For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வீட்டு சமையலறையில் கிடைக்கும் சில மாய்ஸ்சுரைசர்கள்!!!

By Maha
|

எப்போதுமே இயற்கை வழிகளை மேற்கொண்டால் தான் நல்ல பலன்களைப் பெறுவதுடன், அதன் நன்மைகளானது நிரந்தரமாக இருக்கும். மேலும் இயற்கை வழிகளின் மூலம் எந்த ஒரு பக்க விளைவும் வராது மாறாக இயற்கையாகவே தம்முள் இருக்கும் பிரச்சனைகள் நீங்கிவிடும். அப்படி அனைவருக்கும் ஒரு கட்டத்தில் ஏற்படும் ஒரு பிரச்சனை தான் சரும வறட்சி. இத்தகைய சரும வறட்சியானது குளிர் காலத்தில் மட்டுமின்றி, கோடைக்காலத்திலும் சந்திக்கக்கூடும்.

என்ன ஆச்சரியமாக உள்ளதா? ஆம், கோடையில் உடலில் உள்ள நீர்ச்சத்தின் அளவு குறைவதால், உடல் வறட்சியடைவதுடன், சருமத்தையும் வறட்சி அடையச் செய்கிறது. எனவே அழகை பராமரிக்க அன்றாடம் சருமத்திற்கு மாய்ஸ்சுரைசர்களைப் பயன்படுத்த வேண்டியுள்ளது. பொதுவாக மாய்ஸ்சுரைசர்களை கடைகளில் அதிக பணம் செலவழித்து தான் வாங்கி பயன்படுத்துவோம். அதிலும் அவைகளில் கெமிக்கல் கலந்திருக்கும்.

ஆனால் பணம் செலவழிக்காமல் சருமத்திற்கு மாஸ்சுரைசர் பயன்படுத்த வேண்டுமா? அப்படியானால் சமையலறைக்கு செல்லுங்கள். ஏனெனில் அங்கு அருமையான சில மாய்ஸ்சுரைசர்கள் உள்ளன. சரி, இப்போது எந்த வகையான சருமத்திற்கு, என்ன பொருட்களைப் பயன்படுத்தினால், சரும வறட்சியைப் போக்கலாம் என்று பார்ப்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அவகேடோ

அவகேடோ

பொதுவாக எண்ணெய் பசை சருமத்தில் அதிகப்படியான எண்ணெய் இருக்கும். இதனால் வறட்சி ஏற்படாமல் இருந்தாலும், அதிகமாக எண்ணெய் வழியாமல் இருக்கவும், சூரியக்கதிர்களில் இருந்து பாதுகாப்பு தரவும், எண்ணெய் பசை சருமத்திற்கு ஏற்றவாறான பொருட்களைப் பயன்படுத்த வேண்டும். அதற்கு அவகேடோ தான் சிறந்தது. இதனால் சருமமும் நன்கு பொலிவோடு, மென்மையாகும். எனவே அவகேடோவை மசித்து, சருமத்தில் தடவி 15-20 நிமிடம் ஊற வைத்து, பின் கழுவ வேண்டும்.

வாழைப்பழம்

வாழைப்பழம்

வாழைப்பழத்தில் பொலிவிழந்து காணப்படும் சருமத்தை புத்துணர்வு பெறச் செய்யும் வைட்டமின் ஏ அதிகம் உள்ளதால், இதனை மசித்து சருமத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.

திராட்சை

திராட்சை

திராட்சையில் சருமத்தில் ஈரத்தை தக்க வைக்கும், அதே சமயம் இறந்த செல்களை புதுப்பிக்கும் வைட்டமின் ஈ அதிகம் இருப்பதால், இவற்றை சாறு எடுத்து, சருமத்தில் தடவி சிறிது நேரம் ஊற வைத்து, கழுவ வேண்டும். இப்படி வாரத்திற்கு சில முறை செய்து வந்தால், சருமமானது பாதுகாப்புடன் பொலிவாகவும் இருக்கும்.

வெள்ளரிக்காய்

வெள்ளரிக்காய்

வெள்ளரிக்காயிலும் ஈரப்பதத்தை தக்க வைக்கும் குணம் உள்ளது. எனவே இதனை அரைத்தோ அல்லது துண்டுகளாக்கியோ சருமத்தில் சிறிது நேரம் வைத்து வந்தால், சருமத்தில் உள்ள அழுக்குகள் அனைத்தும் வெளியேறி, சருமம் பளிச்சென்று அழகாக மின்னும்.

தேங்காய் எண்ணெய்

தேங்காய் எண்ணெய்

வறட்சியான சருமம் உள்ளவர்கள் தேங்காய் எண்ணெயை சருமத்திற்கு தடவி மசாஜ் செய்து வந்தால், வறட்சி நீங்குவதுடன், சருமத்தில் உள்ள அழுக்குகள் வெளியேறி, சருமம் பொலிவாக காணப்படும்.

பப்பாளி

பப்பாளி

பப்பாளியை மசித்து தேன் சேர்த்து கலந்து, சருமத்தில் தடவி ஊற வைத்து கழுவினால், சரும வறட்சி நீங்கும். மேலும் இதில் வைட்டமின் சி அதிகம் இருப்பதால், இது சருமத்தின் நிறத்தையும் அதிகரிக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Moisturisers from the kitchen for all skin types

All-natural beauty treatments revitalize your skin and body, and are both effective and affordable. We suggest a few all-natural beauty treatments for all skin types that you can find inside your very own kitchen cupboards and refrigerators!
Story first published: Friday, May 30, 2014, 10:55 [IST]
Desktop Bottom Promotion