For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சருமத்தில் ஏற்பட்டுள்ள தீக்காயங்களுக்கான சிகிச்சைகள்!!!

By Ashok CR
|

சூரிய கதிர்கள், வெப்பம் மற்றும் தீயினால் ஏற்படுவது தான் சருமத்தின் தீக்காயங்கள். அவை சின்னதாகவும் இருக்கும், சில சமயம் பெரிய காயமாக கூட இருக்கலாம். இந்த காயங்களால் உங்கள் சருமம் வீக்கமடையும் அல்லது சிவக்கும் அல்லது சரும திசுக்கள் பாதிப்படையும். அதனால் இவ்வகை காயங்களுக்கு முறையாக சிகிச்சை அளிக்க வேண்டும். இல்லையென்றால் அது ஆபத்தான சரும பிரச்சனைகளை விளைவிக்கும்.

சரும தீக்காயங்களை அடிப்படையில் மூன்று வகையாக பிரிக்கலாம். முதலாவதாக முதல் டிகிரி தீக்காயம். இது சிறிய அளவிலான தீக்காயங்களே. இது வெளிதோளில் வீக்கத்தை உண்டாக்கும். இதனை வீட்டில் உள்ள பொருட்களை கொண்டே சுலபமாக குணப்படுத்தி விடலாம். இரண்டாம் டிகிரி மற்றும் மூன்றாம் டிகிரி தீக்காயங்கள் தான் மற்ற இரண்டு வகையாகும். இவை ஆபத்தான சரும திசு பாதிப்பை உண்டாக்கும். இதனை குணப்படுத்த மருத்துவரின் உதவி கண்டிப்பாக தேவைப்படும்.

முதல் டிகிரி தீக்காயங்களுக்கான சில சிகிச்சை முறையை தான் இப்போது நாம் பார்க்க போகிறோம். வீட்டில் உள்ள பொருட்களை கொண்டே இதனை குணப்படுத்தலாம். அவைகள் என்னெவென்று பார்க்கலாமா?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தேன்

தேன்

தேன் என்பது பொதுவாக தீக்காயங்களுக்கு பயன்படுத்தப்படும் ஒரு மருந்தாகும். தீக்காயம் ஏற்பட்ட இடத்தை தேனால் தடவினால் தழும்பு விழுவது குறையும். சுத்தமான பச்சை தேனில் ஆண்டி-செப்டிக் மற்றும் குணப்படுத்தும் குணங்கள் அடங்கியுள்ளது.

வினிகர்

வினிகர்

தண்ணீர் போல இருக்கும் வினிகர் தீக்காயங்களினால் ஏற்பட்டுள்ள எரிச்சலை தனித்து குளிர்ச்சியான உணர்வை ஏற்படுத்தும். வினிகரை பயன்படுத்தும் முன்பு அதனை தண்ணீரில் கலந்தே பயன்படுத்த வேண்டும். வினிகரில் ஒரு துணியை முக்கி அதனை தீக்காயம் பட்ட இடத்தில் தடவவும். இதனை சீரான முறையில் செய்தால் உடனடி நிவாரணி கிடைக்கும். இதனால் வலி மற்றும் வீக்கம் நீங்கும்.

கற்றாழை

கற்றாழை

கற்றாழையில் ஏஸ்மன்னென் என்ற பொருள் அதிகமாக உள்ளது. இது தீக்காயங்களை குணப்படுத்தி புத்துணர்வு அளிக்கும் ஆற்றலை கொண்டது. கற்றாழை ஜெல்லை நேரடியாக தீக்காயங்களில் தடவலாம். இதனால் எந்த ஒரு பக்க விளைவுகளும் ஏற்படாது. தீக்காயங்களினால் ஏற்பட்டுள்ள எரிச்சலும் விரைவாக அகலும். பெரிய தீக்காயங்களுக்கும் கூட கற்றாழையை பயன்படுத்தலாம்.

தண்ணீர் கலந்த லாவெண்டர் எண்ணெய்

தண்ணீர் கலந்த லாவெண்டர் எண்ணெய்

தண்ணீர் கலந்த லாவெண்டர் எண்ணெய்யை பயன்படுத்தினாலும் கூட தீக்காயங்களினால் ஏற்பட்டுள்ள வலி நீங்கும். கத்தாழை ஜெல், வைட்டமின் C, லாவெண்டர் எண்ணெய் மற்றும் வைட்டமின் ஈ ஆகியவற்றின் கலவையை தடவினால் நல்ல பயனை அளிக்கும். அது தீக்காயத்தினால் ஏற்பட்டுள்ள சரும வீக்கத்தையும் வலியையும் குறைக்கும். எரிச்சல் தன்மையையும் அது குறைக்கும்.

வாழைப்பழத் தோல்

வாழைப்பழத் தோல்

வாழைப்பழத் தோலை பயன்படுத்தினால் தீக்காயங்கள் ஏற்பட்டுள்ள இடத்தில் வலியும் வீக்கமும் குறையும் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. வாழைப்பழத் தோலை தீக்காயம் ஏற்பட்ட இடத்தில் வைத்து அது கருப்பாக மாறும் வரை அப்படியே வைத்திருக்கவும். வாழைப்பழத் தோல் மற்றும் தயிரை கலந்து பயன்படுத்தினால் அதிக பயனை அளிக்கும்.

குளிர்ந்த நீர்

குளிர்ந்த நீர்

தீக்காயங்கள் ஏற்பட்டுள்ள இடத்தில் குளிர்ந்த நீரை ஊற்றினாலோ ஐஸ் ஒத்தனம் கொடுத்தாலோ வலி நன்றாக குறையும். இது தற்காலிக நிவாரணி தான். தீக்காயம் ஏற்பட்ட உடனே இதனை செய்ய வேண்டும்.

மாய்ஸ்சுரைசர் அல்லது வலி நீக்கும் ஆயின்மெண்ட்

மாய்ஸ்சுரைசர் அல்லது வலி நீக்கும் ஆயின்மெண்ட்

சருமத்தில் எரிச்சல் நீடித்தால் மாய்ஸ்சரைஸர் அல்லது வலி நீக்கும் ஆய்ன்மென்ட்டை பயன்படுத்த வேண்டும். இது எரிச்சலை நீக்கி குளிர்ச்சியை ஏற்படுத்தும். இவைகளை மருந்து கடைகளில் சுலபமாக பெறலாம்.

மேற்கூறிய சிகிச்சைகள் சரிவர வேலை செய்யாமல் வலி நீடித்தால் உடனே மருத்துவரை அணுக வேண்டும். அதை செய்யாமல் போனால் அது காயத்தை பெரிதாக்கி சருமத்தில் நிரந்தர தழும்பை உண்டாக்கி விடும். மேலும் சரும அமைப்பு நயத்தையும் பாதித்து விடும். சரும தீக்காயங்கள் ஏற்படும் போது பாதுகாப்பாக இருந்து போதிய நடவடிக்கைகளை எடுப்பது அவசியமாகும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Remedies To Treat Skin Burn

Skin burns are caused by sun radiations, heat and fire. They can be either minor or major burns. These burns cause swelling and reddenin ok skin damaging the skin tissues. Hence skin burns should be taken proper care as they might cause seriohs skin concerns.
Story first published: Thursday, November 28, 2013, 18:36 [IST]
Desktop Bottom Promotion