருமத்தில் தங்கிவிடும்.

மேலும் ஆண்களுக்கு காரை துடைக்கும் போது என்ஜினில் கையை சுட்டுக் கொண்டு தழும்புகளை ஏற்பட வாய்ப்புள்ளது. சரி, அவற்றையெல்லாம் விடுங்கள், குறிப்பாக பருக்களால் பலருக்கு முகத்தில் கருமையான தழும்புகள் படிந்து, முகத்தின் அழகே பாழாகிக் கொண்டிருக்கிறது.

இதுப்போன்று வேறு: கழுத்தில் உள்ள கருமையைப் போக்குவதற்கு உதவும் பொருட்கள்!

இத்தகைய தழும்புகளானது நிரந்தரம் அல்ல. அவற்றை ஒருசில பொருட்கள் மற்றும் பராமரிப்புக்களின் மூலம் போக்கிவிடலாம். அதிலும் வீட்டில் உள்ள சில பொருட்களைக் கொண்டே எளிமையாக நீக்கிவிடலாம். இங்கு அந்த தழும்புகளை போக்கும் சில சிகிச்சைகள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றைப் பின்பற்றி தழும்புகளைப் போக்கி, அழகுடன் திகழுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கற்றாழை

கற்றாழை

பொதுவாக கற்றாழை ஜெல் அனைத்து வகையான சரும பிரச்சனைகளுக்கும் நல்ல தீர்வைக் கொடுக்கும். அதிலும் தினமும் இதனைக் கொண்டு சருமத்தை மசாஜ் செய்து வந்தால், சருமத்தில் உள்ள தழும்புகள் மறைவதோடு, மற்ற பிரச்சனைகளும் நீங்கி, சருமம் பொலிவோடு இருக்கும்.

பேக்கிங் பவுடர்

பேக்கிங் பவுடர்

பேக்கிங் பவுடரை நீரில் கலந்து, அதனைக் கொண்டு சருமத்தை வட்ட வடிவில் மசாஜ் செய்து, குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இந்த முறையை தினமும் செய்து வந்தால், விரைவில் தழும்புகளானது மறைந்துவிடும்.

தேன்

தேன்

நிச்சயம் அனைத்து வீடுகளிலும் தேன் இருக்கும். அத்தகைய தேன் உடலுக்கு மட்டும் நன்மையைக் கொடுப்பதுடன், சருமத்திற்கும் நன்மையை வழங்க வல்லது. அதற்கு அதில் உள்ள ஆன்டி-பாக்டீரியல் தன்மை தான் காரணம். எனவே தினமும் தேன் கொண்டு சருமத்தை மசாஜ் செய்து வாருங்கள்.

மஞ்சள்

மஞ்சள்

மஞ்சள் தூளை நீரில் கலந்து, அதனை சருமத்தில் தினமும் தடவி ஊற வந்தால், அது சருமத்தில் உள்ள தழும்புகளை போக்குவதுடன், மற்ற சரும பிரச்சனைகளையும் போக்கிவிடும்.

வெந்தயம்

வெந்தயம்

தழும்புகளைப் போக்குவதற்கு உள்ள சிறந்த பொருட்களுள் ஒன்று தான் வெந்தயம். அதற்கு வெந்தயத்தை நீரில் இரவு முழுவதும் ஊற வைத்து, காலையில் எழுந்து அதனை அரைத்து முகத்திற்கு தடவி, உலர வைத்து, குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இன்னும் நல்ல பலன் கிடைக்க வேண்டுமானால், வெந்தய பேஸ்ட்டை இரவில் படுக்கும் போது முகத்தில் தடவி, இரவு முழுவதும் ஊற வையுங்கள்.

பாதாம் எண்ணெய்

பாதாம் எண்ணெய்

பாதாம் எண்ணெய் கொண்டு தினமும் இரண்டு முறை மசாஜ் செய்து வந்தால், சீக்கிரம் தழும்புகளானது மறையும்.

எலுமிச்சை மற்றும் தக்காளி ஜூஸ்

எலுமிச்சை மற்றும் தக்காளி ஜூஸ்

அனைவருக்குமே எலுமிச்சை தழும்புகளை மறைக்க உதவும் பொருட்களில் ஒன்று என்பது தெரியும். ஆனால் அதனை தக்காளி ஜூஸ் உடன் சேர்த்து முகத்தில் தடவ ஊற வைத்து, குளிர்ச்சியான நீரில் கழுவினால், அவை இரண்டிலும் உள்ள ப்ளீச்சிங் தன்மையினால் அது தழும்புகளை மறைத்துவிடும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Top 7 Ways To Lighten Scars

There are some remedies that you can apply to make lighten the scars. Here are a few remedies to lighten scars on your skin.
Desktop Bottom Promotion