For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சருமத்தை சரியாக பாதுகாப்பதற்கான சில வழிகள்!!!

By Boopathi Lakshmanan
|

சரும பிரச்சனைகளை வரவழைப்பதில் சூரிய வெளிச்சம் அதிகளவு படுதல், வறண்ட காற்று மற்றும் சுற்றுச் சூழல் சீர்கேடு ஆகியவையே காரணம் என்று நாம் எண்ணிக் கொண்டிருக்கிறோம். ஆனால், நமது தோலுக்கு வேட்டு வைக்கும் வேறு சில காரணிகளையும் கண்டறிந்துள்ளது. நோஷ் டிடாக்ஸ் டெலிவரி என்ற சுகாதாரம் மற்றும் நலன் சார்ந்த நிறுவனத்தின் தலைமை இயக்க அதிகாரியும் மற்றும் அந்நிறுவனத்தின் நிறுவனருமான கீதா சித்து என்பவர், femalefirst.co.uk என்ற இணைய தளத்தில் உடலின் மிகப்பெரிய பகுதியான சருமத்தை பாதிக்கும் இந்த காரணிகள் பற்றி குறிப்பிட்டுள்ளார்.

ஹார்மோன்களும் கூட தோலை பாதிக்கும் விஷயங்களில் பங்களிக்கின்றன. மாதவிடாய் காலங்களில் ஓய்ஸ்ரோஜெனின் (Oestrogen) அளவுகளில் ஏற்படும் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் தோலிலும் ஏற்படுகின்றன. ஓய்ஸ்ட்ரோஜெனின் அளவு குறையும் போது, புதிய தோலை உருவாக்கும் செல்களின் உற்பத்தி குறைகிறது, அதன் மூலம் சரும பகுதி கடினப்பட்டு விடுகிறது. இதனால் சரும பகுதிகளில் போதுமான அளவு தண்ணீர், உறுதித்தன்மை மற்றும் நீள் தன்மை ஆகியவற்றை பராமரிக்க முடியாமல் போய் விடுகிறது. நீங்கள் இந்த பிரச்சனைகளை சமாளிக்கும் வழிகளை தேடிக் கொண்டிருந்தால், தொடர்ந்து படியுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள்

ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள்

பல்கிப் பெருகிவரும் கிருமிகளின் தாக்குதல்களை சமாளிக்க உங்கள் உணவில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுளை அதிகளவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். வண்ணமயமான காய்கறிகளை, குறிப்பாக ஆரஞ்சு மற்றும் பச்சை நிற காய்கறிகளான கேரட்டுகள், இனிக்கும் தக்காளி, கீரைகள், டார்க் பெர்ரி வகையைச் சேர்ந்த ப்ளுபெர்ரிகள் மற்றும் ப்ளாக் பெர்ரிகளில் அதிக அளவில் உள்ள அந்தோசையனின் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் உங்கள் தோலின் பாதுகாவலர்களாக செயல்படும் உணவுகளாகும்.

பழங்கள்

பழங்கள்

உங்கள் தோலில் பழங்களை தடவுவது தோலை பாதுகாக்கும் வழிமுறைகளில் ஒன்றாகும். நன்கு பழுத்த கொய்யாப்பழத்தை அரைத்து உங்கள் முகத்தில் தடவி ஃபேஸ் மாஸ்க் போல பயன்படுத்துங்கள். அவ்வாறு முகத்தில் தடவி 15 முதல் 20 நிமிடங்கள் விட்டு விடவும். இயற்கையான எண்ணெய்கள் கலந்துள்ளதால் அது ஒரு களிம்பு போல செயல்படவும் மற்றும் வைட்டமின் ஈ சத்துக்களை கொண்டிருப்பதாலும் இந்த ஃபேஸ் மாஸ்க்கில் ஈரப்பதத்தை உண்டாக்கும் தன்மைகள் உள்ளன.

சன் ஸ்கிரீன்

சன் ஸ்கிரீன்

குறைந்த பட்சம் 15 அளவிற்கு சூரிய பாதுகாப்பு காரணிகளை (SPF-Sun Protection Factors) கொண்டிருக்கும் நல்ல தரமான சன் ஸ்க்ரீன்கள் உங்கள் சருமத்தை சிறந்த வகையில் பாதுகாக்கும். உங்கள் சருமத்தில் சூரிய ஒளி நேரடியாக படுவதை தவிர்ப்பது முக்கியமான சரும பாதுகாப்பு முயற்சியாகும். நீங்கள் சூரிய வெளிச்சத்தில் வெளியே செல்வதற்கு ஒரு மணி நேரம் முன்பாகவே சன் ஸ்க்ரீனை போட்டுக் கொள்வதையும், 2 மணி நேரத்திற்கு ஒரு முறை அதனை மீண்டும் போட்டுக் கொள்வதையும் மறக்காமல் பின்பற்றி வரவும்.

