For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

குளிர்காலத்தில் ஏற்படும் சரும வறட்சியைத் தடுக்கும் ஃபேஸ் பேக்குகள்!!!

By Maha
|

குளிர்காலம் ஆரம்பித்த நிலையில், சருமத்தின் வறட்சியும் அதிகரித்து காணப்படும். ஏனெனில் குளிர்காலத்தில் மிகவும் குளிர்ச்சியான காற்று வீசுவதால், அவை சருமத்தில் உள்ள ஈரப்பசையை முற்றிலும் உறிஞ்சி வெளியேற்றி, சருமத்தை அதிகப்படியான வறட்சிக்கு உள்ளாக்கிவிடும்.

ஆகவே குளிர்காலத்தில் சருமத்தை முறையாக பராமரிப்பது அவசியமாகிறது. ஒருவேளை சரியாக பராமரிக்காவிட்டால், சருமத்தில் ஏற்படும் வறட்சி அதிகரித்து, ஆங்காங்கு வெடிப்புகள் மற்றும் வெள்ளைத் திட்டுக்கள் காணப்படும். இத்தகைய பிரச்சனைகள் வராமல் இருக்க வேண்டுமெனில், சருமத்தை ஈரப்பசையுடன் வைத்துக் கொள்ள வேண்டும். அதற்கு வெறும் மாய்ஸ்சுரைசரை மட்டும் தடவினால் போதாது. அவ்வப்போது சருமத்திற்கு ஃபேஸ் பேக்குகளை போட்டு வர வேண்டும்.

இப்போது குளிர்காலத்தில் ஏற்படும் சரும வறட்சியை தடுக்கும் சில ஃபேஸ் பேக்குகளைப் பார்ப்போமா!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அவகேடோ

அவகேடோ

அவகேடோ குளிர்காலத்தில் அதிகம் கிடைக்கக்கூடிய பழம். ஆகவே அந்த பழத்தை அரைத்து, அதில் சிறிது ஆலிவ் ஆயில் சேர்த்து கலந்து, ஈரமான சருமத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து கழுவினால், சருமத்தில் ஈரப்பசையானது நீங்காமல் இருக்கும்.

பால் மற்றும் தேன்

பால் மற்றும் தேன்

இது மிகவும் எளிமையான ஃபேஸ் பேக். அதற்கு பால் மற்றும் தேனை ஒன்றாக கலந்து, அதனை முகம் மற்றும் கழுத்தில் தடவி, 3-4 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.

முட்டை

முட்டை

முட்டையின் வெள்ளைக் கருவை நன்கு அடித்து, அதனை முகத்தில் தடவி 5-6 நிமிடம் மசாஜ் செய்து, 25 நிமிடம் ஊற வைத்து, குளிர்ச்சியான நீரில் கழுவினால், சருமம் வறட்சியின்றி, மென்மையாகவும், சுருக்கங்களின்றியும் இருக்கும்.

வாழைப்பழ பேக்

வாழைப்பழ பேக்

வாழைப்பழம் கூட சருமத்தில் ஈரப்பசையை தங்க வைக்கும். அதற்கு வாழைப்பழத்தை நன்கு மசித்து, அதில் சிறிது தேன் மற்றும் தயிர் சேர்த்து கலந்து, முகத்திற்கு மாஸ்க் போட வேண்டும்.

ஓட்ஸ் ஃபேஸ் பேக்

ஓட்ஸ் ஃபேஸ் பேக்

ஓட்ஸ் கொண்டு முகத்தை ஸ்கரப் செய்தாலும், சருமத்தை வறட்சியில் இருந்து தடுக்கலாம். அதற்கு ஓட்ஸை பொடி செய்து, அதில் தேன், தயிர், சேர்த்து கலந்து, சில துளிகள் கிளிசரின் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும்.

பப்பாளி

பப்பாளி

பப்பாளியில் உடல்நல நன்மைகள் மட்டுமின்றி, பல அழகு நன்மைகளும் அடங்கியுள்ளன. அதற்கு பப்பாளியை மசித்து, அதில் சிறிது பால் சேர்த்து கலந்து, 10 நிமிடம் மசாஜ் செய்து கழுவ வேண்டும்.

கிளிசரின்

கிளிசரின்

கிளிசரினை ரோஸ் வாட்டருடன் சேர்த்து கலந்து, சருமத்தில் தடவி வந்தால், சருமத்தில் வறட்சி ஏற்படுவதை தவிர்க்கலாம்.

ஆரஞ்சு மற்றும் தேன்

ஆரஞ்சு மற்றும் தேன்

ஆரஞ்சு பழத் தோலை உலர வைத்து பொடி செய்து, அதனை பால் சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி ஊற வைத்து கழுவினால், சருமத்தின் அழகை அதிகரித்து வெளிப்படுத்துவதோடு, வறட்சியையும் போக்கலாம்.

பால் பவுடர் மற்றும் பாதாம் எண்ணெய்

பால் பவுடர் மற்றும் பாதாம் எண்ணெய்

குளிர்காலத்தில் ஏற்படும் வறட்சியைப் போக்க, பால் பவுடரை பாதாம் எண்ணெய் சேர்த்து கலந்து, சருமத்திற்கு ஃபேஸ் பேக் போட்டால், வறட்சி நீங்கி, முகத்தில் பொலிவு அதிகரிக்கும்.

கடலை மாவு மற்றும் தயிர்

கடலை மாவு மற்றும் தயிர்

கடலை மாவை தயிர் சேர்த்து கலந்து, முகத்திற்கு ஃபேஸ் பேக் போட்டால், சருமத்தில் வறட்சி ஏற்படுவதை தடுக்கலாம்.

ரோஸ் வாட்டர்

ரோஸ் வாட்டர்

ரோஸ் வாட்டரில் தேன் சேர்த்து கலந்து, முகத்தை தடவி ஊற வைத்து துடைத்தால், சருமத்தில் உள்ள அழுக்குகள் முற்றிலும் நீங்குவதோடு, சருமமும் வறட்சியின்றி அழகாக இருக்கும்.

கொக்கோ பவுடர் மற்றும் தேன்

கொக்கோ பவுடர் மற்றும் தேன்

கொக்கோ பவுடர் கொண்டு மாஸ்க் போட்டால், வறட்சி நீங்குவதுடன், சருமமும் மென்மையாகும். ஆகவே கொக்கோ பவுடரில் தேன் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 5-10 நிமிடம் ஊற வைத்து, குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Treat Dry Skin In Winter: Face Packs

Winter skin care is very important and dealing with dry skin is crucial. Dry patches, flaky and rough skin due to dryness can spoil the beauty. Here are the best homemade face packs to get rid of dry skin during winter.
Story first published: Saturday, November 23, 2013, 17:46 [IST]
Desktop Bottom Promotion