For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சரும வகைகளும்... அதற்கான சிறப்பான ஃபேஸ் பேக்குகளும்...

By Boopathi Lakshmanan
|

கடுமையான வேலைப்பளுவின் காரணமாக ஸ்பாவிற்கு சென்று முகத்தையும், உடலையும் பராமரிக்க முடியாத நிலையில் நீங்கள் இருக்கலாம். அதே சமயம் குறைந்த செலவில், தேவையில்லாத செலவுகள் இல்லாமல் இதப்படுத்திக் கொள்ளவும் நீங்கள் விரும்பலாம். இதோ உங்களுக்கு ஒரு நல்ல செய்தி!

செலவு அதிகம் செய்தால் தான் உங்களை பராமரித்துக் கொள்ள முடியும் என்பதை பழைய செய்தியாக்கிக் கொள்ளுங்கள். உங்கள் வீட்டு சமையலறைக்குள் சென்று, உங்களுக்குத் தேவையான பொருட்களை எடுத்துக் கொண்டு அழகையும், உடலையும் வளப்படுத்திக் கொள்ளுங்கள்!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
எண்ணெய் பசையுள்ள சருமம்

எண்ணெய் பசையுள்ள சருமம்

எண்ணெய் பசையுள்ள சருமத்தைக் கொண்டிருக்கும் ஒவ்வொரு பெண்ணும், அவர்களுடைய சருமத்தை வறண்டு போக விடாமல் எண்ணெயை குறைக்கும் வித்தைகளும் அல்லது சரும மெழுகு எண்ணையை சுரக்கும் சுரப்பிகளை ஓரம் கட்டும் வித்தைகளும் மிகவும் சவாலான விஷயங்களாகவே இருக்கின்றன. ஒளிரும் பொருட்களை விட அதிகமாக ஒளிரச் செய்யும் திறன் எண்ணைய் பசையுள்ள சருமத்திற்கு உள்ளதால் தான், இந்த சருமம் உடைய பெண்கள் மாய்ஸ்சுரைசர்களை பயன்படுத்துவதில்லை. அது மட்டுமல்லாமல் எண்ணைய் பசையுள்ள தோல் பகுதிகள் குப்பைகளையும், தோலின் துளைகள் அடைத்துக் கொள்ளவும் வகை செய்கின்றன. இந்த பிரச்சனைகளையெல்லாம் எதிர்கொண்டு வெற்றிகரமான மனிதராக தன்னம்பிக்கையுடன் வலம் வர பின்வரும் குறிப்புகள் உங்களுக்கு உதவும்.

முட்டை ஃபேஸ் பேக்

முட்டை ஃபேஸ் பேக்

ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாற்றுடன், முட்டையின் வெள்ளைக் கருவை கலக்கவும். சுத்தமாக துடைக்கப்பட்டிருக்கும் முகத்தில் இந்த கலவையை தடவவும். இந்த ஃபேஸ் மாஸ்க்கை 10-15 நிமிடங்கள் முகத்தில் தடவி உலர்த்தி விடவும். இவ்வாறு ஃபேஸ் மாஸ்க்கை முகத்தில் போட்டிருக்கும் போது பேசவோ, சாப்பிடவோ அல்லது உங்களது வாயை அசைக்கவோ வேண்டாம். ஃபேஸ் மாஸ்க் நன்றாக உலர்ந்து, வெடிக்கத் தொடங்கிய பின்னர் வெந்நீரில் முகத்தை நன்றாக கழுவவும்.

ஆஸ்பிரின் மாஸ்க்

ஆஸ்பிரின் மாஸ்க்

மேற்பூச்சுகள் இல்லாத ஆஸ்பிரின் மாத்திரைகள் நான்கை எடுத்து நன்றாக பொடியாக்கிக் கொள்ளவும். இதனை பசை போல மாற்றும் அளவிற்கு தண்ணீரை கலக்கவும். இந்த மாஸ்க் வேகமாக உலர்ந்து போவதாக நீங்கள் கருதினால், சிறதளவு தயிர் அல்லது கிரீமை சேர்த்துக் கொள்ளலாம். சுத்தமான மற்றும் வறண்டு இருக்கும் முகத்தில் இந்த கலவையை தடவவும். இவ்வாறு செய்யும் போது கண்கள் மற்றும் மூக்கின் துளைகளில் இந்த கலவைப்படாதவாறு பார்த்துக் கொள்ளவும். 10 நிமிடங்கள் உலர விட்டு மிதவெப்பமான வெந்நீரில் முகத்தை கழுவவும்.

வறண்ட சருமம்

வறண்ட சருமம்

வுறண்ட சருமம் மிகவும் நன்றாக தோற்றமளித்தாலும், அதில் துளைகள, எரிச்சல் மற்றும் சுருக்கங்கள் ஏற்படுவது எளிதில் நடந்துவிடும். சருமத்தை ஈரப்பதத்துடனும், நீர்மச்சத்துடனும் வைத்திருந்து ஒரு மாயாஜாலத்தை ஏற்படுத்தும் வல்லமையை கீழ்கூறிய ஃபேஸ் மாஸ்க் கொண்டிருக்கிறது.