புகைப்பழக்கம் வேண்டாம்

புகைப்பழக்கம் வேண்டாம்

தோலில் சுருக்கங்கள் ஏற்படுத்துவதில் முக்கிய பங்காற்றி வரும் பழக்கமாக புகைப்பழக்கம் உள்ளது. சருமத்தின் வெளிப்புறங்களில் உள்ள மிகச்சிறிய இரத்த நாளங்களின் அளவை புகைப்பழக்கம் குறைத்துவிடும். இதன் மூலம் சருமத்திற்குள் ஆக்ஸிஜன் சென்று வருவதும் குறைந்து விடும். புகைப்பழக்கத்தால் கொலாஜென் மற்றும் நீட்சித் தன்மை ஆகியவையும் குறைந்துவிடும். நீங்கள் புகைப்பழக்கத்தை நிறுத்தினால் சருமம் பளபளக்கும் என்று உணர இந்த காரணங்களே போதும்.

ஆரோக்கியமான உணவு

ஆரோக்கியமான உணவு

சரிவிகிதமான உணவு உங்களுடைய தோலை பராமரிப்பதில் சிறந்த பங்கு வகிக்கிறது. நீங்கள் சரும பராமரிப்பு டிப்ஸ்களை வேண்டினால், முதலில் பின்பற்ற வேண்டிய டிப்ஸ் - உங்கள் சருமத்திற்கு ஏற்ற உணவுகளை சாப்பிடுங்கள் என்பது தான். ஆக்ஸிஜன் எதிர் பொருட்கள் உள்ள உணவுகள், பழங்கள், காய்கறிகள், தானிங்கள் மற்றும் புரதங்களை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். வைட்டமின் சி உள்ள உணவுகள், சுகாதாரமற்ற கொழுப்புகள் குறைவாக உள்ள உணவுகள் மற்றும் பதப்படுத்தப்பட்ட அல்லது சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட்கள் உள்ள உணவுகளுக்கு முக்கியத்துவம் கொடுங்கள்.

தேவை ஓய்வு

தேவை ஓய்வு

மன அழுத்தம் தரும் ஹார்மோன்கள் உங்கள் தோலுக்கு முதன்மையான எதிரிகளாக உள்ளன. சரும பராமரிப்பை உங்கள் வாழ்வில் தொடர்ந்து செய்து வர விரும்பினால், நீங்கள் அமைதியாகவும் மற்றும் ஓய்வாகவும் இருப்பதே அதற்கான எளிமையான வழியாகும். சுகாதாரமான சரும மற்றும் அமைதியான மனது ஆகியவற்றை உருவாக்க நினைத்தால், உங்களுடைய மன அழுத்தத்தை கையாளத் தேவையான வழிமுறைகளை தேர்ந்தெடுங்கள். உடற்பயிற்சியும், யோகாசனமும் இவ்வழிமுறைகளில் ஒன்றாகும்.

தண்ணீர் தேவை

தண்ணீர் தேவை

போதுமான அளவு தண்ணீரை குடிக்க வேண்டியதும் முக்கியமானதாகும். சரும பராமரிப்பில் மிகவும் முக்கியமான டிப்ஸாக இருப்பது தோலை தண்ணீருடன் பராமரித்து வருவது தான். இதன் மூலம் உங்கள் தோலில் ஈரப்பதமும், தோலின் நீட்சித் தன்மையும் முறையாக பராமரிக்கப்படும். இவ்வாறு செய்வதால் உங்கள் தோலில் சுருக்கங்கள் விழுவது குறைந்து சரும இளமையாகவும், மிருதுவாகவும் இருக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Skin Spoilers To Watch Out For

Generally we consider exposure to sun, dry winds and pollution as the major culprits for skin problems. But, according to a report in IANS, there are other skin spoilers too, which makes skin are more important. If you are looking for skin care tips, here is a list of some of the anti-spoilers.
Story first published: Tuesday, December 10, 2013, 19:15 [IST]
Desktop Bottom Promotion