For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்க சருமம் நல்லா ஆரோக்கியமா தெரியணுமா? இந்த உணவுகளை எடுத்துக்கோங்க...

By Maha
|

ஒருவர் ஆரோக்கியமாக இருப்பதை வெளிப்படுத்துவது ஒருவரின் தோற்றம் தான். குறிப்பாக அவரது சருமம் தான். அத்தகைய சருமம் நன்கு ஆரோக்கியமாக இருக்க வேண்டுமானால், அதற்கு வெறும் ஃபேஸ் பேக் போன்றவற்றை மட்டும் போட்டால் போதாது, ஒருசில உணவுகளையும் உட்கொண்டால் தான், சருமத்தின் ஆரோக்கியம் வெளிப்படும்.

எவ்வளவு தான் ஒருவர் சருமத்திற்கு க்ரீம்களை போட்டு சருமத்தை அழகாக வெளிப்படுத்தினாலும், அதன் ஆரோக்கியம் என்பது உண்ணும் உணவுகளிலேயே உள்ளது. மேலும் ஆரோக்கியம் இருந்தால் தான் உண்மையான அழகு வெளிப்படும். ஆகவே அத்தகைய ஆரோக்கியமான சருமத்தைப் பெற என்ன உணவுகளையெல்லாம் உட்கொள்ள வேண்டும் என்று தமிழ் போல்ட் ஸ்கை ஒருசில உணவுகளைப் பட்டியலிட்டுள்ளது. அதைப் படித்து அவற்றை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஆளி விதை

ஆளி விதை

ஆளி விதையில் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் உள்ளது. இவை உடலில் போதிய அளவில் இருந்தால், முதுமை புள்ளிகள் மற்றும் கோடுகள் ஏற்படாமல் இருக்கும். மேலும் ஆய்வு ஒன்றில், தினமும் சிறிது ஆளி விதை உட்கொண்டு வந்தால், சருமத் தொற்றுகள், அரிப்புகள், அலர்ஜி போன்றவை நீங்கி, சருமம் புத்துணர்ச்சியுடன் மென்மையாக இருக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளது. ஆகவே ஓட்ஸ் சாப்பிடும் போது அவற்றில் சிறிது ஆளி விதை சேர்த்துக் கொள்ளுங்கள்.

ப்ளூபெர்ரி மற்றும் ப்ளாக் பெர்ரி

ப்ளூபெர்ரி மற்றும் ப்ளாக் பெர்ரி

இந்த இரண்டு பழங்களிலுமே ஆன்டி-ஆக்ஸிடன்ட் அதிக அளவில் உள்ளதால், இதனை உட்கொண்டு வந்தால், அது சருமத்தில் பாதிப்படைந்த செல்களை குணப்படுத்தி, சருமத்தை இளமையோடும், ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ளும்.

சூரியகாந்தி விதை

சூரியகாந்தி விதை

சூரியகாந்தி விதைகளில் சருமத்திற்கு தேவையான வைட்டமின் ஈ என்னும் சத்து அதிக அளவில் உள்ளது. மேலும் இதனை தினமும் உணவில் சேர்த்து வந்தால், அது சருமத்தை சூரியக்கதிர்களின் தாக்கத்தில் இருந்து பாதுகாக்கும். எனவே இதனை சாலட், ஓட்ஸ், செரில் போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிடுங்கள். முக்கியமான உணவில் அதிக அளவில் உப்பு சேர்க்க வேண்டாம். ஏனெனில் அவை சருமத்திற்கு நல்லதல்ல.

சாக்லெட்

சாக்லெட்

சாக்லெட் பிரியர்களே! உங்களுக்கு ஒரு அருமையான நல்ல செய்தி. அது என்னவென்றால், சாக்லெட்டை தினமும் அளவாக சாப்பிட்டு வந்தால், சருமத்தில் ப்ளேவோனால் அளவை அதிகரித்து, அதனால் நல்ல பொலிவான சருமத்தைப் பெற உதவுகிறது. முக்கியமாக சாக்லெட்டில் கலோரி அதிகம் இருப்பதால், இதனை அளவாக சாப்பிடுவது நல்லது.

சர்க்கரைவள்ளிக் கிழங்கு

சர்க்கரைவள்ளிக் கிழங்கு

சர்க்கரைவள்ளிக் கிழங்கில் நல்ல பொலிவான மற்றும் ஆரோக்கியமான சருமத்திற்கு தேவையான வைட்டமின் ஏ மற்றும் சி அதிகம் இருப்பதால், அதனை உட்கொள்வது சிறந்தது. எப்படியெனில் இதில் உள்ள வைட்டமின் சி கொலாஜன் உற்பத்தியை அதிகரித்து, சருமத்தை மென்மையாக வைத்துக் கொள்ளவும், வைட்டமின் ஏ ப்ரீ ராடிக்கல்களை தடுத்து, சரும புற்றுநோய் வருவதைத் தடுக்கும்.

தக்காளி

தக்காளி

நிறைய மக்கள் தக்காளியை அதிகம் சாப்பிட்டால் முகப்பரு வரும் என்று சொல்வார்கள். ஆனால் உண்மையில் தக்காளியில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டான லைகோபைன் சருமத்தின் ஆரோக்கியத்தை அதிகரிக்கும். எனவே தக்காளியை சாலட், சாண்ட்விச் போன்றவற்றில் சேர்த்து தவறாமல் சாப்பிடுங்கள்.

தயிர்

தயிர்

தயிர் சாப்பிட்டால் சருமத்திற்கு மிகவும் நல்லது என்பது தெரியுமா? ஆம், தயிரை உட்கொண்டு வந்தால், அதில் உள்ள புரோட்டீன், சரும சுருக்கம், கோடுகள் போன்றவற்றை தடுக்கும். அதிலும் தயிரை சாப்பிடும் போது, அத்துடன் சர்க்கரை சேர்க்க வேண்டாம். ஏனெனில் அது சருமத்திற்கு நல்லதல்ல. எனவே சர்க்கரை, உப்பு எதுவும் சேர்க்காமல் சாப்பிடுங்கள். இதனால் சருமம் இன்னும் அழகாகும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

7 Wonderful Foods That Will Give You Great Skin

There are many tasty foods that can give you great skin, and including some of them in your eating plan is essential. Hopefully, this list of 7 foods to eat to have a gorgeous skin will help you keep your skin healthy and young.
Story first published: Monday, April 28, 2014, 11:03 [IST]
Desktop Bottom Promotion