For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

முகத்தில் உள்ள முடியை போக்க வேண்டுமா? இத ட்ரை பண்ணுங்க...

By Maha
|

பெண்களின் அழகைக் கெடுப்பதில் முகத்தில் தோன்றும் முடிகளும் ஒன்று. இதனைப் போக்குவதற்கு நிறைய பராமரிப்புகளை பெண்கள் பின்பற்றி வருகின்றனர். இருப்பினும், அவை வளர்ந்து, முகத்தை அசுத்தமாகவும், கருப்பாகவும், அழுக்குடன் இருப்பது போன்றும் வெளிப்படுத்துகிறது. இத்தகைய முடிகளைப் போக்குவதற்கு ப்ளீச்சிங் தான் சிறந்தது. ஆனால் அவை சருமத்திற்கு மிகவும் நல்லதல்ல. ஏனெனில் கெமிக்கல் கலந்த ப்ளீச்சிங்கை பயன்படுத்தினால், சருமத்தில் உள்ள ஈரப்பை அனைத்தும் நீங்கி, முகம் வறட்சியுடன், பருக்கள் தோன்ற ஆரம்பிக்கும்.

எனவே அத்தகைய கெமிக்கல் முறையைப் பயன்படுத்துவதற்கு இயற்கை முறைகளில் செய்யப்படும் ஸ்கரப்களைப் பயன்படுத்தினால், முகத்தில் இருக்கும் அழுக்குகள் வெளியேறுவதோடு, முகத்தில் முடிகளையும் நீக்கலாம். இப்போது அந்த இயற்கை ஸ்கரப்கள் என்னவென்று பார்ப்போமா!!!

Scrubs To Get Rid Of Facial Hair
மஞ்சள் மற்றும் கடலை மாவு: ஒரு பௌலில் கடலை மாவு மற்றும் மஞ்சள் தூளை சேர்த்து கலந்து, அதில் கடுகு எண்ணெய் சேர்த்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி, ஸ்கரப் செய்ய வேண்டும். குறிப்பாக முடி உள்ள இடத்தில் நன்கு தேய்த்து, கழுவ வேண்டும். இந்த முறையை வாரத்திற்கு இரண்டு முறை செய்து வந்தால், முகத்தில் வளரும் முடியின் வளர்ச்சி தடைபடும்.

மஞ்சள் மற்றும் உப்பு: ஸ்கரப் செய்வதற்கு உப்பு மற்றொரு சிறந்த அழகுப் பொருள். இதனை வைத்து ஸ்கரப் செய்தால், சருமத்தில் உள்ள இறந்த செல்கள் நீங்குவதோடு, முகத்தில் இருக்கும் முடியும் உதிர்ந்து, அதன் வளர்ச்சி தடைபடும். அதற்கு மஞ்சள் தூளுடன், உப்பு சேர்த்து, சிறிது எலுமிச்சை சாறு மற்றும் பால் விட்டு கலந்து, முகத்தில் தடவி, 5 நிமிடம் மசாஜ் செய்து நீரில் கழுவ வேண்டும். இதனை வாரத்திற்கு 2 முறை செய்தால், முகம் பளபளப்புடன் இருப்பதோடு, முகத்தில் இருக்கும் முடியும் இயற்கையாக நீங்கிவிடும்.

எலுமிச்சை மற்றும் தேன்: இந்த ஸ்கரப்பை செய்தால், முகம் நன்கு வெள்ளையாவதோடு, முடியில்லாத பட்டுப் போன்ற சருமத்தைப் பெறலாம். இந்த முறைக்கு எலுமிச்சை சாற்றுடன், தேன் சேர்த்து கலந்து, முகம் மற்றும் கழுத்திற்கு தடவி, 15-20 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.

சர்க்கரை ஸ்கரப்: இந்த ஸ்கரப்பில் முகத்தை கழுவி, பின் சர்க்கரையை கொண்டு, ஸ்கரப் செய்ய வேண்டும். இதனை வாரத்திற்கு இரண்டு முறை தொடர்ந்து செய்து வந்தால், முகத்தில் வளரும் முடியின் வளர்ச்சியை தடுக்கலாம். பருக்கள் உள்ளவர்களும் இந்த முறையை பின்பற்றினால், பருக்களை போக்கலாம்.

சோள மாவு, சர்க்கரை மற்றும் முட்டை: ஒரு பௌலில் முட்டையின் வெள்ளைக் கருவை உடைத்து ஊற்றி, சோள மாவு மற்றும் சர்க்கரை சேர்த்து கலந்து, முகத்திற்கு தடவி 15 நிமிடம் மசாஜ் செய்து, பின் 5 நிமிடம் ஊற வைத்து, குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இந்த முறையை வாரத்திற்கு மூன்று முறை செய்ய வேண்டும்.

தயிர், கடலை மாவு மற்றும் மஞ்சள் தூள்: கடலை மாவு, தயிர் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து கலந்து, பேஸ்ட் போல் செய்து, முகத்தில் தடவி, 20 நிமிடம் ஊற வைத்து, பின் பாலால் முகத்தை கழுவி, இறுதியில் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இதனை வாரத்திற்கு இரண்டு முறை செய்தால், முகத்தில் வளரும் முடியை தடுக்கலாம்.

இவையே முகத்தில் வளரும் முடியை தடுக்கும் ஸ்கரப்கள். நண்பர்களே! வேறு ஏதாவது ஸ்கரப்கள் தெரிந்தால், அதை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

English summary

Scrubs To Get Rid Of Facial Hair | முகத்தில் உள்ள முடியை போக்க வேண்டுமா? இத ட்ரை பண்ணுங்க...

There are few homemade facial scrubs that can remove hair from the face and also cleanse it. If you want to remove unwanted body hair, try these scrubs.
Story first published: Wednesday, January 30, 2013, 12:20 [IST]
Desktop Bottom Promotion