For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பொலிவான சருமம் வேண்டுமா? அப்ப தயிரை யூஸ் பண்ணுங்க...

By Maha
|

கோடைகாலம் என்பதால் சருமத்தில் பல பிரச்சனைகள் ஏற்படும். அதிலும் அதிக நேரம் வெயிலில் வேலை செய்வோருக்கு என்றால் சொல்லவே வேண்டாம். அந்த அளவில் அவர்களுக்கு பிரச்சனைகளே சருமமாக இருக்கும். ஏனெனில் சூரியக்கதிர்களிடமிருந்து வெளிவரும் புறஊதாக்கதிர்களால், சரும செல்கள் பாதிக்கப்பட்டு சருமத்தை கெட்டதாக வெளிப்படுத்துகின்றன. மேலும் அதிக நேரம் வெயிலில் சுற்றுவதால், உடலில் வெப்பமானது அதிகரித்து, பல உடல் பிரச்சனைகளையும் உண்டாக்குகின்றன. குறிப்பாக தோல் புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு அதிகம் உள்ளது.

எனவே இத்தகைய பிரச்சனைகளை போக்குவதற்கு, சருமத்தை குளிர்ச்சியடையச் செய்யும் செயல்களை பின்பற்ற வேண்டும். அதற்கு எங்கும் செல்ல வேண்டாம், வீட்டில் தயிர் இருந்தாலே போதும். ஏனென்றால், தயிருக்கு சருமம் மற்றும் உடலைக் குளிர்ச்சியடையச் செய்யும் தன்மை அதிகம் உள்ளது. மேலும் இது எளிதில் கிடைக்கக்கூடிய பொருள் என்பதால், இந்த பொருளைப் பயன்படுத்தி சருமத்தை சிறப்பாக பராமரிக்கலாம். இப்போது சருமத்தை புத்துணர்ச்சியுடனும், அழகாகவும் வைத்துக் கொள்ள தயிரை எப்படியெல்லாம் பயன்படுத்தலாம், அதனால் எந்த மாதிரியான சருமப் பிரச்சனைகள் நீங்கும் என்பதைக் கொடுத்துள்ளோம். அதைப் படித்து தெரிந்து கொண்டு, பின்பற்றி வாருங்கள்...

Ways To Use Curd On Face

* நீண்ட நேரம் வெயிலில் வேலை செய்த பின்னர், வீட்டிற்கு வந்ததும், தயிரை வைத்து சருமத்தை சுத்தம் செய்ய வேண்டும். அதுவும் தயிரை முகத்தில் தடவி, 15 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இதனால் தயிரில் உள்ள லாக்டிக் அமிலம், சருமத்தை குளிர்ச்சியடையச் செய்யும்.

* தயிரை, மஞ்சள் தூளுடன் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 15 நிமிடம் மசாஜ் செய்து, பின் வெதுவெதுப்பான நீரில் கழுவினால், சரும செல்கள் புத்துணர்ச்சியடையும்.

* அதிகமான வெயிலால் சருமத்தில் ஆங்காங்கு கருமையாக, காயமடைந்தது போன்று இருக்கும். இத்தகைய காயங்களை போக்குவதற்கு, தயிரில் சிறிது சீமைச் சாமந்தி எண்ணெய் சேர்த்து கலந்து, முகத்தில் தேய்த்து, 15 நிமிடம் ஊற வைத்து நீரில் அலச வேண்டும்.

* முகத்தில் பரு பிரச்சனை உள்ளவர்கள், புளித்த தயிரை முகத்திற்கு பயன்படுத்துவது நல்லது. ஏனெனில் அதில் உள்ள ஆன்டி-பாக்டீரியல் பொருள், பருக்களை போக்கும்.

* ஆரஞ்சு தோல் பொடியை, தயிரில் கலந்து வாரத்திற்கு மூன்று முறை தடவி, மாஸ்க் போட்டால், பொலிவான சருமத்தை பெறலாம். வேண்டுமெனில் தயிரை தேனுடன் சேர்த்தும் பயன்படுத்தலாம்.

* சருமத்தில் சுருக்கங்கள் காணப்பட்டால், அப்போது அதனைப் போக்குவதற்கு தயிரைப் பயன்படுத்தினால், அதில் உள்ள லாக்டிக் அமிலம், இறந்த சரும செல்களை நீக்கி, சருமத்துளைகளை இறுக்கமடையக் செய்யும். அதற்கு ஆலிவ் ஆயிலை தயிரில் சேர்த்து, சருமத்தில் தடவி, 30 நிமிடம் ஊற வைத்து, வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இந்த முறையை வாரத்திற்கு மூன்று முறை செய்தால், நல்ல பலன் கிடைக்கும்.

* தினமும் குளிப்பதற்கு முன் தயிரை கடலை மாவுடன் சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, பிறகு குளித்தால், சருமம் புத்துணர்ச்சியுடன் அழகாக இருக்கும்.

English summary

Ways To Use Curd On Face | பொலிவான சருமம் வேண்டுமா? அப்ப தயிரை யூஸ் பண்ணுங்க...

If you want to keep your skin fresh, young and supple, and make others jealous of your bright and glowing skin, start following these simple tips to use curd on face.
Story first published: Wednesday, April 24, 2013, 14:54 [IST]
Desktop Bottom Promotion