For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்க சருமத்திற்கு எந்த ஃபேஸ் வாஷ் சிறந்ததாக இருக்கும்?

By Maha
|

தற்போது அனைத்து ஆண்கள் மற்றும் பெண்கள் ஃபேஸ் வாஷை பயன்படுத்துகின்றனர். முந்தைய காலங்களில் ஆண்கள் சோப்பைத் தான் முகத்திற்கு போட்டு கழுவுவார்கள். ஆனால் தற்போது அழகின் முக்கியத்துவம் உணர்ந்து, அனைத்து ஆண்களும் மைல்டு கிளின்ஸரைப் பயன்படுத்தி முகத்தை கழுவ ஆரம்பித்துவிட்டார்கள். பொதுவாக சருமத்தில் நிறைய வகைகள் உள்ளன. ஒவ்வொரு சருமத்தினருக்கும் ஒவ்வொரு வகையான ஃபேஸ் வாஷ்கள் உள்ளன. அதனை சரியாக தெரிந்து கொண்டு பயன்படுத்துவது நல்லது.

ஏனெனில் உடலின் மற்ற பகுதிகளை விட, முகத்தில் உள்ள சருமம் மிகவும் மெல்லியதாகவும், சென்சிடிவ்வாகவும் இருக்கும். எனவே தான் முகத்திற்கு அத்தனை பராமரிப்புகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது. சிலருக்கு எந்த மாதிரியான ஃபேஸ் வாஷ்களை முகத்திற்கு பயன்படுத்த வேண்டும் என்ற சந்தேகம் இருக்கும். எனவே அத்தகையவர்களுக்கு எந்த வகை சருமத்திற்கு எந்த மாதிரியான ஃபேஸ் வாஷ் பயன்படுத்த வேண்டுமென்று சில டிப்ஸ்களை பட்டியலிட்டுள்ளோம். அதைப் படித்து தெரிந்து கொண்டு, முகத்தை அழகாக வைத்துக் கொள்ளுங்கள்.

Which Is The Best Face Wash For You?

பருக்கள் உள்ள சருமம்: முகத்தில் பருக்கள் அதிகமாக இருப்பவர்கள், பருக்கள் உடைந்து, அதனால் மற்ற இடங்களில் பருக்கள் பரவாமல் இருக்க, ஜிங்க் மற்றும் சல்பர் உள்ள ஃபேஸ் வாஷ்களை பயன்படுத்த வேண்டும். இதனால் பருக்கள் உடைந்துவிட்டாலும், பரவாமல் இருக்கும். மேலும் பருக்களும் சீக்கிரம் காய்ந்துவிடும்.

எண்ணெய் பசை சருமம்: அதிகப்படியான எண்ணெய் பசை சருமம் உள்ளவர்கள் ஆயில்-ஃப்ரீ ஃபேஸ் வாஷ்ஷை பயன்படுத்த வேண்டும். சில மக்கள் இந்த மாதிரியான ஆயில்-ஃப்ரீ ஃபேஸ் வாஷ் பயன்படுத்துவதால், சருமம் அதிகம் வறட்சியடைந்துவிடுகிறது என்று நினைக்கின்றனர். ஆனால், உண்மையில் சாதாரண ஃபேஸ் வாஷ்களை பயன்படுத்தினால், பின் முகம் பார்ப்பதற்கு ஃப்ரையிங் பேன் போன்று தான் காணப்படும். ஆகவே ஆயில்-ஃப்ரீ பொருட்களை பயன்படுத்தினால், சருமம் பொலிவோடு இருப்பதோடு, அதிகப்படியான எண்ணெயால் பருக்கள் உடைவதை தடுக்கும்.

வறண்ட சருமம்: வறட்சியான சருமம் இருப்பவர்கள், சருமத்தை எண்ணெய் பசையுடன் வைக்கும் ஃபேஷியல் கிளின்சரை பயன்படுத்த வேண்டும். முக்கியம் சோப்பு பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். அதற்கு பதிலாக பால், பீச் மற்றும் நேச்சுரல் ஆயில் உள்ள ஃபேஸ் வாஷை பயன்படுத்தினால், சருமம் நன்கு பட்டுப் போன்று வறட்சியின்றி மின்னும்.

கரும்புள்ளிகள்: நிறைய கரும்புள்ளிகள் இருப்பவர்கள், ஸ்கரப்பை பயன்படுத்த வேண்டும். தற்போது ஸ்கரப் மற்றும் கிளின்சர் கலந்த ஃபேஸ் வாஷ் உள்ளது. எனவே இவற்றை வாங்கி பயன்படுத்தினால், கரும்புள்ளிகளை நீக்குவதோடூ, சருமத்தில் இருக்கும் இறந்த செல்களையும் வெளியேற்றலாம்.

பழுப்பு நிற சருமம்: சருமம் பழுப்பு நிறத்தில் இருந்தால், ஒயிட்டனிங் ஃபேஷியல் கிளின்சரைப் (whitening facial cleanser) பயன்படுத்த வேண்டும். இந்த வகையான கிளின்சரில், இயற்கை ப்ளீச்சிங் பொருட்களான மஞ்சள் மற்றும் எலுமிச்சை இருக்கும்.

அலர்ஜி உள்ள சருமம்: சருமம் மிகவும் சென்சிடிவ்வாக இருப்பதால், அலர்ஜி மற்றும் ஏதேனும் சில சருமம் நோய்கள் வந்தால், அதற்கு சரியான முறையில் பராமரிப்பானது மிகவும் அவசியம். எனவே பாலால் செய்யப்பட்ட நேச்சுரல் கிளின்சர் தான் சரியாக இருக்கும். வேண்டுமெனில் வேப்பிலை மற்றும் மஞ்சள் உள்ள பொருட்களையும் தேர்ந்தெடுத்து பயன்படுத்தலாம்.

English summary

Which Is The Best Face Wash For You? | உங்க சருமத்திற்கு எந்த ஃபேஸ் வாஷ் சிறந்ததாக இருக்கும்?

Almost all men and women use face wash these days. Because facial skin is much thinner and delicate when compared to the rest of the body. So, you need a specialised face wash to cleanse your skin. You must use facial cleanser that suits your skin type or else, it will be no good for you. Here are some of the common skin types and the face washes that are best suited for them.
Desktop Bottom Promotion