தோற்றம் பொலிவு பெற உபயோகமாக இருக்கும் சில சமையலறை பொருட்கள்!!!

நாள் முழுவதும் அடிக்கும் வெயிலில் அலைந்து வேலை செய்பவராக இருந்தால், முகம் கருமையடைந்து போகும். நீண்ட நேர வேலைக்கு பின், கண்கள் வீக்கம் அடைந்து அயர்ச்சி அடையும். பின்பு அழகை மேம்படுத்த நாள் கணக்கில் அழகு சாதன நிலையங்களுக்கு ஓட வேண்டும், அதற்கு பணத்தை வாரி இறைக்க வேண்டும். அழகு சாதன நிலையங்களில் பயன்படுத்தும் பொருட்களும் இரசாயனம் கலந்தவை. அதை பயன்படுத்துவதால், சரும ஆரோக்கியமும் கெட்டுப் போகலாம்.

அதிலும் நாள் முழுவதும் வேலை பார்த்து விட்டு, வீடு திரும்பிய ஒரு சில மணி நேரத்தில் ஒரு பார்ட்டி இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். முகம் சோர்வடைந்து காணப்படும். அப்போது என்ன செய்ய போகிறீர்கள்? கவலையை விடுங்கள். வீட்டில் உள்ள சமையலறை பொருட்கள் உங்களுக்கு கை கொடுக்கும். அவைகளை கொண்டு உங்கள் தோற்றத்தை ஒரு சில நிமிடங்களில் பொலிவடைய செய்து விடலாம். அதற்கு செலவும் கிடையாது!

தயிர்

கோடை வெயில் சுட்டெரித்து, உடம்பில் பல இடங்களில் பல நிறங்களை மாறியிருக்கும். பிரச்சனை இல்லை. வீட்டில் தயார் செய்த தயிரை பாதிக்கப்பட்ட சருமத்தில் தடவுங்கள். இது சூரிய வெப்பத்தால் ஏற்பட்ட சரும அழற்சியை குணப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், பழுப்பு நிற சருமத்தை சரிசெய்யும். ஒருவேளை வீட்டில் தயிர் தயாரிப்பதில்லை என்றால், வெளியில் வாங்கும் பாக்கெட் தயிரையும் பயன்படுத்தலாம். எண்ணெய் பசை சருமமாக இருந்தால் தயிரை பயன்படுத்தாதீர்கள்.

கிளிசரின் மற்றும் எலுமிச்சை ஜூஸ்

பழுப்பு நிற சருமத்தை சரிசெய்ய தயிர் நன்றாக வேலை செய்தாலும் கூட, சென்சிட்டிவ் சருமங்களுக்கும் எண்ணெய் பசையுள்ள சருமங்களுக்கும், அடிக்கடி பருக்கள் வரும் சருமங்களுக்கும் தயிர் சரிபட்டு வராது. தயிர் மற்றும் அனைத்து பால் பொருட்களிலும் பாக்டீரியா இருப்பதால், அவைகளை சருமத்தில் தடவும் போது, பருக்களின் பிரச்சனைகள் உண்டாகும் வாய்ப்பு உள்ளது. அதனால் பரு இல்லாத சருமத்திற்கு, கிளிசரினுடன் எலுமிச்சை சாறு கலந்து சருமத்தில் தடவுங்கள். இந்த கலவை கண்டிப்பாக சரி சமமாக இருக்க வேண்டும். இவை இரண்டையும் சரி சமமாக கலந்து, முகத்தில் தடவி ஒரு 15-20 நிமிடங்கள் வரை ஊற வைக்கவும். பின் குளிர்ந்த நீரில் முகத்தை அலசுங்கள்.

எலுமிச்சை ஜூஸ்

எலுமிச்சை ஜூஸ் சற்று அமிலத் தன்மையை கொண்டுள்ளதால், உங்கள் முடியின் நிறத்தை லேசான வெளுப்பாக மாற்ற உதவும். நான்கில் ஒரு பங்கு எலுமிச்சை ஜூஸை மூன்று பங்கு தண்ணீரில் கலந்து கொள்ளவும். தலை முடியை கலரிங் செய்ய சந்தையில் விற்கப்படும் பொருட்களை விட இது சிறப்பாக செயல்படும்.

வெள்ளரிக்காய்

சோர்ந்து வீக்கமடைந்த கண்களை காணும் போது, அதிகமாக வேலை செய்து அயர்ந்து போயுள்ளீர்கள் என்பதை காட்டும். அதற்கு நீண்ட நேர தூக்கம் ஒரு நிவாரணியாக விளங்கினாலும், உடனடி தீர்வு காண ஒரு துண்டு வெள்ளரிக்காயை நறுக்கி, கண்ணின் மேல் வைத்து 20-25 நிமிடம் வரை அப்படியே வைத்திடுங்கள்.

டீ பேக்

டீ பேக்கை வெதுவெதுப்பான நீரில் சில நிமிடங்கள் நனைத்து, பின் அந்த பையை இரண்டு கண்களிலும் வைப்பது அயர்ச்சி அடைந்த கண்களை பளிச்சிட வைக்க மற்றொரு சிறந்த வழியாகும். கண்களில் வைத்து 20 நிமிடங்களுக்கு அதை அப்படியே விட்டு விடுங்கள்.

