For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

முகத்தில் உள்ள சுருக்கத்தைப் போக்க சில இயற்கை வழிகள்!!!

By Maha
|

வயதாகிவிட்டால் தான் சருமமானது சுருக்கத்துடன் காணப்படும். ஆனால் தற்போது 20 வயதிலேயே சருமம் சுருக்கமடைந்து முதுமைத் தோற்றத்தைத் தருகிறது. இதற்கு பல காரணங்கள் இருந்தாலும், சரியான சரும பராமரிப்பு இல்லாதது, முகத்தை அழுத்தியவாறு தூங்குவது, புகைப்பிடிப்பது, மது அருந்துவது போன்றவைகள் முக்கியமானவையாகும்.

மேலும் சருமத்தை அதிக அளவில் வறட்சி அடைய வைத்தாலும், சருமத்தில் சுருக்கங்களானது ஏற்படும். எனவே சருமத்தை வறட்சியடையாமல் பர்த்துக் கொள்ள வேண்டும். அதுமட்டுமல்லாமல், வாரம் ஒருமுறை அல்லது அன்றாடம் சருமத்தை வீட்டில் இருக்கும் ஒருசில பொருட்கள் கொண்டு பராமரித்து வந்தால், சருமத்திற்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைத்து, சருமம் சுருக்கமடைவதைத் தடுக்கலாம்.

சரி, இப்போது சரும சுருக்கத்தைத் தடுக்கும் அத்தகைய இயற்கை வழிகளைப் பார்ப்போமா!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தேங்காய் பால்

தேங்காய் பால்

தேங்காயை பால் எடுத்து, அதனை தினமும் முகத்

தில் தடவி ஊற வைத்து, கழுவி வந்தால், சருமத்திற்கு தேவையான ஈரப்பசையானது கிடைத்து, முகம் பொலிவோடு பளிச்சென்று இருக்கும்.

அவகேடோ

அவகேடோ

அவகேடோவில் கொழுப்புக்கள் நிறைந்திருப்பதால், அதனைக் கொண்டு சருமத்தைப் பராமரித்தால், முகம் புத்துணர்ச்சியுடன் பொலிவோடு காணப்படும். அதற்கு அவகேடோவை மசித்து, முகத்தில் தடவி ஊற வைத்து கழுவ வேண்டும்.

எலுமிச்சை

எலுமிச்சை

எலுமிச்சை சாற்றினை நீரில் கலந்து, அதனைக் கொண்டு முகத்தை துடைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவினால், சருமத்தில் உள்ள அழுக்குகள் நீங்கிவிடும். குறிப்பாக எலுமிச்சையை முகத்திற்குப் பயன்படுத்திய பின் வெளியே வெயிலில் செல்லக் கூடாது. மேலும் எலுமிச்சை சாற்றினைப் பயன்படுத்திய பின் ஏதேனும் மாய்ஸ்சுரைசரைப் பயன்படுத்த வேண்டும்.

உருளைக்கிழங்கு

உருளைக்கிழங்கு

தினமும் உருளைக்கிழங்கைக் கொண்டு சருமத்தை துடைத்து எடுத்து வந்தால், முதுமைத் தோற்றத்தைத் தரும் முகத்தில் உள்ள பிம்பிள் மற்றும் கரும்புள்ளிகளானது நீங்கும்.

கிளிசரின், எலுமிச்சை சாறு மற்றும் ரோஸ் வாட்டர்

கிளிசரின், எலுமிச்சை சாறு மற்றும் ரோஸ் வாட்டர்

தினமும் இரவில் படுக்கும் முன் கிளிசரின், எலுமிச்சை சாறு மற்றும் ரோஸ் வாட்டரை சரிசமமாக எடுத்து கலந்து, முகத்தில் தடவி வர வேண்டும். இப்படி செய்து வந்தால், சருமத்திற்கு தேவையான சத்துக்களானது கிடைத்து சரும சுருக்கங்களானது மறையும்.

அன்னாசி

அன்னாசி

அன்னாசிப் பழத்தைக் கொண்டு முகத்தை தேய்த்து, 10-15 நிமிடம் ஊற வைத்து பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இப்படி செய்து வந்தால், சரும சுருக்கங்களானது நீங்கிவிடும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Home Remedies for Wrinkles on Face

Here are some home remedies for wrinkles on face. Read more...
Story first published: Friday, November 14, 2014, 15:04 [IST]
Desktop Bottom Promotion