For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சரும பிரச்சனைகளைப் போக்கும் முட்டை ஃபேஷியல்!

By Maha
|

உங்களுக்கு திருமணம் நடைபெறப் போகிறதா? வாழ்நாளில் மறக்க முடியாத அந்த நாளின் போது அழகாக ஜொலிக்க வேண்டுமா? அப்படியானால் அழகு நிலையங்களுக்குச் சென்று பணம் செலவழித்து தங்களின் அழகைப் பராமரிப்பதை விட, வீட்டிலேயே இருக்கும் ஒருசில பொருட்களைக் கொண்டு அழகைப் பராமரித்தால், சருமத்தின் அழகு அதிகரிப்பதோடு, சருமமும் ஆரோக்கியமாக இருக்கும்.

அதிலும் அழகுப் பராமரிப்பில் அதிகம் பயன்படும் முட்டையைப் பயன்படுத்தி சருமத்தைப் பராமரித்தால், சருமத்தின் பொலிவு மற்றும் மென்மைத் தன்மை அதிகரிக்கும். முக்கியமாக முட்டையானது அனைத்து வகையானது சருமத்தினருக்கும் ஏற்ற ஒரு அழகுப் பராமரிப்பு பொருள் என்பதால் பயப்படாமல் பயன்படுத்தலாம். மேலும் முட்டையைக் கொண்டு சருமத்தைப் பராமரித்தால், சருமத்தில் ஏற்படும் பல்வேறு பிரச்சனைகளானது உடனடியாக நீங்கும். இப்போது முட்டையைக் கொண்டு முகத்தை எப்படியெல்லாம் ஃபேஷியல் செய்யலாம் என்பதைப் பார்ப்போம்.

குறிப்பு: கீழே கொடுக்கப்பட்டுள்ள முட்டை ஃபேஷியல்களானது பெண்களுக்கு மட்டுமின்றி ஆண்களுக்கும் பொருந்தும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
முகப்பரு மற்றும் எண்ணெய் பசை சருமத்தினருக்கு...

முகப்பரு மற்றும் எண்ணெய் பசை சருமத்தினருக்கு...

ஒரு பௌலில் 1 முட்டையின் வெள்ளைக்கருவை சேர்த்து, அத்துடன் 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் 1/2 டீஸ்பூன் தேன் சேர்த்து நன்கு அடித்துக் கொண்டு, பின் அதனை முகத்தில் தடவி 10-15 நிமிடம் நன்கு உலர வைத்து பின் வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இதனால் சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் பசை நீங்கி, பருக்கள் வருவது குறைந்து, சருமத்தின் நிறமும் அதிகரிக்கும்.

வறட்சியான சருமத்தினருக்கு...

வறட்சியான சருமத்தினருக்கு...

அதிகமாக சருமம் வறட்சி அடைந்தால், ஒரு பௌலில் முட்டையின் மஞ்சள் கருவை சேர்த்து, அத்துடன் 1 டீஸ்பூன் தேன் மற்றும் 1 டீஸ்பூன் பாதாம் அல்லது ஆலிவ் ஆயில் சேர்த்து நன்கு மென்மையாக அடித்துக் கொண்டு, பின் அதனை முகத்தில் தடவி உலர வைத்து, வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இதனால் சரும வறட்சி நீங்குவதுடன், சருமமும் பொலிவோடு புத்துணர்ச்சியுடன் இருக்கும்.

சரும கருமையைப் போக்க...

சரும கருமையைப் போக்க...

ஒரு முட்டையின் வெள்ளைக்கருவுடன், 1 டீஸ்பூன் ஓட்ஸ் பொடி மற்றும் 1 டீஸ்பூன் தேன் சேர்த்து நன்கு கெட்டியாக கலந்து, முகத்தில் தடவி 15-20 நிமிடம் ஊற வைத்து, பின் மென்மையாக ஸ்கரப் செய்து, வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இதனால் சருமத்தில் கருமையை உண்டாக்கும் உள்ள இறந்த செல்கள் நீங்கி, சருமம் பளிச்சென்று இருக்கும்.

