For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

எண்ணெய் பசை சருமம் உள்ளவர்களுக்கான கோடைக்கால ஃபேஸ் பேக்குகள்!!!

By Maha
|

கோடை வெயிலின் தாக்கத்தினால், அதிகம் வியர்த்து, உடல் அதிகமாக வெப்பமடைகிறது. இந்த நிலை வீட்டை விட்டு வெளியே சென்றால் மட்டுமின்றி, வீட்டிற்குள்ளேயே இருக்கும் போதும் அப்படி தான் உள்ளது. மேலும் இக்காலத்தில் சருமத்தில் அதிகப்படியான பிரச்சனையை சந்திக்கக்கூடும். அவற்றில் அதிகப்படியான எண்ணெய் பசை மற்றும் முகப்பரு போன்றவை முக்கியமானவை.

அதிலும் எண்ணெய் பசை சருமம் உள்ளவர்கள் என்றால் அவர்களின் நிலை இன்னும் மோசமாக இருக்கும். இந்த நிலையில் அவர்கள் அந்த முகப்பருக்களை போக்கவும், சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் பசையையும் போக்க பல முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

இங்கு எண்ணெய் பசை சருமம் உள்ளவர்களுக்கு கோடையில் சருமத்தில் எந்த பிரச்சனையும் வராமல் தடுக்கும் சில ஃபேஸ் பேக்குகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதைப் படித்து முயற்சித்து பாருங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வேப்பிலை, ரோஸ்வாட்டர் மற்றும் ஆரஞ்சு

வேப்பிலை, ரோஸ்வாட்டர் மற்றும் ஆரஞ்சு

ஒரு பௌலில் வேப்பிலை பவுடர், ஆரஞ்சு பொடி மற்றும் முல்தானி மெட்டி சேர்த்து, 1 1/2 டீஸ்பூன் தேன் மற்றும் 1/2 டீஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, அத்துடன் சிறிது ரோஸ் வாட்டர் சேர்த்து பேஸ்ட் போல் செய்து முகம் மற்றும் கழுத்தில் தடவி 15-20 நிமிடம் ஊற வைத்த, பின் குளிர்ந்த நீரில் கழுவி வேண்டும்.

ஆரஞ்சு மற்றும் ஓட்ஸ் ஃபேஸ் பேக்

ஆரஞ்சு மற்றும் ஓட்ஸ் ஃபேஸ் பேக்

இந்த ஃபேஸ் பேக்கிற்கு 3 டீஸ்பூன் ஓட்ஸ், 1 டீஸ்பூன் தேன், 2 டீஸ்பூன் ஆரஞ்சு ஜூஸ் மற்றம் 1 டீஸ்பூன் முட்டை அல்லது தயிர் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி ஊற வைத்து கழுவ வேண்டும்.

அரிசி மாவு மற்றும் மஞ்சள் தூள்

அரிசி மாவு மற்றும் மஞ்சள் தூள்

ஒரு சிறிய பௌலில் 3 டீஸ்பூன் அரிசி மாவு, 1 சிட்டிகை மஞ்சள் தூள், 1 டீஸ்பூன் தேன் மற்றும் வெள்ளரிக்காய் ஜூஸ் சேர்த்து பேஸ்ட் போல் கலந்து கொண்டு, சருமத்திற்கு பயன்படுத்த வேண்டும்.

பாதாம் மற்றும் தேன்

பாதாம் மற்றும் தேன்

இரவில் படுக்கும் முன் 10 பாதாமை நீரில் ஊற வைத்து, மறுநாள் காலையில் அரைத்து பேஸ்ட் செய்து, அதில் சிறிது தேன் சேர்த்து கலந்து, சருமத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும்.

தக்காளி ஜூஸ்

தக்காளி ஜூஸ்

தக்காளியை அரைத்து சாறு எடுத்து, அதில் 3 டீஸ்பூன் அரிசி மாவு மற்றும் 1 டீஸ்பூன் தேன் சேர்த்து கலந்து, அதனை சருமத்தில் தடவி 15 நிமிடம் மசாஜ் செய்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.

முல்தானி மெட்டி மற்றும் ரோஸ் வாட்டர்

முல்தானி மெட்டி மற்றும் ரோஸ் வாட்டர்

முல்தானி மெடி பொடியை ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து அதனை முகம் மற்றும் கழுத்தில் தடவி உலர வைத்து, பின் ரோஸ் வாட்டரை காட்டனில் நனைத்து துடைத்து எடுத்து, இறுதியில் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

6 Simple Summer Face Packs For Oily Skin

Here are some simple face pack recipes I’ve put together with easily available ingredients. These packs are great for controlling the oil secretion of the skin.
Story first published: Saturday, April 26, 2014, 12:23 [IST]
Desktop Bottom Promotion