பாதத்தில் எப்போதும் துர்நாற்றம் வீசுகிறதா? நான்கு அல்லது ஐந்து டீ பேக்குகளை அல்லது 3 டீஸ்பூன் டீ தூளை தண்ணீரில் போட்டு சுட வைத்து, பின் ஆர விடவும். பின் அதனுடன் குளிர்ந்த நீரை கலந்து, அதில் பாதங்களை 30 நிமிடங்களுக்கு ஊற வையுங்கள். பின் பாதத்தை காய வைத்து, இதற்கென உள்ள மாய்ஸ்சுரைசரைத் தடவி கொள்ளுங்கள். நாற்றம் அதிகமாக உள்ளவர்கள், இந்த முறையை ஒரு நாளைக்கு 2 முறை கையாள வேண்டும். நாற்றம் நீங்கியவர்கள் அது மீண்டும் வராமல் இருக்க, வாரம் இரண்டு முறை இதனை செயல்படுத்தலாம்.

 

ஆரஞ்சு ஜூஸ்

ஆரஞ்சு ஜூஸில் வைட்டமின் சி நிறைந்துள்ளதால், அதனை ஒரு சிறந்த நிறம்பதப்படுத்தல் கருவியாக பயன்படுத்தலாம். அதனைக் கொண்டு முகத்தை மசாஜ் செய்தால், சோப்பை கொண்டு எடுக்க முடியாத தூசு படிந்த அழுக்கு மற்றும் அழுக்குப் பசையை எளிதில் நீக்கி விடலாம். இதனை தயார் செய்ய அரை ஆரஞ்சை எடுத்து, அதனுடன் 1 1/2 டீஸ்பூன் எலுமிச்சை ஜூஸ் மற்றும் கால் கப் தண்ணீரை கலந்து, இந்த கலவை வழுவழுவென்று வரும் வரை நன்றாக அடிக்கவும். பின் ஒரு பஞ்சுருண்டையை அதனுள் நனைத்து, முகத்தில் தடவுங்கள்.

கடலை மாவு, தயிர் மற்றும் மஞ்சள்

வழுவழுப்பான, தூய்மையான, கறையில்லா சருமத்தை பெற, 3 டீஸ்பூன் தயிருடன், ஒரு ஸ்பூன் கடலை மாவு மற்றும் சிறிய டீஸ்பூன் மஞ்சளை கலந்து கொள்ளவும். பின் அதனை அடர்த்தியான பேஸ்ட் போல் தயார் செய்து கொள்ளவும். அடுத்து அதனை சமமாக உங்கள் முகம் முழவதும் தடவி, 20 நிமிடங்களுக்கு அப்படியே விட்டு விடுங்கள். பின் குளிர்ந்த நீரில் முகத்தை கழுவிக் கொள்ளுங்கள்.

வினிகர்

தலை சருமத்தை வினிகர் கொண்டு மெதுவாக மசாஜ் செய்யவும். 15-20 நிமிடங்களுக்கு பின்னர் தலையை நல்ல மூலிகை ஷாம்பு பயன்படுத்தி மெதுவாக கழுவுங்கள். பொடுகு தொல்லை அதிகமாக இருந்தால், இந்த செயல்முறையை இரண்டு வாரங்களுக்கு, வாரம் மூன்று முறையாவது செயல்படுத்த வேண்டும்.

தேன் மற்றும் ஆலிவ் எண்ணெய்

2 டீஸ்பூன் தேனை, ஒரு ஸ்பூன் ஆலிவ் எண்ணெயுடன் கலந்து, ஒரு பேஸ்ட்டை தயார் செய்து கொள்ளவும். பின் அதனை கொண்டு தலை முடியை நன்றாக மசாஜ் செய்யுங்கள். குறிப்பாக இந்த மசாஜ் முடியின் வேரிலிருந்து ஆரம்பித்து, முடியின் நுனியில் வந்து முடிய வேண்டும். பின் தலையை ஷவர் கேப்பை கொண்டு மூடுங்கள். இதனால் இந்த கலவை தலையில் ஆழமாக உள்ளிறங்கும். ஒரு 20 நிமிடங்களுக்கு பின்னர், மூலிகை ஷாம்புவை கொண்டு, மெதுவாக முடியை அலசிக் கொள்ளுங்கள்.

ப்ளாக் டீ பை

ப்ளாக் டீ பையை தண்ணீரில் ஊற விடுங்கள். பின் அதனை எடுத்து உதட்டின் மேல் ஒரு 10 நிமிடங்களுக்கு அழுத்தவும். இந்த வழிமுறையை எத்தனை முறை வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம். ப்ளாக் டீயில் அதிகளவு டானின் உள்ளதால், அது உதடுகளை தளராமல் மென்மையாக வைத்திருக்கும்.

கொத்தமல்லி இலைகள்

கொத்தமல்லி இலைகளை அரைத்து, அதிலிருந்து எடுத்த சாற்றினை உதட்டில் மசாஜ் செய்தால், உதடுகள் சிவப்பு நிறத்துடன் மென்மையாக இருக்கும்.

See next photo feature article

உருளைக்கிழங்கு

உருளைக்கிழங்குகளில் கேட்கொலேஸ் அடங்கியுள்ளதால், சருமத்தை வெளுப்பாக்க அழகு சாதனங்களில் அது சேர்க்கப்படுகிறது. குறிப்பாக அதனை கண்ணை சுற்றி உருவாகும் கருவளையங்களை நீக்கவும் பயன்படுத்தலாம். உருளைக்கிழங்கை துருவி, பின் அதனை ஜூஸ் செய்து, அதனை கண்களுக்கு கீழே தடவி, 15 நிமிடங்களுக்கு பின் குளிர்ந்த நீரில் முகத்தை கழுவிவிடுங்கள்.

Read more about: beauty tips, skin care, அழகு குறிப்புகள், சரும பராமரிப்பு, இயற்கை பொருட்கள்
English summary

Using Kitchen Products To Improve Appearance

With a glam party to attend in a couple of hours, what do you do when aren’t exactly looking like lady-killer material? By using these readily available kitchen products, you can spruce up your appearance within minutes.
Story first published: Saturday, September 21, 2013, 12:43 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter