For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நீச்சல் குளத்தினால் சருமத்திற்கு ஏற்படும் பிரச்சனைகள்!!!

By Ashok CR
|

இந்த உலகத்தில் உள்ள நிறைய மக்கள் வெப்ப பகுதியின் உஷ்ணத்தில் இருந்தும் உடலை தளர்த்திக் கொள்ள எப்பொழுதும் நீச்சலுக்கு செல்ல விரும்புகின்றனர். என்றாலும், நீச்சல் தனக்குரிய தனி நன்மை பங்குகளை கொண்டுள்ளது, உங்களுக்கு இதை பற்றிக் கண்டிப்பாக தெரியும், இது சில தோல் பிரச்சனைகளையும் இதனுடன் சேர்த்துக் கொண்டுள்ளது.

தண்ணீரை சுத்தம் செய்ய உபயோகிக்கும் ஒரு முதன்மை அம்சம் என்னவென்றால் குளோரின். அறியப்பட்ட உண்மை என்னவென்றால் குளோரின் தண்ணீரை சுத்தம் செய்ய உபயோகிக்கும் கிருமிநாசினிகளில் மிகவும் முக்கியமானது. இது பல நாட்களாக உபயோகிக்கப்படும் ஒன்று.

இதுப்போன்று வேறு சில: சருமத்தின் அழகை அதிகரிக்க.. யோகா குரு பாபா ராம்தேவ் கொடுக்கும் சில அழகு குறிப்புகள்!!!

நமது தோல் மிகவும் உணர்ச்சி மிக்கது மற்றும் இது தண்ணீரை உறிஞ்சும் திறமை கொண்டது. இதனால் தான், தண்ணீரில் ஏதாவது கலந்து இருந்தால் அதுவும் தோலால் உறிஞ்சப்பட்டு, சில தோல் பிரச்சனைகளுக்கு வழிவகுக்கிறது.

அதிகபட்ச தோல் பிரச்சனை வெளிப்பாடு என்பது நீச்சலின் மூலம் ஏற்படுகிறது மற்றும் இதுவே அனைத்து பிரச்சனைகளையும் நல்ல விதமாக கண்டறிந்து, அதை திறம்பட மாற்றி அமைக்க காரணமாக அமைகிறது.

Skin Problems From Swimming

நீச்சல் தொடர்பாக உலவும் சில தோல் பிரச்சனைகளை குறைத்து தோல் சிதைவுகளையும் குறைத்து மற்றும் தோல் ஆரோக்கியத்தை அதிகரிக்க உதவுகிறது.

நீச்சலால் ஏற்படும் தோல் பிரச்சனைகளுக்கான காரணங்கள்:

தோல் நீர்போக்கு

தொடர்ந்து செய்யப்படும் நீச்சலால், உங்கள் தோல் அதிக உனர்ச்சிப்பூர்வமாகவும் மற்றும் இது தோல் பிரச்சனைகளை அதிகரிக்கும் திறமையையும் கொண்டுள்ளது. அத்தகைய ஒரு நிலை தோல் நீர்போக்கை ஏற்படுத்தி, இயற்கையான ph சமநிலையில் தோல் இழப்பையும் ஏற்படுத்தி, வறட்சியான மற்றும் சீரற்ற தோல் ஏற்பட காரணமாக அமைகிறது.

தோல் வெடிப்பு

நீச்சலினால் ஏற்படும் தோல் பிரச்சனைகளில் ஒன்று தோல் வெடிப்பை அதிகரிப்பது. வழக்கமாக செய்யும் நீச்சல் அரிப்பு மற்றும் சிவப்பு தடிப்புகள் வரவும், இயற்கையான தோல் இழப்புகள் ஏற்படவும் காரணமாக அமைகிறது. இயற்கையான சமநிலை உள்ள திரவங்கள் நல்ல ஆரோக்கியமான மற்றும் பிரகாசமான தோல் அமைய பொறுப்பு கொண்டுள்ளது. இது மேலும் தூண்டுதல்களையும், வலிக்கும் கொப்புளங்களையும் ஏற்படுத்துகிறது.

