For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

10 நாட்களில் நல்ல பொலிவான மற்றும் அழகான சருமம் வேண்டுமா? இதோ சில டிப்ஸ்...

By Maha
|

அனைத்து பெண்களுக்குமே அழகான மற்றும் பொலிவான சருமம் வேண்டுமென்ற ஆசை இருக்கும். இருப்பினும் பெரும்பாலான பெண்கள் சரும பிரச்சனைகளான முகப்பரு, பிம்பிள், கருவளையம் மற்றும் பழுப்பு நிற சருமம் போன்றவற்றால் அவஸ்தைப்படுகின்றனர். மேலும் அவற்றைப் போக்குவதற்கு பல செயல்களையும் பின்பற்றுகின்றனர்.

பொதுவாக சருமத்தில் பிரச்சனைகள் ஏற்படுவதற்கு சுத்தமும் ஒரு காரணம். ஆம், கைகளில் அழுக்குகள் அதிகம் இருந்தால், அப்போது அந்த கைகளை முகத்தில் வைக்கும் போது, சருமத்தில் பிரச்சனைகளானது வர ஆரம்பிக்கிறது. மேலும் சுற்றுசூழலும் சரும அழகிற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. அதுமட்டுமல்லாமல் உண்ணும் உணவுகளால் கூட சருமத்தின் அழகானது பாதிக்கப்படுகிறது.

சொன்னா நம்பமாட்டீங்க.... ஏன்னா இந்த உணவுகள் முகப்பருக்களை உண்டாக்கும்!!!

ஆனால் சரியான உணவுமுறை மற்றும் பழக்கவழக்கங்களுடன், சருமத்தை பராமரித்து வந்தால் நிச்சயம் அழகாகவும் பொலிவுடனும் ஜொலிக்க முடியும். அதிலும் இத்தகையவற்றை 10 நாட்கள் தொடர்ந்து கடைபிடித்து வந்தால், பத்தே நாட்களில் நல்ல பலன் தெரியும்.

இங்கு 10 நாட்களில் நல்ல பொலிவான மற்றும் அழகான சருமத்தைப் பெற செய்ய வேண்டிய சில செயல்களைக் கொடுத்துள்ளோம். அதைப் பார்ப்போமா!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
முகத்தை கழுவவும்

முகத்தை கழுவவும்

இதெல்லாம் சொல்லித் தான் செய்வோமா என்று பலர் கேட்கலாம். ஆனால் பலர் வெளியே சுற்றிவிட்டு வீட்டிற்கு வந்தால், களைப்பாக உள்ளது என்று முகத்தை கழுவாமல் கூட இருப்பார்கள். எனவே எப்போது வெளியே சென்றுவிட்டு வீட்டிற்கு வந்தாலும், முகத்தை கழுவ வேண்டும்.

எலுமிச்சை மற்றும் சர்க்கரை

எலுமிச்சை மற்றும் சர்க்கரை

இது ஒரு சூப்பரான பொலிவான சருமத்தைப் பெற உதவும் பொருட்களில் ஒன்றாகும். அதற்கு தினமும் குளிப்பதற்கு முன்பு எலுமிச்சை சாற்றில் சர்க்கரை சேர்த்து கலந்து, அந்த கலவையைக் கொண்டு சருமத்தை ஸ்கரப் செய்து வந்தால், சருமத்தில் உள்ள இறந்த செல்கள் நீங்கி, சருமம் பொலிவோடு சுத்தமாக இருக்கும்.

எக்ஸ்போலியேட்

எக்ஸ்போலியேட்

10 நாட்களில் சருமம் பொலிவோடு காணப்பட வேண்டுமானால், வாரத்திற்கு குறைந்தது மூன்று முறையாவது எக்ஸ்போலியேட் செய்ய வேண்டும். இப்படி செய்வதால், சருமத்தில் உள்ள இறந்த செல்கள் நீங்கிவிடுவதோடு, முகமும் நன்கு புத்துணர்ச்சியுடன் சுத்தமாக காணப்படும்.

பால்

பால்

சருமத்தின் அழகை சரியாக பராமரிக்க வேண்டுமானால், தினமும் குளிர்ச்சியான பால் கொண்டு முகத்தை துடைத்து எடுக்க வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், சருமத்தில் உள்ள கரும்புள்ளிகள், கருவளையங்கள் மற்றும் சரும நிற மாற்றம் நீங்கி, சருமம் சுத்தமாக அழகாக இருக்கும்.

ஆவி பிடிப்பது

ஆவி பிடிப்பது

சரும துளைகளில் தங்கியுள்ள அழுக்குகளை சுத்தமாக போக்க வேண்டுமானால், தினமும் 10-15 நிமிடம் ஆவி பிடிக்க வேண்டும். ஒருவேளை அதற்கு நேரம் இல்லாதவர்கள். சுடு நீரில் நனைத்து பிழிந்த துணியை முகத்தின் மேல் 15-20 நிமிடம் வைத்து எடுத்து பின் நன்கு சுத்தமான துணியால் துடைத்தால், சரும துளைகளானது திறந்து அதில் உள்ள அழுக்குகள் நீங்கி முகம் பொலிவோடு இருக்கும்.

