For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

முகப்பருத் தொல்லையா? வீட்டிலேயே அதற்கு சூப்பர் சிகிச்சை கொடுங்க...

By Karthikeyan Manickam
|

நம்மில் பெரும்பாலானவர்களுக்கு முகத்தில் பருக்களும், தழும்புகளும் தோன்றுவது வழக்கம். அதிலும் நம் நாட்டுக் காலநிலைக்கு இவை மிகவும் சீக்கிரமாகவே முகம் முழுக்க பரவி விடும்.

முகத்தில் உள்ள ஆயிரக்கணக்கான ஓட்டைகளில் குண்டக்க மண்டக்க எண்ணெய் தேங்குவதால் தான் இத்தகைய பருக்களும், தழும்புகளும் ஏற்படுகின்றன. முகத்தில் பருக்கள் வெடிப்பதைத் தவிர்ப்பதற்கு எத்தனையோ வழிகள் இருந்தாலும் அத்தனையையும் பின்பற்றுவது சாத்தியமில்லை. ஆனால் இப்பிரச்சனையைக் குறைக்க நிறைய வழிகள் உள்ளன.

முகப்பருக்களை நீக்குவதற்கும், அவற்றை வரவே விடாமல் தடுப்பதற்கும் என்றே மார்க்கெட்டில் நிறைய கிரீம்கள் வலம் வருகின்றன. ஆனால் நம் வீட்டில் சாதாரணமாகக் கிடைக்கும் சில இயற்கையான பொருட்களைக் கொண்டு 'மாஸ்க்' செய்வதன் மூலம் முகப்பருத் தொல்லையை முழுவதுமாக ஒழிக்க முடியும்.

இதோ அத்தகைய சில பொருட்கள்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சோடா உப்பு

சோடா உப்பு

முகப்பருக்களையும், தழும்புகளையும் நீக்குவதற்கு வீட்டிலேயே கிடைக்கும் ஒரு அருமையான மருந்து தான் இந்த சோடா உப்பு. பருக்கள் மற்றும் அவற்றைச் சுற்றிலும் ஏற்படும் அரிப்பையும், எரிச்சலையும் இது போக்கும். ஒரு மடங்கு சோடா உப்பில் இரு மடங்கு மிதமான சுடுநீரைக் கலந்து, அதை முகத்தில் தடவி, 10 நிமிடம் கழித்து முகத்தைக் கழுவினால் முகம் பளிச்சிடும். மேலும் அத்துடன் சிறிது தேனையும் கலந்து கொண்டால் முகம் மேலும் பொலிவடையும்.

டீ-ட்ரீ எண்ணெய்

டீ-ட்ரீ எண்ணெய்

இது ஒரு ஆன்ட்டி-செப்டிக் என்பதால், தோலுக்கு மிகவும் நல்லது. 2 ஸ்பூன் சுத்தமான நீரில் ஒரு ஸ்பூன் சோடா உப்பு, ஒரு ஸ்பூன் தேன், மற்றும் 5 அல்லது 6 சொட்டு டீ-ட்ரீ எண்ணெயைக் கலந்து, அதை தினமும் ஒரு முறை முகத்திற்கு 'மாஸ்க்' போட்டால் பருக்கள் ஓடியே போய்விடும்.

கொத்தமல்லி-புதினா ஜூஸ்

கொத்தமல்லி-புதினா ஜூஸ்

கேட்கும் போதே குளுகுளுன்னு இருக்கா? ஒரு ஸ்பூன் கொத்தமல்லி அல்லது புதினா சாற்றுடன் சிறிது மஞ்சளையும் கலந்து, தினமும் இரவு உறங்கச் செல்லும் முன் முகத்தில் தடவ வேண்டும். பருக்களை விரட்டுவதில் மஞ்சளுக்குப் பெரும் பங்கு உண்டு.

தேன் & இலவங்கப் பட்டை

தேன் & இலவங்கப் பட்டை

இலவங்கப் பட்டை பொடியுடன் தேனை நன்றாகக் கலந்து, அதில் கிடைக்கும் பேஸ்ட்டை இரவு தூங்கச் செல்லும் முன் தடவி, மறுநாள் காலையில் இளஞ்சூடான நீரில் முகத்தைக் கழுவ வேண்டும்.

முட்டைகோஸ் இலை

முட்டைகோஸ் இலை

இந்த முட்டைகோஸ் இலையை நன்றாக மசித்து, பருக்கள் இருக்கும் இடத்தில் நன்றாக அழுத்தித் தேய்க்க வேண்டும். பின்னர் 30 நிமிடங்கள் கழித்து முகத்தை அலசிக் கழுவ வேண்டும். சில நாட்களிலேயே நல்ல ரிசல்ட் கிடைக்கும்.

உப்பு, எலுமிச்சைச் சாறு

உப்பு, எலுமிச்சைச் சாறு

முதலில் எலுமிச்சையை முகத்தில் தடவினால் சருமம் வறட்சியடையும். ஒருவேளை இன்னும் சருமம் வறட்சியடைய வேண்டுமானால், பின்னர் 2 ஸ்பூன் எலுமிச்சைச் சாற்றுடன் அரை ஸ்பூன் உப்பைக் கலந்து, முகத்தில் நன்றாக அழுத்தித் தேய்க்க வேண்டும். அப்போது முகத்தில் வெயில் படாதபடியும் பார்த்துக் கொள்ள வேண்டும். 20 அல்லது 30 நிமிடங்கள் கழித்து முகத்தைக் கழுவ வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Anti-Acne Treatment At Home

Acne, pimples, blackheads, and whiteheads appear usually on oily skin due to clogged skin pores. There are a number of all-natural homemade masks that you can apply to get rid of or reduce the breakouts. Here are some of the anti-acne treatments at home. Take a look...
Desktop Bottom Promotion