For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நெற்றியில் ஏற்படும் சுருக்கங்களை நீக்குவதற்கான 6 எளிய வழிகள்!!!

By Ashok CR
|

கவலை இல்லாத மனிதனே இருக்க முடியாது. இன்பம் என்ற ஒன்று இருந்தால் கண்டிப்பாக துன்பமும் இருக்கவே செய்யும். உலகத்தில் வாழும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதத்தில் கவலைகள் இருக்கும். பலருக்கு பண கஷ்டம் என்றால், இன்னும் பலருக்கு உடல் ரீதியான கஷ்டங்கள். இன்னும் சிலருக்கு மன ரீதியான கஷ்டங்கள். இந்த ஒவ்வொரு வகையிலும் பல வகையான கஷ்டங்களை மேலும் வகை பிரிக்கலாம். மனிதனுக்கு அவ்வளவு கஷ்டங்கள் உள்ளது. இப்படி அவன் சந்திக்கும் பல கஷ்டங்களில் ஒன்று தான் தனக்கு வயதாகும் கஷ்டம்.

ஆம், இளவட்டமாக இருக்கும் மனிதனுக்கு, எப்போது உடல்ரீதியான மாற்றங்களால் வயது அதிகரிப்பது தெரிய ஆரம்பிக்கிறதோ, அப்போதே பலருக்கும் உளவியல் ரீதியான கவலைகள் ஆட்கொள்ளும். தன் வயதை மறைத்து இளமையாக காட்சியளிக்க தங்களால் முடிந்த அனைத்தையும் அவர்கள் செய்வார்கள். அப்படி ஒரு அறிகுறி தான் நம் சருமத்தில் ஏற்படும் சுருக்கங்கள்.

வயதாவதால் மட்டும் இது ஏற்படுவதில்லை. அதிக மன அழுத்தம் மற்றும் வேலைப்பளுவினாலும் இது ஏற்படுகிறது. இதனை பயன்படுத்தி சந்தையில் இன்று பல நிறுவனங்கள் இந்த க்ரீம், அந்த க்ரீம் என அடுக்கிக் கொண்டே போகிறது. நாமும் ஒன்றின் மாற்றி ஒன்றாக வாங்கிக் கொண்டே இருக்கிறோம். ஆனால் சீக்கிரமே ஏற்படும் முதிர்ச்சியை போக்க நாம் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை கடைப்பிடிக்கிறோமா என்பதை உறுதி செய்ய வேண்டும். அதேப்போல் இப்படி சந்தையில் உள்ள பொருட்களை நாடுவதை விட வீட்டிலேயே அதற்கான தீர்வை நாம் பெறலாம் என்பது உங்களுக்கு தெரியுமா?

இயற்கையான வழிகளில் வீட்டிலேயே உங்கள் சரும சுருக்கங்களை போக்க சில எளிய டிப்ஸ்களைப் பார்க்கலாமா?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கடுமையான வாழ்க்கை முறை

கடுமையான வாழ்க்கை முறை

நீங்கள் சரியான வாழ்க்கை முறையை தான் வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள் என்பதை உங்களால் உறுதியாக சொல்ல முடியுமா? நீங்கள் ஆரோக்கியமாக உண்ணுகிறீர்களா? நீங்கள் சரியான நேரத்தில் தூங்குகிறீர்களா? நாள் முழுவதும் வேலை பார்த்த பின்பு மிகவும் சோர்வடைந்து விடுகிறீர்களா? உங்களைச் சுற்றி நடக்கும் சின்ன சின்ன விஷயங்களுக்கு கூட எரிச்சல் ஏற்படுகிறதா? இதற்கெல்லாம் சேர்த்து பார்த்தால் கிடைக்கும் பதில் ஒன்று தான் - நீங்கள் சரியான வாழ்க்கை முறையை பின்பற்றாமல் இருக்கிறீர்கள். 40 வயது தொடங்கிய பிறகு, உங்கள் உணவுப்பழக்கங்களிலும், வாழ்க்கை முறையிலும் நல்லதொரு மாற்றத்தை கொண்டு வர வேண்டும். இதை எப்படி சாத்தியமாக்குவது என குழப்பமாக உள்ளதா? உங்கள் உணவுகளில் அளவுக்கு அதிகமான பச்சை காய்கறிகளையும், ஆன்டி-ஆக்ஸிடன்ட்களையும் சேர்த்துக் கொள்ளுங்கள். தினமும் உடற்பயிற்சி செய்யுங்கள் அல்லது அரை மணிநேரமாவது நடை கொடுங்கள். இதனை தொடர்ச்சியாக ஒரு மாதத்திற்கு செய்யுங்கள். உங்கள் முகத்தில் கண்டிப்பாக உங்களால் மாற்றத்தை உணர முடியும்.

