For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

குளிர்காலத்தில் பொலிவான சருமம் வேண்டுமா? அப்ப இந்த சீசன் காய்கறிகளை யூஸ் பண்ணுங்க...

By Ashok CR
|

குளிர்காலம் வந்துவிட்டாலே நமது சருமமும் முகமும் வறண்டு பொலிவிழந்து காட்சியளிக்கும். இதனை போக்குவதற்கு நாம் குளிர்காலங்களில் நமது சரும பராமரிப்பில் சிறிது கவனம் செலுத்த வேண்டும். கடைகளில் கிடைக்கும் தரமான மாயிஸ்ச்சரைசெர் அல்லது கிரீம்களை வாங்கி தொடர்ந்து உபயோகிக்க வேண்டும்.அல்லது, வீட்டிலேயே எளிய முறையில் தேங்காய் எண்ணெய் போன்றவற்றை உபயோகித்து உங்கள் வறண்ட சருமத்தை பாதுகாக்கலாம்.

குளிர்காலங்களில் நமது சருமத்திற்கு போதுமான பராமரிப்பும் ஊட்டச்சத்து அளிப்பும் இன்றியமையாத ஒன்றாகும். அதனால், குளிர்காலங்களில் விளையும் காய்கறிகளை பயன்படுத்தி சருமத்தை பராமரிப்பதற்கான டிப்ஸ் சிலவற்றை படிக்கலாம். பீன்ஸ், முட்டைக்கோஸ், முளைகள், கீரை, பசலை கீரை, கேரட், வெங்காயம், பட்டாணி மற்றும் அஸ்பாரகஸ்(தண்ணீர்விட்டான் கிழங்கு) போன்றவை குளிர்கால காய்கறிகள் ஆகும். இந்த காய்கறிகளில் அதிக அளவில் விட்டமின்களும் ஊத்தச்சத்தும் நிறைந்துள்ளன. இவற்றை உங்கள் வீட்டு தோட்டத்தில் எளிதாக வளர்த்து தினமும் சாப்பிடலாம்.

இந்த குளிர்கால காய்கறிகளில் சுகாதார பலன்கள் மட்டுமல்லாது சரும பராமரிப்பு பலன்களும் நிறைந்துள்ளது. குளிர்கால காய்கறிகளை பயன்படுத்தி சிறந்த முறையில் சருமத்தை பராமரிக்கலாம். இதற்கு பல வழிகள் உள்ளன. இந்த காய்கறிகளை பச்சையாக சாப்பிடலாம் அல்லது இவற்றை உங்கள் சருமத்தில் தடவவோ தேய்க்கவோ செய்யலாம்.

கீழே குறிப்பிட்டுள்ள இந்த குளிர்கால காய்கறிகளை பயன்படுத்தி உங்கள் சருமத்தை பராமரிக்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அஸ்பாரகஸ் (தண்ணீர்விட்டான் கிழங்கு)

அஸ்பாரகஸ் (தண்ணீர்விட்டான் கிழங்கு)

தண்ணீர்விட்டான் கிழங்கு செடி ஒரு குளிர்கால செடியாகும். இதன் இலைகள், தண்டு மற்றும் வேர்களை மருத்துவ பலன்களுக்கு உபயோகிப்பார்கள். இந்த காய்கறி மட்டுமே சரும பராமரிப்பிற்கும் பயன்படுத்தப்படுக்கின்றது. தண்ணீர்விட்டான் கிழங்கில் பல ஊட்டச்சத்து மற்றும் சருமநலப் பலன்களும் நிறைந்துள்ளது. இதில் சுத்தம் செய்யும் தன்மை நிறைந்துள்ளதால் இதனை உங்கள் சருமத்தில் நேரடியாக தடவி சுத்தம் செய்யலாம். குளிர்காலங்களில் நமது சருமத்தில் வறண்ட திட்டுகள் ஏற்படும். இந்த தண்ணீர்விட்டான் கிழங்கு சருமத்தில் ஏற்படும் வறண்ட புண்களுக்கு மருந்தாக உபயோகப்படுத்தப்படுகின்றது. மேலும், பருக்கள் பிரச்சனைகளுக்கும் உபயோகப்படுத்தப்படுகின்றது. ஆனால், இந்த செடியை உபயோகிப்பதில் கவனம் தேவை. ஏன்னெனில், இது சில நேரங்களில் உங்கள் சருமத்திற்கு பொருந்தாமல் அரிப்பை ஏற்படுத்தக்கூடும். அதனால், முதலில் உங்கள் கைகளில் சிறிது தடவி எரிச்சல் அல்லது புண் ஏற்படுகின்றதா எனச் சோதித்து பார்க்க வேண்டும்.

