For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இயற்கையாகவே பளபளக்கும் சருமத்தைப் பெற செய்ய வேண்டியவைகள் மற்றும் செய்யக்கூடாதவைகள்!!

By Boopathi Lakshmanan
|

மிருதுவான, மென்மையான மற்றும் பிரகாசமாக இருக்கும் சருமத்தை தான் அழகான சருமம் என்று கூறுவார்கள். ஆனால் இதை அனைவரும் பெறுவதில்லை. இது பராமரிப்பது என்பது மிகவும் எளிய காரியமும் கிடையாது. ஆனால் செய்ய முடியாதது என்று எதுவும் இல்லை என்பதால் கவலையை விடுங்கள். உதவி செய்ய நாங்கள் இருக்கிறோம்.

10 நாட்களில் நல்ல பொலிவான மற்றும் அழகான சருமம் வேண்டுமா? இதோ சில டிப்ஸ்...

அழகான மிருதுவான மற்றும் கறை படியாத சருமத்தை பெற உள்ள சில வழிகளை நாம் பார்ப்போம். இவை மிகவும் எளிய செயல்களாகும். இளமையான மற்றும் வெளிரும் சருமத்தை பெற நீங்கள் செய்ய வேண்டியவை மற்றும் தவிர்க்க வேண்டியவற்றைப் பற்றி தற்போது நாம் இந்த கட்டுரையில் காண்போம். இந்த முறைகளை பின்பற்றி நல்ல பலன்களை பெற்றிடுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
செயற்கையான அழகு சாதன பொருட்களை தவிர்க்கவும்

செயற்கையான அழகு சாதன பொருட்களை தவிர்க்கவும்

இயற்கை பொருட்களால் தயார் செய்யப்பட்ட அழகு சாதனங்களை அதிகபட்சம் பயன்படுத்துவது நல்லது. இது சருமத்தை அழகாக பிரதிபலிக்கச் செய்வது மட்டுமல்லாமல் அதில் உள்ள துளைகளையும் அடைப்பதில்லை. இத்தகைய பராமரிப்பு சருமத்திற்கு மிகவும் அவசியமானதாகும். அது மட்டுமல்லாமல் குறைந்த பொருட்களை பயன்படுத்துவதும் நமது சருமத்தை பாதுகாப்பாக வைக்கும்.

ஸ்கரப் செய்தல்

ஸ்கரப் செய்தல்

வாரத்திற்கு ஒரு முறையாவது இதை செய்ய வேண்டும். எண்ணெய் வடியும் அல்லது இரண்டும் கலந்தது போன்ற சருமம் உங்களுக்கு இருந்தால் இரசாயனம் கலந்த எக்ஸ்போலியேட்டரை பயன்படுத்தவும். க்ளைக்கோலிக் மற்றும் சாலிசிலிக் அமிலம் உள்ள பொருட்களை இதற்காக பயன்படுத்தலாம். சாதாரண மற்றும் உணர்ச்சி நிரம்பிய சருமத்தை கொண்டவர்கள் மைக்ரோடெர்மாபிரேஷன் மற்றும் சிறிய சிறிய மணிகளை கொண்ட எக்ஸ்போலியேட்டரை பயன்படுத்துவதும் சிறந்தது.

கண்களுக்கான கிரீமை பயன்படுத்துவது

கண்களுக்கான கிரீமை பயன்படுத்துவது

கண்களைச் சுற்றி உள்ள தோல் மிகுந்த பலவீனத்துடன் காணப்படும் மற்றும் அது மிகவும் மெல்லியதாகவும் இருக்கும். ஆகையால் இதை காப்பதற்கு எஸ்.பி.எப். 30 உள்ள கண்களுக்கான கிரீமை பயன்படுத்துங்கள்.