ஆரோக்கியமான சருமத்தைப் பெற...

ஆரோக்கியமான சருமத்தைப் பெற...

ஒரு முட்டையின் வெள்ளை அல்லது மஞ்சள் கருவுடன், 1/4 அவகேடோ பழத்தையும், 1 டீஸ்பூன் தயிரையும் சேர்த்து நன்கு கலந்து, அதனை முகத்தில் தடவி நன்கு காய்ந்ததும், வெதுவெதுப்பான நீரால் முகத்தை தேய்த்து கழுவ வேண்டும். இதனால் சருமத்திற்கு வேண்டிய ஈரப்பசை கிடைத்து, பொலிவிழந்து காணப்பட்ட முகமானது பொலிவோடும் ஆரோக்கியமாகவும் காணப்படும்.

மென்மையான சருமத்தைப் பெற....

மென்மையான சருமத்தைப் பெற....

இந்த ஃபேஷியலானது வறட்சியான சருமத்தினருக்கு ஏற்றது. இந்த ஃபேஷியலை செய்தால் சருமத்தின் மென்மையானது அதிகரிக்கும். அதற்கு பௌலில் 1 முட்டையின் மஞ்சள் கருவை சேர்த்து, அதில் 1 டீஸ்பூன் தேன் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி காய்ந்ததும், வெதுவெதுப்பான நீரால் முகத்தை கழுவ வேண்டும்.

புத்துணர்ச்சியான சருமத்தைப் பெற...

புத்துணர்ச்சியான சருமத்தைப் பெற...

இந்த ஃபேஸ் பேக் மூலம் சருமத்தில் தங்கியுள்ள கிருமிகள் மற்றும் அழுக்குகளானது முற்றிலும் வெளிவந்துவிடும். இந்த ஃபேஸ் பேக் செய்வதற்கு 1 முட்டையின் வெள்ளைக் கருவுடன், 7-8 ஸ்ட்ராபெர்ரி, 1 டீஸ்பூன் தயிர் மற்றும் சிறு துளிகள் எலுமிச்சை சாறு ஆகியவை தேவை. பின் ஒரு பௌலில் ஸ்ட்ராபெர்ரியை நன்கு அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும். மற்றொரு பௌலில் முட்டை, தயிர், எலுமிச்சை சாறு சேர்த்து அடித்துக் கொள்ள வேண்டும். பின் இரண்டையும் ஒன்று சேர்த்து முகத்தில் தடவி 15-20 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும். இந்த ஃபேஸ் பேக்கை வாரம் ஒருமுறை செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

பொலிவான மற்றும் பளிச்சென்ற சருமத்தைப் பெற...

பொலிவான மற்றும் பளிச்சென்ற சருமத்தைப் பெற...

திருமண நாள் நெருங்கினாலே தூக்கம் வராது. இதனால் முகமானது பொலிவிழந்து சோர்வாக காணப்படும். இத்தகைய சோர்வை போக்க, கீழே குறிப்பிட்ட ஃபேஸ் பேக் போடலாம். அதற்கு ஒரு பௌலில் முட்டையின் மஞ்சள் கருவை சேர்த்து, அதில் 1 டீஸ்பூன் தேன் மற்றும் 1 டீஸ்பூன் தயிர் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். பின் முகத்தை பால் கொண்டு ஒரு முறை துடைத்து எடுத்தப் பிறகு கலந்து வைத்துள்ள முட்டை கலவை முகத்தில் தடவி நன்கு உலர வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இந்த முறையை வாரம் 2-3 முறை செய்து வந்தால், முகம் பளிச்சென்று ஜொலிப்பதைக் காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

7 Easy and Amazing Egg Facials To Enhance Your Beauty

Egg whites and egg yolk masks will do wonders to different types of skin. It will make your face smooth, supple and radiant. Don't believe us? Well, then try these egg facials...
Story first published: Friday, November 7, 2014, 12:03 [IST]
Desktop Bottom Promotion