ஆலிவ் எண்ணெய் மசாஜ்

ஆலிவ் எண்ணெய் மசாஜ்

சரி, இனி நெற்றியில் காணப்படும் சுருக்கங்களைப் போக்குவதற்கான சில தீர்வுகளை பார்க்கலாம். இதற்காக எக்ஸ்ட்ரா விர்ஜின் ஆலிவ் எண்ணெய்யை கொஞ்சம் எடுத்துக் கொள்ளுங்கள். சிறு துளிகள் இருந்தாலே போதுமானது. சுருக்கங்கள் இருக்கும் பகுதிகளில் வெதுவெதுப்பான ஆலிவ் எண்ணெய்யை கொண்டு, கீழிருந்து மேல் நோக்கி, ஒரு 10 நிமிடங்களுக்கு மென்மையாக மசாஜ் செய்யவும். சிறந்த பலனைப் பெற, கொஞ்சம் தேங்காய் எண்ணெயையும் சேர்த்துக் கொள்ளலாம். ஆலிவ் எண்ணெயுடன் சேரும் தேங்காய் எண்ணெய் ஒரு சிறந்த மாய்ஸ்சுரைசராக விளங்கும். இது சருமத்திற்கு சிறந்த முறையில் நீர்ச்சத்தை அளிக்கும்.

சிட்ரஸ் பழ மசாஜ்

சிட்ரஸ் பழ மசாஜ்

வைட்டமின் சி மற்றும் ஈ வளமையாக உள்ள ஆரஞ்சு மற்றும் எலுமிச்சை போன்ற சிட்ரஸ் பழங்கள், உங்கள் சரும ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியமானதாகும். சருமம் மென்மையாக இருப்பதற்கு சிட்ரஸ் பழங்கள் பெரிதும் உதவி செய்கிறது. இதுப்போக, இப்பழங்களின் தோல்களும் அதே அளவிலான நன்மையை அளிக்கிறது. சுருக்கங்கள் நிறைந்திருக்கும் பகுதிகளில் மற்றும் நீண்ட காலமாக இருக்கும் கரும்புள்ளிகள் இருக்கும் பகுதிகளில் இந்த சிட்ரஸ் மசாஜை முயற்சி செய்து பார்க்கலாம்.

வீட்டு ஃபேஷியல் மசாஜ்

வீட்டு ஃபேஷியல் மசாஜ்

நெற்றியில் உள்ள சுருக்கங்களைப் போக்க ரசாயனம் இல்லாத வீட்டு ஃபேஷியல் மசாஜ்கள் பெரிதும் உதவும். உங்கள் ஃபேஸ் பேக்கை நீங்கள் தயாரிக்கும் போது, சருமத்திற்கு நீரச்சத்தை அளித்து புத்துணர்வோடு வைத்திருக்க உதவும் பொருட்களையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். இந்த ஃபேஸ் பேக்கை முகத்தில் தடவிய பிறகு, முகத்தின் தசைகளை அசைக்காதீர்கள். ஃபேஸ் பேக் தடவப்பட்டிருக்கும் போது, முகத்தின் தசைகளை அசைத்தீர்கள் என்றால், அது நெற்றி சுருக்கங்களுக்கு ஆபத்தாய் விளையும்.

ஆளிவிதை எண்ணெய்

ஆளிவிதை எண்ணெய்

நெற்றியில் உள்ள சுருக்கங்களை தற்காலிகமாக நீக்க ஆளிவிதை எண்ணெய்யை பயன்படுத்தலாம். இரண்டு வாரத்திற்கு, 2-3 டீஸ்பூன் ஆளிவிதை எண்ணெய்யை தொடர்ச்சியாக பயன்படுத்தி வந்தால், இந்த சுருக்கங்கள் மாயமாவதை கண்டு நீங்கள் வியந்து போவீர்கள். இதற்கு மாற்றாக, நீங்கள் விளக்கெண்ணெயையும் பயன்படுத்தலாம். இதுவும் உடனடி பலனை அளிக்கும்.

முட்டை வெள்ளைக்கருவுடன் கற்றாழை ஜெல்

முட்டை வெள்ளைக்கருவுடன் கற்றாழை ஜெல்

கற்றாழை மற்றும் முட்டையின் வெள்ளைக்கரு என இரண்டிலுமே வைட்டமின் ஈ வளமையாக நிறைந்துள்ளது. இதனை இளமைக்கான வைட்டமின் என்றும் கூறலாம். இந்த இரண்டையும் கலந்து ஒரு பேஸ்ட் ஒன்றை தயார் செய்து கொள்ளுங்கள். அதனை நெற்றியில் மெதுவாக தடவுங்கள். அதை அப்படியே ஒரு 15 நிமிடங்களுக்கு விட்டு விட்டு, பின் வெதுவெதுப்பான நீரில் கழுவினால் நல்ல பலன் கிடைக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

6 Simple Ways To Get Rid Of Forehead Wrinkles At Home

Here are some simple tips for you that would surely come in handy when you are looking for natural means to remove wrinkles.
Desktop Bottom Promotion