முன்கூட்டியே தோன்றும் வயதான அறிகுறிகள்

நீங்கள் இளம் வயதானவர்களாக இருந்து முன்கூட்டியே தோன்றும் வயதான அறிகுறிகளை தவிர்க்க விரும்பினால், பிறகு நீங்கள் தேவையான முன் ஏற்பாடுகளை நீச்சலின் போது எடுக்க வேண்டும். வழக்கமான நீச்சலின் மூலம், நீங்கள் வயது முதிர்ச்சிக்குரிய தோல் பிரச்சனைகளை வளர்கின்றனர். தோல் திரவத்தினால் தெளிவான கோடு, சோர்வு போன்றவை ஏற்படுத்துகிறது.

அதிகரித்து வரும் சூரிய ஒளியின் தாக்குதல்

தொடர்ந்து அனுபவிக்கும் நீச்சலினால், தோல் பிரச்சனைகளை அதிகரித்து, சூரிய ஒளி தாக்குதலை ஏற்படுத்துகிறது. நீங்கள் நீந்தும் பொழுது, உங்கள் உடல் வறட்சியை எதிர்த்து உங்கள் தோல் நிலை சண்டை போட்டு, நாளுக்கு நாள் வெடிப்புகளை குறைத்து விடுகிறது. ஆனால் இது உணர்ச்சிபூர்வமான சூரிய ஒளி தாக்குதலை ஏற்படுத்துகிறது. எனவே அதிக வெளிப்பாடான சூரிய ஒளி உடலில் வேனிற்கட்டியை அதிகரிக்கிறது.

சூடான சவர் குளியலை கட்டுப்படுத்துதல்

நீச்சலுக்கு பின்னால் ஏற்படும் சூடான சவர் குளியல் தோலுக்கு ஆரோக்கியமானது அல்ல, இது நீச்சலால் தூண்டப்படும் தோல் பிரச்னையை ஏற்படுத்துகிறது. சூடான நீர் மற்றும் நீராவி குளோரினை தோலில் ஆழமாக ஊடுருவ உதவுகிறது, இது வறண்ட தோல் போன்ற மோசமான தோல் பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது.

அதிகரித்த நச்சுப் பொருட்கள்

நீங்கள் நீந்தும் ஒவ்வொரு முறையும், நீங்கள் நச்சுப் பொருட்களை உறிஞ்சும் திறமையை உங்கள் உடலுக்கு ஏற்படுத்துகிறீர்கள். நீச்சலால் ஏற்படும் தோல் பிரச்சனைகளுள் இது அதிக ஆபத்தானது. இது உங்கள் தோலை வறட்சியாக உருவாக்கி மற்றும் வெடிப்புற்ற தோலை, காற்றுக்காலத்தில் ஏற்பட வழிவகுக்கிறது.

நீச்சலால் ஏற்படும் தோல் பிரச்சனை பதிப்புகளை புரிந்து கொள்ள வேண்டும் ஏனென்றால் அப்பொழுது தான் இதை திறம்பட சரி செய்ய முடியும். உங்களை நீங்கள் பாதுகாத்து மற்றும் உங்கள் தோலை ஒவ்வொரு முறையும் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். நீங்கள் உங்களை நீச்சலில் ஈடுபடுத்திக் கொண்டு, நீங்கள் உபயோகிக்கும் குளம் குளோரின் இல்லாமல் அல்லது குறைவான குளோரின் தண்ணீர் கொண்டதாகவும் இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். இதனால் மட்டும் தான் நாம் தோல் பிரச்சனைகளில் இருந்து தப்பிக்க முடியும்.

English summary

Skin Problems From Swimming

Swimming skin problems occur because of the chemicals present in the pool. know more skin infections from swimming pools.
Desktop Bottom Promotion