ஃபேஸ் பேக்

ஃபேஸ் பேக்

வாரத்திற்கு இரண்டு முறை சருமத்தில் ஏற்படும் பிரச்சனைகளை போக்குமாறான ஃபேஸ் பேக்குகளை போட வேண்டும். உதாரணமாக, பெர்ரி, தக்காளி, எலுமிச்சை மற்றும் கிரேப் புரூட் போன்றவற்றைக் கொண்டு ஃபேஸ் பேக்குகள் போட்டால், முகப்பரு, கரும்புள்ளிகள் மற்றும் பழுப்பு நிற சருமம் போன்றவை நீங்கும்.

மேக் அப்பை நீக்கவும்

மேக் அப்பை நீக்கவும்

அலுவலகத்தில் இருந்து வீட்டிற்கு வந்ததும், சிலர் இரவில் படுக்கும் போது முகத்தில் போட்ட மேக் அப்புகளை நீக்காமல் தூங்குவார்கள். அப்படி மேக் அப்பை நீக்காமல் தூங்கினால், பின் சரும பிரச்சனைகள் அதிகரிக்கும். எனவே எப்போதும் இரவில் படுக்கும் போது மேக் அப்பை சுத்தமாக நீக்கி, முகத்தை நன்கு கழுவி பின்னர் தூங்க வேண்டும்.

பருக்களை பிய்க்க வேண்டாம்

பருக்களை பிய்க்க வேண்டாம்

சிலர் முகத்தில் சிறு பருக்கள் வர ஆரம்பித்தால், அதனை பிய்த்து எடுக்க முனைவார்கள். ஆனால் அப்படி செய்தால் பருக்கள் தான் இன்னும் அதிகமாகுமே தவிர போகாது. மேலும் அப்படி பிய்த்து எடுக்கும் போது, அது சருமத்தில் கரும்புள்ளிகளாக மாறிவிடும்.

தவறுகளை தவிர்க்கவும்

தவறுகளை தவிர்க்கவும்

சிலர் பிம்பிள் மற்றும் பருக்களை போக்க டூத் பேஸ்ட் பயன்படுத்தினால் உடனே போய்விடும் என்று நினைக்கிறோம். ஆனால் உண்மையில் அப்படி செய்தால், அது அவற்றை போக்குவதோடு, வடுக்களை உண்டாக்கிவிடும்.

தண்ணீர் குடிக்கவும்

தண்ணீர் குடிக்கவும்

தற்போது நிறைய மக்கள் செய்யும் ஒரு பொதுவான தவறு தான் தினமும் போதிய தண்ணீர் குடிக்காமல் இருப்பது. ஆனால் தண்ணீரை தினமும் அதிகம் குடித்து வந்தால், சருமத்தில் தங்கியுள்ள நச்சுக்கள் வெளியேறி, சருமம் சுத்தமாகவும் பொலிவோடும் இருக்கும்.

நல்ல தூக்கம்

நல்ல தூக்கம்

தினமும் போதிய தூக்கம் இல்லாவிட்டாலும், சருமத்தின் அழகானது பாதிக்கப்படும். எனவே நல்ல அழகான சருமம் வேண்டுமானால், தினமும் குறைந்தது 7-8 மணிநேரம் தூங்குங்கள்.

சன் ஸ்கிரீன்

சன் ஸ்கிரீன்

எப்போதும் வெயிலில் செல்லும் போது, சருமத்திற்கு தவறாமல் சன் ஸ்கிரீன் லோசனைப் பயன்படுத்த வேண்டும். இதனால் சருமத்தின் நிறம் மாறாமல் இருக்கும்.

டோனிங்

டோனிங்

தண்ணீர் கொண்டு முகத்தை கழுவுவதற்கு பதிலாக, டோனர் கொண்டு சருமத்தை துடைத்து எடுக்கலாம். இதனால் சருமத்தில் உள்ள பாக்டீரியாக்கள் மற்றும் அழுக்குகள் நீங்கி, சருமம் அழகாக ஜொலிக்கும். உதாரணமாக, ரோஸ் வாட்டர் கொண்டு சருமத்தை துடைத்து எடுக்கவும்.

ஜங்க் உணவுகளை தவிர்க்கவும்

ஜங்க் உணவுகளை தவிர்க்கவும்

ஜங்க் உணவுகள் மற்றும் எண்ணெயில் பொரிக்கப்பட்ட உணவுப் பொருட்கள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் இவை சருமத்தில் முகப்பருக்களை உண்டாக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Get Clear Skin In Just 10 Days!

To get clear skin in 10 days, you need to follow a healthy diet. Here are some natural remedies to get clear skin in just 10 days.
Desktop Bottom Promotion