For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கோடையில் சருமம் வறட்சி அடைவதற்கான காரணங்கள்!!!

By Maha
|

பொதுவாக கோடையில் அதிகம் வியர்ப்பதால், சருமம் எப்போதும் ஈரப்பதத்துடன் இருக்கும். சரும வறட்சியானது குளிர்காலத்தில் தான் அதிகம் ஏற்படும். ஆனால் சிலருக்கு கோடையில் கூட சரும வறட்சியானது ஏற்படும். மேலும் கோடையில் சரும வறட்சி ஏற்படுவதற்கான காரணமானது குளிர்காலத்தில் ஏற்படும் சரும வறட்சியின் காரணத்தில் இருந்து முற்றிலும் வேறுபடும்.

அதிகப்படியான வெப்பம் உடலில் உள்ள நீர்ச்சத்துக்களை உறிஞ்சி வறட்சியை ஏற்படுத்தும். இதுவும் கோடையில் சருமம் வறட்சியடைவதற்கான காரணங்களில் ஒன்று. அதிலும் சிலருக்கு உதடுகளானது வறட்சியடையும். இதற்கு உடலில் போதிய நீர்ச்சத்து இல்லை என்று அர்த்தம். அதேப் போல் சிலர் கோடையில் நீச்சல் மேற்கொள்வார்கள். அப்படி மேற்கொள்வதாலும் சருமம் வறட்சியடையும்.

இதுப்போன்று வேறு: வெயிலால் கருமையாக மாறிய சருமத்தின் நிறத்தை சரிசெய்ய சில டிப்ஸ்...

ஆகவே கோடையில் சருமம் எதற்கு வறட்சி அடைகிறது என்று சரியான காரணத்தை தெரிந்து கொண்டால், அதற்கேற்றாற் போல் எதையும் நம்மால் பின்பற்ற முடியும். இங்கு கோடையில் சருமம் வறட்சியடைவதற்கான காரணங்களைப் பட்டியலிட்டுள்ளோம். அதைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
நீச்சல்

நீச்சல்

நீச்சல் குளத்தில் உள்ள நீரில் குளோரின் இருப்பதால், அவை சருமத்தை வறட்சி அடையச் செய்யும். ஆகவே நீச்சல் மேற்கொள்வதாக இருந்தால், சரியான சரும பராமரிப்புக்களை பின்பற்ற வேண்டும்.

அதிகமாக வெயிலில் சுற்றுவது

அதிகமாக வெயிலில் சுற்றுவது

அளவுக்கு அதிகமாக வெயிலில் சுற்றும் போது, அது சருமத்தில் உள்ள நீர்ச்சத்துக்களை உறிஞ்சி, இறுதியில் சருமத்தில் வறட்சியை ஏற்படுத்துவதுடன், சரும புற்றுநோய்களையும் ஏற்படுத்திவிடுகிறது.

குறைவாக தண்ணீர் குடிப்பது

குறைவாக தண்ணீர் குடிப்பது

கோடையில் தாகம் அதிகம் எடுக்கும். ஏனெனில் வியர்வை அதிகம் வெளியேறுவதால், அது தாகத்தின் மூலம் உடலுக்கு நீர்ச்சத்து வேண்டும் என்று வெளிப்படுத்தும். அப்படி வெளிப்படுத்தும் போது தண்ணீர் சரியாக குடிக்காமல் இருந்தால், அது அடுத்த கட்டமாக சருமத்தில் வறட்சியை ஏற்படுத்தும்.

ஏ.சி

ஏ.சி

கோடைக்காலத்தில் வெப்பம் அதிகம் இருப்பதால், பலர் ஏ.சியில் தான் இருக்க விரும்புவோம். இதற்காக வீட்டில் கூட ஏர் கூலர் வாங்கி வைத்துக் கொள்வோம். ஆனால் ஏ.சியில் இருந்து வெளிவரும் காற்றானது சருமத்தில் உள்ள எண்ணெய் பசையை உலர செய்து, வறட்சியை ஏற்படுத்தும்.

சுடுநீர் குளியல்

சுடுநீர் குளியல்

சில மக்கள் சுறுசுறுப்புடன் செயல்பட சுடுநீரில் குளிப்பார்கள். ஆனால் கோடையில் அப்படி சுடுநீரில் குளிப்பார்கள். அப்படி சுடுநீரில் குளித்தாலும், சருமம் வறட்சியடையும்.

அதிகமான ஸ்கரப்

அதிகமான ஸ்கரப்

பொதுவாக கோடையில் வெயிலில் சுற்றி திரிவதால், சருமத்தில் உள்ள இறந்த செல்களை வெளியேற்ற ஸ்கரப் செய்வோம். ஆனால் இதை அளவுக்கு அதிகமாக செய்த பின், வெயிலானது சருமத்தில் பட்டால், அது சருமத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும்.

புகைப்பிடிப்பது

புகைப்பிடிப்பது

புகைப்பிடிப்பது உதட்டில் வறட்சியை ஏற்படுத்தும். மேலும் சிகரெட்டானது உடலின் வெப்பத்தை அதிகப்படுத்தி, நாளடைவில் சருமத்தில் வறட்சியை ஏற்படும்.

அதிகமான சோப்பு

அதிகமான சோப்பு

சோப்புக்களை அதிகம் பயன்படுத்தினால், சருமத்தில் உள்ள இயற்கை எண்ணெயானது வெளியேறி, வறட்சியடைய ஆரம்பிக்கும். ஆகவே சோப்புக்களை அளவாக பயன்படுத்துங்கள்.

ஆல்கஹால்

ஆல்கஹால்

ஆல்கஹாலை அதிகம் பருகினால், அது உடலின் உட்பகுதியை வறட்சியடையச் செய்யும். அதிலும் கோடையில் ஹாட் அடித்தால், அது சருமத்தில் வறட்சியை அதிகரிக்கும். வேண்டுமானால் ஒரு பீர் குடிக்கலாம். ஆனால் விஸ்கி, வோட்கா, ஜின் போன்றவை சரும வறட்சியை ஏற்படுத்தும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Causes Of Dry Skin In Summer

Causes of dry skin in summer can be many. These causes of dry skin on face and body come from heat. Read on to know the other causes of dry skin in summer.
Story first published: Wednesday, April 9, 2014, 11:17 [IST]
Desktop Bottom Promotion