For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

முதுமையை தள்ளிப் போடும் உணவுகள்!!!

By SATEESH KUMAR S
|

இன்றைய காலகட்டத்தில் மக்கள் அனைவரும் தங்களை இளமையானவராக உணரவும், வெளிக்காட்டி கொள்ளவும் பல வழிகளை ஆர்வமுடன் தேடுகின்றனர். அமெரிக்க மக்களின் முதன்மையான ஆட்கொல்லி நோயான இதய நோய்க்கும் மற்றும் பிற நோய்களுக்கும், தீவிர உழைப்புடன் கூடிய வாழ்வினை மேற்கொள்வதும், நன்றாக உணவு உண்பதும் காரணமாக அமைகிறது.

சரும சுருக்கங்களை தடுப்பதற்கான சில எளிய வழிகள்!!!

புத்தம் புதிய முழுமையான, ஆன்டி-ஆக்ஸிடண்ட்டுகள், கனிமச்சத்துக்கள், வைட்டமின்கள் நிறைந்த உணவினை உண்பது அனைத்து வித வயதுள்ள பெண்களையும் தங்களை சிறந்தவர்களாக காண்பிக்கவும் உணரவும் வைக்கிறது.

முதுமை தோற்றத்தைத் தடுப்பதற்கு பெர்ரி ஃபேஸ் பேக் போடுங்க...

இப்போது முதுமைக்கு காரணமான விளைவுகளை எதிர்த்து போரிடும் சத்துக்கள் நிறைந்த உணவுக்கான பட்டியல் குறித்து காண்போம். இந்த உணவுகளை உட்கொண்டால், விரைவில் முதுமை ஏற்படுவதைத் தடுக்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பெர்ரி பழங்கள்

பெர்ரி பழங்கள்

ப்ளூபெர்ரி, ஸ்ட்ராபெர்ரி, பிளாக்பெர்ரி மற்றும் நெல்லிக்காய் ஆகிய உணவுகளில் சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடண்ட்டுகளான, ஃப்ளேவோனாய்ட்டுகள் சேர்ந்து காணப்படுகிறது. இது கரிம உணவு வகைகளில் கண்டறியப்பட்டுள்ள முதுமையை தடுக்கும் பண்பினையும் தான் வசம் கொண்டுள்ளது. மேலும் இயக்கு பணிகள் மற்றும் அறியும் திறன் ஆகியவை சீர்கேடு அடைவதை எதிர்த்து பாதுகாக்கிறது. மன அழுத்தத்தினை குறைக்கிறது. மேலும் மூளை செல்களின் சமிக்ஞை திறனை அதிகரிக்கிறது என்கிறார் டாக்டர். பார்பரா சுகிட் ஹாலே.

ஆலிவ் எண்ணெய்

ஆலிவ் எண்ணெய்

ஆலிவ் எண்ணெய் நமது வாழ்வு முழுமைக்கும், நமது சருமத்தினையும், ஆரோக்கியமாக வைத்திட தேவையான சுத்தமான ஆரோக்கியமான கொழுப்பு சத்தினை வழங்குகிறது. பெரும்பாலான வட அமெரிக்கர்களின் உணவு முறையில் குறைவாகக் காணப்படும், மோனோ அன் சாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்கள் செறிந்துள்ள நல்ல கொழுப்புகள் ஆலிவ் எண்ணெயில் அதிகம் காணப்படுகிறது. ஆலிவ் எண்ணெய் உணவிற்கு சுவையினையும் வழங்குகிறது. ஆலிவ் எண்ணெயில் சமைக்கும் போது எப்போதும் எண்ணெயை அதிகம் சூடுப்படுத்தக் கூடாது. ஏனெனில் அதிகப்படியான சூட்டினால் எண்ணெய் புகைய தொடங்கிவிடும். எனவே குறைவான அல்லது நடுத்தரமான வெப்பமே போதுமானது. மேலும் எண்ணெயின் சூட்டினை கண்காணிக்க வேண்டும். ஒரு முறை புகைய தொடங்கினால் அது ஊசி போய் விடும்.