ஊட்டச்சத்துள்ள உணவுப் பொருட்கள்

ஊட்டச்சத்துள்ள உணவுப் பொருட்கள்

உள்ளுறுப்புக்களை நாம் ஆரோக்கியமாக வைத்துக் கொண்டால் தான் சருமமும் ஆரோக்கியமாக இருக்கும். அதிகமாக தண்ணீர் அருந்துங்கள். அதிக அளவு ஆக்ஸிஜன் எதிர்பொருட்கள் உள்ள உணவுகளையும் வைட்டமின் ஏ, ஈ, சி மற்றும் கிரீன் டீ, பீட்டா கரோட்டீன் ஆகியவைகளையும் உண்ண வேண்டும். இதனால் ஆக்ஸிஜன் எதிர்பொருட்கள் ஃப்ரீ ராடிக்கல்களை தடுத்து திசுக்கள் சேதமடைவதை தடுக்கின்றன. சருமத்தை தினசரி இரு முறையாவது அதற்கு தேவையானவற்றை கொடுத்து ஊட்டத்தை தர வேண்டியது அவசியமாகும். அதுமட்டுமல்லாமல் உடனடியாக பலன்களை காண வேண்டும் என்று நினைப்பதும் தவறாகும். அது நடைமுறையில் கிடைக்காது. மெதுவாகவும், நிலையாகவும் முயற்சித்தால், நிச்சயம் மாற்றங்களை காண முடியும்.

புகைப்பிடிப்பதை தவிர்க்கவும்

புகைப்பிடிப்பதை தவிர்க்கவும்

சூரிய வெப்பத்திற்கு அடுத்ததாக, உங்களுடைய சருமத்தின் வயதை மிகவும் அதிகமானது போல் காட்டுவது புகைப்பிடிக்கும் பழக்கமாகும். ஏனெனில் நிக்கோடின் இரத்தக் குழாய்களை அடைத்து ஆக்ஸிஜன் சருமத்திற்கு செல்ல முடியாமல் தடை செய்கிறது.

மாய்ஸ்சுரைசர் பயன்படுத்தவும்

மாய்ஸ்சுரைசர் பயன்படுத்தவும்

சன் ஸ்கிரீன் போடுவதை நிறுத்தி நல்ல மாய்ஸ்சுரைசரை பயன்படுத்தலாம். ஈரப்பதமூட்டும் பொருட்களில் spf 30 உள்ளது. இத்தகைய மாய்ஸ்சுரைசர்களை பயன்படுத்தவும். சிறிது நேரம் வெளியே சென்றாலும் கூட கண்டிப்பாக இதை பயன்படுத்த வேண்டும்.

கழுத்து மற்றும் உட்பகுதிகளையும் பராமரிக்கவும்

கழுத்து மற்றும் உட்பகுதிகளையும் பராமரிக்கவும்

முகத்தை மட்டும் அல்ல கழுத்து, நெஞ்சு பகுதி மற்றும் கைகள் ஆகியவற்றையும் நாம் மறந்து விடுகின்றோம். இந்த இடங்கள் தான் முகத்தை காட்டிலும் சீக்கிரம் வெளுக்கும் தன்மை உடையவையாகும். நாம் பயன்படுத்தும் சன் ஸ்கிரீன், எக்ஸ்போலியேட்டர் மற்றும் மாய்ஸ்சுரைசர் ஆகியவற்றை இந்த இடங்களிலும் பயன்படுத்த வேண்டும். மேலும் சரும இளமையை மேம்படுத்தும் வைட்டமின் ஏ, காப்பர் மற்றும் வைட்டமின் சி உள்ள பொருட்களை பயன்படுத்த வேண்டும்.

முகத்தை அடிக்கடி கழுவக்கூடாது

முகத்தை அடிக்கடி கழுவக்கூடாது

பெரும்பாலான பெண்கள் செய்யக்கூடிய தவறு என்ன தெரியுமா? பருக்கள் வரும் போது முகத்தை அடிக்கடி கழுவி, அதில் உள்ள இயற்கை எண்ணெய்களை அறவே நீக்கி விடுவது தான். இது முற்றிலும் தவறாகும். இதனால் இந்த பிரச்சனை அதிகரிக்குமே ஒழிய குறையாது. நமது சருமத்திலுள்ள இயற்கையான எண்ணெயை சுத்தமாக வழித்தெடுத்து விடும் போது, சரும மெழுகு மேலும் சுரக்கத் தொடங்குகிறது. இதனால் சருமத்தில் உள்ள துளைகள் அடைக்கப்பட்டு மேலும் பருக்கள் அதிகமாக உருவாகின்றன. இது போன்ற நேரங்களில், ஒரு நல்ல கிளின்சரை பயன்படுத்துவதோ அல்லது இறந்த திசுக்களை தொடர்ந்து தேய்த்து எடுப்பதோ சருமத்திற்கு போதுமானதாகும். ஆனால் பருக்கள் திரும்பத் திரும்ப வரும் போது உங்களுடைய சரும நோய் நிபுணரை அணுகுவது நல்லது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Do's And Don'ts For Naturally Glowing Skin

Read dos and don's for a youthful and glowing skin. Try these methods and it is sure will give some positive results in your skin.
Desktop Bottom Promotion