வெண்ணெய் பழ மாஸ்க்

வெண்ணெய் பழ மாஸ்க்

பாதி வெண்ணெய் பழத்தை எடுத்து நன்றாக கூழாக்கிக் கொள்ளவும். ஒரு தேக்கரண்டி தேனை கலந்து சுத்தப்படுத்தி விட்டு, சுத்தமான தயிரை சிறிதளவு கலக்கி, அந்த கலவையை எரிச்சலுக்கு ஆளான சருமத்தில் தடவி மென்மையாக்கிக் கொள்ளுங்கள். இதில், ஒரு கோப்பை சுத்தமான ஆலிவ் எண்ணெயையும் கூட சேர்த்துக் கொள்ளலாம். இந்த கலவையை எடுத்து உங்களுடைய கழுத்து மற்றும் முகத்தில் தடவி விட்டு, 15-20 நிமிடங்கள் உலர விடவும். பின்னர் மிதவெப்பமான வெந்நீரில் கழுவவும்.

வாழைப்பழ மாஸ்க்

வாழைப்பழ மாஸ்க்

வாழைப்பழத்தின் தோலை உரித்து, நன்றாக கலக்கி அடர் கலவையாக எடுத்துக் கொள்ளுங்கள். இரண்டு தேக்கரண்டி தேன் மற்றும் வாழைப்பழ பசையை கலக்கி எடுத்து, வறண்ட சருமத்தில் தடவி சுத்தம் செய்து, உலர வையுங்கள். 10-20 நிமிடங்களுக்கு உலர விட்டு, பின்னர் வெந்நீரில் முகத்தை கழுவவும்.

சோர்வான சருமம்

சோர்வான சருமம்

நெருக்கடியான வாழ்க்கை முறை, மன அழுத்தம், சுற்றுச் சூழல் மாசுபாடு, சரிவிகிதமில்லாத மற்றும் சுகாதாரமில்லாத உணவுமுறை ஆகியவற்றால் நம்முடைய சருமம் சோர்வாக காணப்படுவது இன்றைய நவீன முன்னேற்றத்தின் வேண்டாத பரிசு என்பதை மறுக்க முடியாது. இங்கே தரப்பட்டுள்ள வழிமுறையைப் பயன்படுத்தி சேர்வான சருமத்திற்கு சிகிச்சை செய்யுங்கள்.

பப்பாளி மாஸ்க்

பப்பாளி மாஸ்க்

பப்பாளியின் கொட்டைகளை நீக்கி விட்டு சிறு சிறு துண்டுகளாக அரிந்து எடுத்துக் கொள்ளுங்கள். ¼ கோப்பை தேனை கலந்து விட்டு, கலக்கியை பயன்படுத்தி பசையாக தயாரித்துக் கொள்ளவும். இந்த கலவையை சுத்தமான, வறண்ட சருமத்தில் தடவுங்கள். கண்களில் தடவ வேண்டாம். 10-15 நிமிடங்கள் உலர விட்டு, பிறகு மிதவெப்பமான வெந்நீரில் கழுவவும்.

எலுமிச்சை சாறு மற்றும் கடல் உப்பு மாஸ்க்

எலுமிச்சை சாறு மற்றும் கடல் உப்பு மாஸ்க்

சிறதளவு எலுமிச்சை சாற்றுடன் ¼ கோப்பை கடல் உப்பை சேர்த்துக் கொள்ளவும். முகம் மற்றும் கழுத்து முழுவதும் இந்த கலவையை மென்மையாக, வட்ட வடிவில் தடவவும்.

ஓட்மீல் ஃபேஸியல்

ஓட்மீல் ஃபேஸியல்

இரண்டு தேக்கரடிண்டிகள் சுத்தமான மற்றும் மேற்பூச்சு கலவை இல்லாத ஓட்மீலை, ஒரு கோப்பை பாலுடன் கலக்கவும். இந்த கலவை நல்ல மொத்தமான பசை போன்று வரும் வரை நன்றாக சூடாக்கவும். பின்னர் சூட்டில் இருந்து எடுத்து விட்டு, 2 தேக்கரண்டிகள் ஆலிவ் எண்ணையை கலந்து கலவையாக்கிக் கொள்ளவும். இந்த கலவையை தொடும் போது சூடாக இருக்கும் பக்குவத்தில் வைத்து, முகத்தில் தடவுங்கள். 20-30 நிமிடங்கள் உலர விட்டு கழுவி விடவும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Face Masks For Every Skin Types

Maintaining oneself need not necessarily translate into spending big bucks. Just walk into your kitchen, grab your ingredients and get started for a pretty you!
 
Desktop Bottom Promotion