For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பெண்களே! முகத்தில் மீசை வர ஆரம்பிக்கிறதா? அதை நீக்க இதோ சில டிப்ஸ்....

By Maha
|

பெண்கள் என்றாலே அழகான கண்கள், ரோஜாப்பூ போன்ற இதழ்கள், மென்மையான சருமம் என்று தான் சொல்வார்கள். ஆனால் அத்தகைய மென்மையான சருமத்தில் பெண்கள் சந்திக்கும் ஒரு பிரச்சனை தான் முடி வளர்வது. அதிலும் சில பெண்களுக்கு முகத்தில் ஆண்களைப் போல் மீசை, வளர ஆரம்பிக்கும். இப்படி வளர்ந்தால், அது அவர்களின் அழகைக் கெடுப்பதுடன், மற்றவர்கள் முன்பு தைரியமாக பேச முடியாதபடி செய்துவிடும்.

இப்படி முகத்தில் வளரும் மீசை போன்று வரும் முடிகளை நீக்க வாக்ஸிங், த்ரெட்டிங் மற்றும் ப்ளக்கிங் போன்ற ஹேர் ரிமூவல் முறைகள் இருந்தாலும், இயற்கை முறைக்கு இணையாக வர முடியாது. மேலும் வாக்ஸிங், த்தெட்டிங் போன்றவை தற்காலிகமாக முடிகளை நீக்குமே தவிர, நிரந்தரமாக நீக்க வேண்டுமானால் இயற்கை முறைகளே சிறந்தது.

இங்கு அப்படி முகத்தில் வளரும் தேவையற்ற முடிகளை நீக்குவதோடு, அதன் வளர்ச்சியைத் தடுக்கும் சில எளிய வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதைப் படித்து தினமும் முயற்சித்துப் பாருங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
எலுமிச்சை மற்றும் சர்க்கரை

எலுமிச்சை மற்றும் சர்க்கரை

30 கிராம் சர்க்கரையை எலுமிச்சை சாறு சேர்த்து, சிறிது தண்ணீர் ஊற்றி கலந்து, முகத்தில் முடி வளரும் இடத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும். இந்த முறையை வாரம் ஒரு முறை தொடர்ந்து செய்து வந்தால், முடியின் வளர்ச்சியானது தடைபடும்.

கடலை மாவு, தயிர், மஞ்சள் தூள்

கடலை மாவு, தயிர், மஞ்சள் தூள்

இது ஒரு பாரம்பரிய முறை என்றும் சொல்லலாம். ஏனெனில் இந்த முறையை அக்காலத்தில் இருந்து பெண்கள் பயன்படுத்தி வருகின்றனர். அது என்ன முறையெனில், கடலை மாவு, தயிர் மற்றும் மஞ்சள் தூள் ஆகியவற்றை ஒன்றாக கலந்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி நன்கு உலர வைத்து பின் கழுவ வேண்டும். இதனால் முகத்தில் வளரும் முடியின் வளர்ச்சி படிப்படியாக குறையும்.

பப்பாளி மற்றும் மஞ்சள்

பப்பாளி மற்றும் மஞ்சள்

பப்பாளி மற்றும் மஞ்சள் தூளை ஒன்றாக கலந்து, அதனை முகத்தில் முடி வளரும் இடத்தில் தடவி 15 நிமிடம் மசாஜ் செய்து வர வேண்டும். இதன் மூலமும் நல்ல பலன் கிடைக்கும்.

உருளைக்கிழங்கு

உருளைக்கிழங்கு

உருளைக்கிழங்கு ஒரு சிறப்பான ப்ளீச்சிங் ஏஜெண்ட். இதனை துவரம் பருப்பு பொடியுடன் சேர்த்து கலந்து முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து பின் கழுவினால், நாளடைவில் முகத்தில் உள்ள முடியின் நிறமானது மங்க ஆரம்பிக்கும்.

வாழைப்பழம் மற்றும் ஓட்ஸ்

வாழைப்பழம் மற்றும் ஓட்ஸ்

ஓட்ஸை பொடி செய்து, அத்துடன் வாழைப்பழத்தை மசித்து சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இந்த முறையை வாரம் இரண்டு முறை செய்ய வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Tips To Reduce Facial Hair Growth

Even though it is normal for women to sport some amount of facial fuzz, many find it annoying. Here are some tips to help you reduce facial hair...
Desktop Bottom Promotion