For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மூக்கில் உள்ள அதிகப்படியான எண்ணெய் பசையைப் போக்க சில டிப்ஸ்...

By Maha
|

பொதுவாக அனைவருக்கும் அழகாக இருக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால் அது நடப்பதில்லை. அதிலும் எண்ணெய் பசை சருமம் உள்ளவர்களுக்கு, இது மிகவும் கடினமான விஷயமாக இருக்கும். அதுவும் அவர்களுக்கு மூக்கில் தான் அதிகப்படியான எண்ணெய் பசையானது இருக்கும். இதனால் மூக்கைச் சுற்றி கரும்புள்ளிகள், அழுக்குகள் போன்றவை அதிகம் தங்கி, அந்த இடத்தையே ஒருவித தோற்றத்தில் வெளிப்படுத்தும்.

இருப்பினும் சரியான சரும பராமரிப்புக்களை மேற்கொண்டால், அழகாக வைத்துக் கொள்ள முடியும். இங்கு அப்படி மூக்கில் இருக்கும் அதிகப்படியான எண்ணெய் பசையைப் போக்க என்னவெல்லாம் செய்ய வேண்டுமென்று கொடுத்துள்ளோம். அதைப் பின்பற்றி மூக்கை அழகாக வைத்துக் கொள்ளுங்கள்.

Remedies For An Oily Nose

* மூக்கில் அதிகப்படியான எண்ணெய் பசை இருப்பதால் தினமும் 2 முறை கிளின்சிங் செய்ய வேண்டும். இதனால் சருமத் துளைகளில் தங்கியுள்ள அழுக்குகளை வெளியேற்றி, சருமத்தில் ஏற்படும் கரும்புள்ளிகள் மற்றும் பருக்கள் ஏற்படுவதைத் தடுக்கலாம்.

* தினமும் முடிந்த வரையில் முகத்தை அடிக்கடி கழுவ வேண்டும். இதன் மூலம் சருமத்தில் அழுக்குகள் நீண்ட நேரம் படிவதைத் தடுக்கலாம். குறிப்பாக அப்படி கழுவியப் பின்னர், சுத்தமான துணி அல்லது டிஸ்யூ பேப்பர் மூலம் துடைக்க வேண்டும்.

* உடனே சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் பசையை போக்க வேண்டுமானால், எலுமிச்சை சாற்றினை பஞ்சில் நனைத்து மூக்கைத் துடைக்க வேண்டும். இந்த முறையை தினமும் 2-3 முறை செய்ய வேண்டும். இதனால் அதிகப்படியான எண்ணெய் பசையில் இருந்து விடுபடலாம்.

* வீட்டில் தேன் மற்றும் பாதாம் இருந்தால், அவற்றை அரைத்து, அதனை முகத்தில் தடவி ஊற வைத்து கழுவ வேண்டும். இந்த முறையை தினமும் மேற்கொண்டால் நல்ல பலன் கிடைக்கும்.

* உப்பு அல்லது சர்க்கரை கொண்டு சருமத்தை ஸ்கரப் செய்வதன் மூலம், சருமத்தில் உள்ள அழுக்குகளை முற்றிலும் நீக்கி, எண்ணெய் பசையினால் சருமத்தில் ஏற்படும் பிரச்சனைகளைத் தடுக்கலாம்.

* ஆப்பிள் சீடர் வினிகர் வீட்டில் இருந்தால், அதில் சிறிது தண்ணீர் ஊற்றி கலந்து, அந்த கலவைக் கொண்டு முகத்தை துடைத்து, 15 நிமிடம் ஊற வைத்து பின் குளிர்ந்த நீரில் கழுவினால், சருமத்தில் உள்ள எண்ணெய் பசை நீங்குவதோடு, சருமத்தில் தங்கியுள்ள அழுக்குகளையும் வேரோடு வெளியேற்றலாம். இதனால் முகப்பரு மற்றும் கரும்புள்ளிகளை போக்கலாம்.

English summary

Remedies For An Oily Nose

An oily nose is a storehouse of blackheads, dirt, and grease that makes your skin look unhealthy. Don't panic. The problem is widespread and you are not the only one who has an oily nose to show off. The only solution is to keep your skin, especially the nose, oil free and clean throughout the day. Here are some good remedies that can help you deal with your oily nose.
Story first published: Tuesday, December 17, 2013, 18:26 [IST]
Desktop Bottom Promotion