கேரட்

கேரட்

கேரட்டுகள் ஊட்டச்சத்து நிரம்பியவை. இதில் இன்றியமையாத வைட்டமின்கள் நிறைந்துள்ளதால் அவை உங்கள் கண்களுக்கு நல்லது. அதேபோல், கேரட்டுகள் உங்கள் சரும பயன்களுக்கும் உதவி புரியும். கேரட்டில் நிறைந்துள்ள வைட்டமின்கள் புறஊதாக்கதிர்களிடம் இருந்து உங்கள் சருமத்தை பாதுகாக்கும் மேலும் சரும மூப்படைவு, சரும நிறமாற்றம், பருக்கள் மற்றும் சரும திட்டுகள் போன்றவற்றை தடுக்க உதவும். கேரட்டை ஃபேஸ் பேக்காக உபயோகப்படுத்தலாம். அதுமட்டுமல்லாது, கேரட் சாற்றை குடிப்பது, பச்சையாக சாப்பிடுவது போன்றவை குளிர்கால காய்கறிகளை பயன்படுத்தி சரும பராமரிப்பு வழிகளில் ஒன்றாகும்.

முளைக்கட்டிய தானியங்கள்

முளைக்கட்டிய தானியங்கள்

குறைவான கொழுப்புசக்தியை அளிக்கும் இந்த ஊட்டச்சத்து நிறைந்த உணவு நமது சருமத்திற்கும் சிறந்த பலனை தரும். இந்த முளைக்கட்டிய தானியங்களை ஏராளமான டயடீஷியங்களும், சருமத்தை பராமரிக்க சரும நிபுணர்களும், உடை எடையை குறைப்பதற்கும் பரிந்துரை செய்கின்றனர். இவை நமது முகத்தில் உள்ள அழுக்கையும் எண்ணெய் பசையையும் நீக்க உதவுகின்றது.இதன் மூலமாக முகத்தில் வரும் பருக்கள் நீக்கப்படுகின்றது. முளைக்கட்டிய தானியங்கள் மூப்படைதல் அறிகுறிகளான சுருக்கம், கோடுகள், கருவளையம் போன்றவற்றை தடுக்கின்றது. இந்த முளைக்கட்டிய தானியங்கள் குளிர்கால காய்கறிகளை பயன்படுத்தி செய்யும் சரும பராமரிப்பு வழிகளில் ஒன்றாகும்.

லெட்யூஸ்

லெட்யூஸ்

இந்த கீரையை பெரும்பாலும் சாலட், சாண்ட்விட்ச், பர்கர் போன்றவற்றில் தான் உபயோகிக்கின்றனர். இந்த பச்சை காய்கறியில் ஏராளமான சரும பலன்கள் நிறைந்துள்ளது. இதில் உள்ள வைட்டமின் ஏ உங்கள் சருமத்திற்கு புத்துயிர் அளிக்கின்றது. இதில் நிறைந்துள்ள பொட்டாசியம் உங்கள் சருமத்தை ஜொலிக்கச் செய்கின்றது. மேலும், இதனை உட்கொள்ளுவதன் மூலமாக உங்கள் உடலில் உள்ள நச்சுபொருட்கள் நீக்கப்பட்டு உங்கள் உடலும் சருமமும் ஆரோக்கியமாக இருக்கச் செய்கின்றது.

பசலைக் கீரை

பசலைக் கீரை

"பாப்பாய் - தி செய்லர் மென் " அவர்களின் விருப்பமான இந்த கீரை நமக்கு சூப்பர்மென் சக்தியை அளிக்கின்றது. இதன் சக்தி அதிகரிக்கும் பலன்களோடு உங்கள் சருமத்திற்கும் நல்ல பலனை கொடுக்கும். இதில் நிறைந்துள்ள ஏராளமான வைட்டமின்களும், மினரல்களும் உங்கள் சருமத்தை ஒளியடையச் செய்து ஆரோக்கியமாக வைக்க உதவும். மேலும், பருக்களை போக்குவதற்கும், பழுதடைந்த சருமத்தை சரிசெய்வதற்கும், சூரிய கதிர்களிடம் இருந்து பாதுகாப்பதற்கும் உதவுகின்றது. அதனால், இது சருமப் பராமரிப்பிற்கு பயன்படுத்தப்படும் குளிர்கால காய்கறிகளில் ஒன்றாகும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Skin Care Using Winter Vegetables

Apart from health benefits, winter vegetables also have skin care benefits. Skin care can be taken efficiently using winter vegetables. There are many ways of doing so. These vegetables can be either eaten raw or used externally on the skin in the form of a paste or scrub.
Story first published: Saturday, November 30, 2013, 19:07 [IST]
Desktop Bottom Promotion