For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

எண்ணெய் பசை சருமம் உள்ளவர்களுக்கான சில சூப்பரான ஃபேஸ் மாஸ்க்குகள்!!!

By Maha
|

இருப்பதிலேயே எண்ணெய் பசை சருமம் உள்ளவர்கள் தான் பல்வேறு சரும பிரச்சனைகளுக்கு உள்ளாவார்கள். மேலும் அவர்களின் முகத்தைப் பார்த்தால், பருக்கள் மற்றும் அதனால் வந்த கருமையான தழும்புகள், கரும்புள்ளிகள் போன்றவை இருக்கும். இத்தகையவற்றை போக்க பலர் பல்வேறு க்ரீம்களை வாங்கிப் பயன்படுத்துவார்கள். இருப்பினும் சருமத்தில் இருந்து வெளிவரும் எண்ணெய் பசையின் அளவு குறைந்திருக்காது.

அதுமட்டுமல்லாமல் அவர்களின் முகமே அந்த க்ரீமால் பாழாகியிருக்கும். எனவே எண்ணெய் பசை சருமம் உள்ளவர்களுக்கு மிகவும் சிறந்தது இயற்கைப் பொருட்களைக் கொண்டு முகத்திற்கு ஃபேஸ் மாஸ்க் போடுவது தான். அதுமட்டுமின்றி, இந்த மாஸ்க்கை வாரம் இரண்டு முறை பின்பற்றுவதுடன், வெளியில் சென்று வீட்டிற்கு வந்ததும் முகத்தை ஃபேஸ் வாஷ் பயன்படுத்தி கழுவ வேண்டும். இப்படி செய்து வந்தால், அதிகப்படியான எண்ணெய் வெளிவருவதைக் கட்டுப்படுத்தி, முகத்தை பொலிவோடு பிரச்சனையின்றி வைத்துக் கொள்ளலாம்.

இங்கு எண்ணெய் பசை சருமத்திற்கான சில ஈஸியான ஃபேஸ் மாஸ்க்குகள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றைப் படித்து பார்த்து முயற்சித்துப் பாருங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
முட்டை மாஸ்க்

முட்டை மாஸ்க்

ஒரு முட்டையின் வெள்ளைக்கரு, 1 டேபிள் ஸ்பூன் வெள்ளரிக்காய் சாறு, சில துளிகள் எலுமிச்சை சாறு மற்றும் 1/2 டீஸ்பூன் க்ளே சேர்த்து கலந்து, கண்களில் படாதவாறு முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். அதிலும் இந்த மாஸ்க்கை வார இறுதியில் மாலை வேளையில் போடுவது நல்லது.

வாழைப்பழ மாஸ்க்

வாழைப்பழ மாஸ்க்

ஒரு பௌலில் 3 டேபிள் ஸ்பூன் வாழைப்பழக் கூழ், 1 டீஸ்பூன் தேன் மற்றும் சில துளிகள் எலுமிச்சை சாறு சேர்த்து மென்மையாக கலந்து, முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, குளிர்ச்சியான நீரில் கழுவ வேண்டும். இதனை வாரம் ஒருமுறை போட வேண்டும்.

ஓட்ஸ் மாஸ்க்

ஓட்ஸ் மாஸ்க்

3 டேபிள் ஸ்பூன் ஓட்ஸ் பொடியுடன், 2 டேபிள் ஸ்பூன் தயிர் மற்றும் 1/2 டீஸ்பூன் தேன் சேர்த்து கலந்து முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து பின் வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இதனால் முகப்பருவினால் ஏற்பட்ட தழும்புகள் மற்றும் கரும்புள்ளிகள் விரைவில் போய்விடும்.

ஸ்ட்ராபெர்ரி மாஸ்க்

ஸ்ட்ராபெர்ரி மாஸ்க்

8 ஸ்ட்ராபெர்ரி, சில துளிகள் எலுமிச்சை சாறு மற்றம் 1 டேபிள் ஸ்பூன் களிமண் சேர்த்து நன்கு அரைத்து, அதனை முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து குளிர்ந்த நீரில் அலச வேண்டும். இதனால் சருமத்தில உள்ள இறந்த செல்கள் வெளியேற்றப்படுவதுடன், முகத்தில் உள்ள பருக்களும் போய்விடும்.

க்ரீன் டீ மாஸ்க்

க்ரீன் டீ மாஸ்க்

2 டீஸ்பூன் க்ரீன் டீயுடன், 1 டீஸ்பூன் தேன், 2 டீஸ்பூன் களிமண் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் கற்றாழை ஜெல் சேர்த்து நன்கு கலந்து, முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, குளிர்ச்சியான நீரில் கழுவ வேண்டும். இந்த மாஸ்க்கை வாரத்திற்கு இரண்டு முறை போட்டால், நல்ல பலன் கிடைக்கும்.

யூகலிப்டஸ் ஆயில் மாஸ்க்

யூகலிப்டஸ் ஆயில் மாஸ்க்

இந்த மாஸ்க்கில் 1 டீஸ்பூன் ஆலிவ் ஆயில், 1 டீஸ்பூன் தயிர், 1 டீஸ்பூன் களிமண் மற்றும் 2 துளிகள் யூகலிப்டஸ் ஆயில் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இதனை வாரம் ஒருமுறை செய்து வருவது நல்லது.

ஆரஞ்சு மாஸ்க்

ஆரஞ்சு மாஸ்க்

1 டேபிள் ஸ்பூன் ஆரஞ்சு ஜூஸ் உடன், 1 டீஸ்பூன் கற்றாழை ஜெல் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இப்படி வாரம் இரண்டு முறை செய்து வந்தால், சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் பசையானது நீங்கி, சருமம் பொலிவோடு இருக்கும்.

சோள மாவு மாஸ்க்

சோள மாவு மாஸ்க்

3 டேபிள் ஸ்பூன் ஆரஞ்சு சாற்றுடன், 1 டீஸ்பூன் க்ளே மற்றும் 1 டீஸ்பூன் சோள மாவு சேர்த்து கலந்து முகத்தில் தடவி 15 நிமிடம் உலர வைத்து, பின் வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இந்த மாஸ்க்கை வாரம் ஒருமுறை முகத்திற்கு போடுவது நல்லது.

ஓட்ஸ் மற்றும் கேரட் மாஸ்க்

ஓட்ஸ் மற்றும் கேரட் மாஸ்க்

3 டேபிள் ஸ்பூன் ஓட்ஸ் பொடியுடன், 1 டேபிள் ஸ்பூன் கேரட் ஜூஸ், 1 டீஸ்பூன் தேன் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இதனால் சரும துளைகளில் உள்ள அழுக்குகள் நீக்கப்பட்டு, சருமத்தின் நிறமும் அதிகரித்து காணப்படும்.

தக்காளி மாஸ்க்

தக்காளி மாஸ்க்

அரைத்த தக்காளி ஒன்று, 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் 2 டேபிள் ஸ்பூன் க்ளே சேர்த்து ஒன்றாக கலந்து, முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இப்படி வாரம் ஒருமுறை செய்து வந்தால், முகப்பருக்கள் நீங்குவதுடன், சருமத்தில் உள்ள கருமையும் நீங்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Homemade Face Masks For Oily Skin

Homemade face masks for oily skin made from natural ingredients are one of the most effective ways to control oily skin.
Story first published: Wednesday, July 30, 2014, 14:51 [IST]
Desktop Bottom Promotion