சால்மன்

சால்மன்

சருமத்தை மிருதுவாக வைக்க பெண்கள் வாரத்திற்கு ஒரு முறை 12 அவுன்ஸ் சால்மன் மீனை உண்ண வேண்டும் என்று அமெரிக்கன் ஹார்ட் அசோசியேஷன் பரிந்துரைக்கிறது. சால்மனில் வைட்டமின் பி12, வைட்டமின் டி ஆகியவை செறிந்துள்ள ஒமெகா 3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன. உடலின் கட்டிகளை குறைக்கிறது. இது நாள்பட்ட நோயின் தீவிரத்தை குறைக்கிறது. மேலும் 50 வயதினை கடந்த பெண்களின் பொதுவான பிரச்சனையான இரத்த அழுத்தத்தினை குறைக்கிறது.

பசுமையான இலை கீரைகள்

பசுமையான இலை கீரைகள்

கேல், பசலைக்கீரை, கொலார்டூ கீரைகள், ரோமன் லெட்யூஸ் மற்றும் ஸ்விஸ் கேரட் ஆகியவை வைட்டமின் சி, வைட்டமின் கே, போலிக் அமிலம், இரும்புச்சத்து, பொட்டாசியம், கால்சியம், மெக்னீசியம் ஆகிய சத்துக்கள் நிறைந்துள்ள பசுமையான காய்கறிகள் ஆகும். க்ரீன் கேரட்டில் உள்ள வைட்டமின் பி இதயத்திற்கும், நினைவாற்றலுக்கும் நல்லது. வைட்டமின் ஏ சரும செல்களை புதுப்பிக்க உதவுகிறது. மேலும் எண்ணற்ற பச்சை காய்கறிகளில் கண்டறியப்பட்டுள்ள லுடேயின் பார்வை திறனை பாதுகாக்கிறது. பச்சை காய்கறிகளில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடண்ட் முகத்தின் கோடுகளையும், சுருக்கங்களையும் தடுக்கிறது. பொதுவாக பச்சை காய்கறிகளில் காணப்படும் லைகோஃபைன், லூடென் மற்றும் பீட்டா கரோட்டீன் சருமத்தின் முதுமைக்கு காரணமான புறஊதாக் கதிர்களை தடுக்கிறது. கீரைகளில் காணப்படும் சத்துக்கள், இதய நோய், ஆஸ்துமா மற்றும் முடக்கு வாதம் ஆகிய நோய்க்கு எதிராக போரிடுகிறது. மேலும் சில குறிப்பிட்ட வகை புற்றுநோய்களையும் தடுக்கிறது.

பூண்டு

பூண்டு

பூண்டில் சுவையும், நன்மையும் சம அளவில் கலந்துள்ளன. கல்லீரலின் இயக்கு திறனை அதிகரிக்கவும், நச்சுகளை அகற்றவும் பூண்டு துணை புரிகிறது.செல் சீரழிவினை தடுக்கிறது. இரத்த அழுத்தத்தை குறைத்து, இதய நோய்களை தடுக்கிறது. பட்டியலிலுள்ள மற்ற உணவு வகைகளை போலவே பூண்டிலும் ஆன்டி-ஆக்ஸிடண்ட்டுகள் செறிந்து காணப்படுகிறது. இது அசாதாரண செல்களின் வளர்ச்சியை கட்டுப்படுத்த உதவுகிறது. விழிப்புணர்விற்காக மூளைக்கு செல்லும் இரத்த ஓட்டத்தினை அதிகரிக்கிறது.

குறிப்பு

குறிப்பு

ஆரோக்கியமான உணவினை உண்ண அறிவுறுத்தப்படுவது நம்மையும், நாம் விரும்புகின்ற உணவினையும் பிரித்து வைப்பதற்காக அல்ல. மாறாக நமது உடலுக்கு தேவையான முக்கியமான சத்துகளின் தேவையை பூர்த்தி செய்வதற்காகத் தான். இந்த சிறந்த உணவு தகவல்களின் மூலம் நம்மை அற்புதமாக உணரவும் காண்பிக்கவும் முடியும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Best Anti Ageing Foods For Your Skin

Eating a fresh whole-food diet rich in antioxidants, vitamins and minerals will keep women of all ages feeling and looking their best. Here’s a brief list of foods that have been shown to fight the effects of aging in women:
Desktop Bottom Promotion