For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஆண்களுக்கு வரும் முகப்பருக்களைத் தடுக்க உதவும் ஃபேஸ் பேக்குகள்!!!

By Boopathi Lakshmanan
|

ஆண்களுக்கு பருக்கள் வருவதற்கு பல மரபணு சார்ந்த விஷயங்களோ அல்லது சுரப்பிகளோ அல்லது அவர்களின் வாழ்க்கை முறை ஆகியவைகளோ காரணமாக இருக்கலாம். பலருக்கு நெற்றி தான் மிகவும் பாதிப்படைந்த இடமாக உள்ளது. இதற்கு காரணம் எண்ணெய், பொடுகு ஆகியவை தான். வாலிபர்கள் மற்றும் அதற்கு மேல் வயது உள்ளவர்களுக்கு இது அதிகமாக வருகின்றது. இதன் வருகை ஆண்களின் ஒவ்வொரு பருவத்திலும் மாறுபடுகின்றது.

இப்படி பட்ட சமயங்களில் நாம் வீட்டிலிருந்த படியே சில பொருட்களை கொண்டு மாஸ்க்குள் அல்லது ஃபேஸ் பேக்குகள் செய்து முகத்தில் போட்டு வரலாம். இதற்கு தேன், பால், ரோஸ் வாட்டர், பழவகைகள் ஆகியவை தேவைப்படும். இத்தகைய எளிய பொருட்களை கொண்டு பல மாஸ்குகளை செய்து முகத்தை பளபளப்பாக்க முடியும்.

நல்ல இளமையான மற்றும் ஜொலிக்கும் சருமம் வேண்டுமா? அப்ப விஸ்கி ஃபேஸ் பேக் போடுங்க!!!

இது புதிய திசுக்களை உருவாக்க உதவும். இவை முகத்திற்கு ஈரப்பதமூட்டி புத்துணர்வு தரும். மீண்டும் பருக்கள் வர விடாமலும் தடுக்கும். பழங்கள் தான் இவைகளில் மிகவும் பிரபலமான மாஸ்க் வகைகளாகும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
முல்தானி மெட்டி மாஸ்க்

முல்தானி மெட்டி மாஸ்க்

இது பொதுவாக அனைவருக்கும் தெரிந்த ஒரு வகை அழகு பொருளாகும். பருக்கள் மற்றும் அதன் தழும்புகளை குணப்படுத்த பரவலாக பயன்படுத்தப்படும் பொருள் இதுவாகும். பொதுவாகவே இதை இந்தியர்கள் பயன்படுத்துவது உண்டு. புல்லர் மண் வகையால் செய்யப்பட்ட இது பல கடைகளிலும் கிடைக்கும். இதை சிறிதளவு எடுத்து அதில் சில சொட்டு எலுமிச்சை சாறு மற்றும் ரோஸ் வாட்டர் எடுத்து குலைத்து முகத்தில் போட்டால், இக்கலவை பருக்களை நீக்கி மிகவும் புத்துணர்வான உணர்வை தரும்.

கடலை மாவு

கடலை மாவு

இரண்டு தேக்கரண்டி கடலை மாவை எடுத்து அதில் ஒரு கப் தயிரை கலந்து ஒரு பசை போன்ற பக்குவத்திற்கு கொண்டு வரவும். இதை முகத்தில் சமமாக போட வேண்டும். 30 முதல் 45 நிமிடம் வரை விட்டு உலர விடவும். பின்னர் தண்ணீர் விட்டு ஸ்கரப் போட்டு வட்ட வடிவில் தேய்க்கவும். பின்னர் கழுவி துடைத்து நல்ல ஒரு மாய்ஸ்சுரைசரை போட வேண்டும். இதை வாரத்திற்கு இரு முறை முயற்சி செய்து வந்தால், நல்ல பலன்களை பெற முடியும்.

புதினா ஃபேஸ் பேக்

புதினா ஃபேஸ் பேக்

புதினா இலைகளை கொண்டு ஃபேஸ் பேக் போடுவது மூலிகைகள் நிறைந்த ஒரு மாஸ்க் ஆகும். புதினா இலைகளை எடுத்து 2 அல்லது 3 தேக்கரண்டி தேனுடன் கலந்து இந்த கலவையை முகத்தில் தடவி அது உலரும் வரை காத்திருக்க வேண்டும். அதை பின்னர் தண்ணீரில் கழுவிட வேண்டும். இதை தினசரி முயற்சி செய்து நல்ல வித்தியாசத்தை காணுங்கள்.

வெள்ளரி ஃபேஸ் மாஸ்க்

வெள்ளரி ஃபேஸ் மாஸ்க்

வெள்ளரி உடம்பில் உள்ள சூட்டுத் தன்மையை குறைத்து விடுகின்றது. ஆகையால் இவை பருக்களை எதிர்த்து போராடி அத்தகைய புண்களை குறைக்கின்றன. அதன் உருவாக்கம் மற்றும் பருக்களை குறைக்க வல்லது. இது மிகவும் எளிய வழியாகும். வெள்ளரியை நன்கு சீவி அதில் உள்ள சாற்றை தனியாக எடுத்து குளிர் சாதனப்பெட்டியில் வைக்க வேண்டும். பின்னர் வெளியே உள்ள சீவின வெள்ளரி கொண்டு அதை தொட்டு முகத்தை ஈரப்பதமூட்ட வேண்டும். ஒரு தடவைக்கு ஒரு முறை தொட்டு வைக்க வேண்டியது அவசியம்.

பப்பாளிப் பழ மாஸ்க்

பப்பாளிப் பழ மாஸ்க்

நிறைய பழங்களை ஒன்றிணைத்து அதை மசித்து பேக் போல செய்து போடலாம். வாழைப்பழம், பப்பாளி, வெண்ணெய் பழம், தர்பூசணி ஆகிய பழங்களில் கிடைப்பதை வைத்து, அதை நன்கு பிசைந்து தயிர் மற்றும் தேன் ஆகியவற்றை கலந்து முகத்தில் போட்டு அது உலரும் வரை விட்டு கழுவவும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Homemade Acne Face Packs For Men

There are several environmental, lifestyle and genetic reasons for acne problems in men. You can make simple and effective face masks at home that can be applied to treat acne. Most of the ingredients are available at home such as honey, salt, papaya etc. Such simple natural ingredients can be mixed to form face packs that help in treating acne.
Desktop Bottom Promotion