For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அரிசியை அழகு பராமரிப்பிற்கு பயன்படுத்துவது எப்படி...?

By Ashok CR
|

பொதுவாக தினசரி உணவிற்கு அரிசி உணவை தான் பெரும்பாலான இந்தியர்கள் விரும்புவார்கள். அதிலும் இந்தியாவின் தெற்கு மற்றும் கிழக்கு பகுதியில் வாழும் மக்கள் அரிசி சாதத்தை முக்கிய உணவாக பயன்படுத்தி வருகின்றனர். அரிசி என்பது உங்கள் அழகை பராமரிப்பதற்கும் பயன்படும் என்பது உங்களுக்கு தெரியுமா? ஆம், கேட்பதற்கு ஆச்சரியமாக தான் இருக்கும்.

நம் ஒவ்வொருவரின் சருமம் பொலிவடைந்து நீண்ட காலத்திற்கு புத்துணர்வு பெற்று விளங்க அரிசி பெரிதும் உதவுகிறது. வளுவளுவென பொலிவடைந்த வெண்ணிற சருமத்தை பெறுவதற்கு தான் ஒவ்வொரு பெண்ணும் விரும்புவார்கள். பொதுவாக ஆசிய நாடுகளில் வசிக்கும் பெண்களின் சருமம் வளுவளுவென வெண்ணிறத்தில் பொலிவடைந்து காணப்படும்.

How To Use The Rice For Beauty Care?

அதற்கு அவர்களின் உணவு பழக்கம் ஒரு முக்கிய காரணமாக விளங்குகிறது. நீங்களும் அழகிய சருமத்தை பெற வேண்டுமா? அப்படியானால் கீழ்கூறிய வழிமுறை படி அரிசியை பயன்படுத்தி உங்கள் அழகை மேம்படுத்துங்கள்.

சருமத்தை பொழிவடையச் செய்யும் வழிகள்:

• வேகாத அரிசியை சரியாக இரண்டு டீஸ்பூன் எடுத்து ஒரு பாத்திரத்தில் போடவும்.
• அரிசியில் இருக்கும் அழுக்குகள் மற்றும் கற்களை நீக்கி நன்றாக கழுவிக் கொள்ளுங்கள்.
• சுத்தப்படுத்திய அரிசியில் சுத்தமான நீரை ஊற்றி அந்த பாத்திரத்தை மூடி விடவும்.
• அரிசி அனைத்தும் பாத்திரத்தின் அடி பாகத்தில் வந்தடைய, அதை 20 நிமிடத்திற்கு அப்படியே விட்டு விடுங்கள்.
• இப்போது பழுப்பு அல்லது பாலின் நிறத்திலான அந்த நீரை தனியாக வேறு ஒரு பாத்திரத்தில் மாற்றிக் கொள்ளவும்.
• இந்த நீரை கொண்டு உங்கள் முகத்தை நன்றாக தேய்த்து கழுவுங்கள்.
• பின் உங்கள் முகத்தில் உள்ள ஈரப்பதம் காயும் வரை அப்படியே இருங்கள்.
• காய்ந்த பிறகு அந்த அரிசி நீரை கொண்டு மீண்டும் ஒரு முறை முகத்தை கழுவுங்கள்.

உங்கள் முகத்தில் உள்ள ஈரப்பதம் காயும் போது, அரிசி நீரில் இருக்கும் அனைத்து வைட்டமின் மற்றும் கனிமங்களும் உங்கள் சரும துவாரங்கள் வழியாக உள்ளேறும். முகத்தை கழுவிய பின்பு, உங்கள் சருமத்தை கையால் வருடும் போது அதிலுள்ள மென்மையை நீங்கள் உணரலாம். இதனால் ஆர்கானிக் மேக்-அப் வகையாக கருதப்படும் இதனை பின்பற்றி பொலிவடைந்து ஜொலிஜொலிக்கும் சருமத்தை பெறலாம். நாம் பயன்படுத்தும் அரிசி ஒரே தரத்தில் இருப்பதில்லை. அதனால் உங்கள் மேனியின் பளபளப்பு அதிகரிக்க விதவிதமான அரிசி வகைகளை பயன்படுத்தி பாருங்கள்.

அரிசி ஃபேஸ் வாஷ்:

உங்கள் முகம் பொலிவை இழந்து வாடி போயுள்ளதா? அப்படியானால் உங்கள் சருமத்திற்கு பொலிவை ஏற்படுத்தும் நேரம் இது. அரிசியை கொண்டு உங்கள் சருமத்தை பொலிவடையச் செய்யலாம். தீங்கு விளைவிக்கும் அழகு பொருட்கள் இல்லாமல் அரிசியை மட்டுமே பயன்படுத்தி உங்கள் சருமத்திற்கு பொலிவை ஏற்படுத்தி அதனை பளபளக்கச் செய்யலாம். பஞ்சுருண்டை ஒன்றை அரிசி நீரில் ஊற வைத்து அதனை கொண்டு மின்னும் சருமத்தை பெற வழிவகுக்கலாம்.

பயன்கள்:

• உங்கள் சருமத்தை திடமாக வைக்க உதவும்.
• உங்கள் சருமம் மென்மையாக மாறும்.
• சரும துவாரங்களின் அளவை சுருக்கும்.
• சருமத்தை பளபளப்பாக்க செலவில்லாத வழி.
• சூரிய வெப்பத்திலிருந்து உங்கள் சருமத்தை பாதுகாக்கும்.
• உங்கள் சருமத்தின் நிறத்தை மேம்படுத்தும்.
• உங்கள் சருமத்திற்கு புத்துணர்ச்சி அளிக்கும் தனிமங்களை அளிக்கும்.
• இயற்கையான ஆர்கானிக் க்லென்சராக இது வேலை செய்யும்.

வெறும் கைகளால் இந்த க்ளின்சரை உங்கள் முகத்தில் தடவி வந்தீர்கள் என்றால், உங்கள் கைகளும் கூட மென்மையாக மாறி வருவதை நீங்கள் உணர்வீர்கள். உங்கள் சருமம் வாடி போய் வெப்பத்தால் பதனிடலாகி உள்ளதா? அப்படியால் இந்த அரிசி க்ளின்சர் இழந்த உங்கள் சரும பொழிவை மீட்டு தரும். குறைந்த செலவில், வீட்டிலேயே கிடைக்கும் பொருளான அரிசியை கொண்டு சருமத்தை இப்படி அருமையான முறையில் பொழிவடைய செய்வதை அறியும் போது அனைவரும் ஆச்சரியப்பட போவது உறுதி.

English summary

How To Use The Rice For Beauty Care?

Women staying in Asian countries have bright, smooth and bright complexion. One of the reasons for their skin tone is their food habit. If you too wish to have beautiful skin, use rice recipe to enhance your beauty.
Story first published: Monday, January 6, 2014, 19:26 [IST]
Desktop Bottom Promotion