For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

முகம் பளிச்சென்று மாற வீட்டிலேயே ப்ளீச் பண்ணுங்க...

By Maha
|

முகம் பொலிவாக இருக்க வேண்டுமென்று எத்தனையோ செயல்களை பெண்களும் சரி, ஆண்களும் சரி செய்வார்கள். அதற்காக அவர்கள் அழகு நிலையங்களுக்குச் சென்று, பணத்தை அதிகம் செலவழித்து, முகத்திற்கு ப்ளீச், ஃபேஷியல் என்று பலவற்றை செய்வார்கள். பெரும்பாலானோர் ப்ளீச்சிங் தான் செய்வார்கள். என்ன தான் அழகு நிலையங்களுக்குச் சென்று முகத்தை அழகுப்படுத்தினாலும், அந்த ப்ளீச்சிங் செய்யும் போது அதில் உள்ள கெமிக்கல்கள் சருமத்திற்கு சில சமயம் பெரும் பிரச்சனையை ஏற்படுத்தும். சொல்லப்போனால், ப்ளீச்சிங் அனைவருக்குமே சரியானதாக இருக்கும் என்பதில்லை. சிலருக்கு முகத்தில் பருக்கள், வறட்சி போன்றவற்றை ஏற்படுத்தும்.

எனவே எப்போது முகத்தை அழகுப்படுத்த வேண்டும் என்று நினைத்தாலும், செயற்கை முறையை கடைபிடிக்காமல், இயற்கை முறையில் ஈடுபடுவது நல்லது. அதிலும் ப்ளச்சிங் செய்ய வேண்டும் என்று நினைத்தால், அதற்கும் இயற்கை முறை உள்ளது. அந்த இயற்கை முறையை கடைபிடித்தால், எந்த ஒரு சருமப் பிரச்சனையையும் தடுக்கலாம். அதுவும் அதனை வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே செய்யலாம். இதனால் உடனே பொலிவைப் பெற முடியாவிட்டாலும், தொடர்ந்து செய்து வரை முகம் இயற்கையாகவே பொலிவாகிவிடும். சரி, அது என்னவென்று பார்ப்போமா!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஆலிவ் ஆயில் ப்ளீச்

ஆலிவ் ஆயில் ப்ளீச்

ஆலிவ் ஆயிலில் உள்ள நன்மைகளை சொன்னால் சொல்லிக் கொண்டே போகலாம். அந்த அளவு நன்மைகள் அதில் அடங்கியுள்ளன. எப்படி அது உடலுக்கு ஆரோக்கியத்தை தருகிறதோ, அதேப் போல், சருமத்திற்கும் சிறந்தது. அதற்கு அந்த ஆலிவ் ஆயிலில், சிறிது சர்க்கரையை சேர்த்து, முகத்தில் தடவி ஸ்கரப் செய்து, பின் கழுவ வேண்டும்.

ஆரஞ்சு ப்ளீச்

ஆரஞ்சு ப்ளீச்

சருமத்தைப் பொலிவாக்க சிட்ரஸ் பழங்கள் மிகவும் சிறந்தது. அதிலும் அதன் தோல்களில் சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளன. எனவே சிட்ரஸ் பழங்களில் ஒன்றான ஆரஞ்சு பழத்தின் தோலை சூரிய வெப்பத்தில் 2 நாட்கள் காய வைத்து, பொடி செய்து, அதோடு மில்க் க்ரீம் சேர்த்து கலந்து, பேஸ்ட் போல் செய்து கொண்டு, முகம் மற்றும் கழுத்திற்கு தடவி, 10 நிமிடம் ஊற வைத்து, பின் நீரில் அலச வேண்டும்.

தக்காளி ப்ளீச்

தக்காளி ப்ளீச்

தக்காளி போன்ற நிறம் வேண்டுமென்றால், இந்த தக்காளி ப்ளீச் செய்யலாம். அதற்கு தக்காளியை அரைத்து, அதில் சிறிது எலுமிச்சை சாற்றை விட்டு கலந்து, முகத்தில் தடவி, ஊற வைத்து, பின் கழுவினால் முகம் பட்டுப் பொன்று மின்னும்.

வெள்ளரிக்காய் ப்ளீச்

வெள்ளரிக்காய் ப்ளீச்

வெள்ளரிக்காயின் சிறிது துண்டை எடுத்து அரைத்து, அதில் சிறிது எலுமிச்சை சாறு மற்றும் கடலை மாவு சேர்த்து கலந்து பேஸ்ட் போல் கலந்து, முகத்திற்கு மாஸ்க் போன்று போட்டு, ஊற வைத்து கழுவ வேண்டும். இதனால் முகம் பொலிவோடு காணப்படும்.

மஞ்சள் ப்ளீச்

மஞ்சள் ப்ளீச்

மஞ்சளை வைத்து ப்ளீச் செய்தால், முகம் அழகாக ஒரு தனி லுக்கோடு காணப்படும். ஆனால் அதிலும் சில பிரச்சனைகள் உண்டு. அது என்னவெனில் மஞ்சளில் பல வகைகள் உள்ளன. அதிலும் சமையலுக்குப் பயன்படுத்தும் மஞ்சளைப் பயன்படுத்தினால், அது முகத்தில் அரிப்பு அல்லது அலர்ஜியை ஏற்படுத்தும். எனவே மஞ்சள் கிழங்கை வாங்கி, அதனை அரைத்து, அதில் சிறிது எலுமிச்சையை சேர்த்து, பிறகு முகத்தில் தடவ வேண்டும்.

வினிகர் ப்ளீச்

வினிகர் ப்ளீச்

சருமம் மந்தமாக எந்த ஒரு பொலிவுமின்றி பருக்களுடன் காணப்பட்டால், அதற்கு வெள்ளை வினிகர் ப்ளீச் சிறந்ததாக இருக்கும். ஏனெனில் அதில் வைட்டமின் சி உள்ளது. இது சருமத்தை பளிச்சென்று, எந்த ஒரு பிரச்சனையுமின்றி பொலிவாக்கும். அதற்கு வினிகரை காட்டனில் நனைத்து, முகத்தை துடைக்க வேண்டும். இதனால் சருமம் இயற்கையாக பக்கவிளைவுகளின்றி பொலிவாகும்.

வெந்தயம் ப்ளீச்

வெந்தயம் ப்ளீச்

சருமம் பளிச்சென்று இருக்க, ஒரு பாத்திரத்தில் வெந்தயம் 1 டீஸ்பூன் மற்றும் கசகசா 1 டீஸ்பூன் போட்டு, தண்ணீர் ஊற்றி ஊற வைத்து, பின் அதனை அரைத்து, அத்துடன் சிறிதளவு எலுமிச்சை சாற்றை விட்டு கலந்து, முகத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து, குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Top 7 Natural Skin Bleach Recipes | முகம் பளிச்சென்று மாற வீட்டிலேயே ப்ளீச் பண்ணுங்க...

Here are some standard home remedies for naturally bleaching skin at home that will suffice to show results, maybe not immediately but definitely over a period of time.
Story first published: Thursday, January 3, 2013, 14:10 [IST]
Desktop Bottom Promotion