For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சிவப்பா மாற ஆசையா? அப்ப சிவப்பு நிற பழங்களைக் கொண்டு மாஸ்க் போடுங்க...

By Maha
|

பொதுவாக சிவப்பு நிறம் அபாயத்தைத் தான் குறிக்கும். ஆனால் அந்த நிறம் சருமத்தில் ஏற்படும் பல பிரச்சனைகளைப் போக்க வல்லது. ஆம், எப்படியெனில், சிவப்பு நிற பழங்களில் எண்ணற்ற உடல் நல நன்மைகளைத் தவிர, அழகு நன்மைகளும் அடங்கியுள்ளன. அதிலும் சிவப்பு நிற பழங்களைக் கொண்டு சருமத்திற்கு ஃபேஸ் மாஸ்க் போட்டால், சருமம் அழகாக மாறுவதோடு, ஆரோக்கியமாகவும் மாறும்.

ஏனெனில் இந்த பழங்களில் ஒருசில கனிமச்சத்துக்கள் இருப்பதால், இது சருமத்தில் உள்ள பிரச்சனைகளை மட்டுமின்றி, சருமத்தை வெள்ளையாகவும் மாற்ற உதவுகிறது. எனவே சருமத்தில் பிரச்சனைகள் இருந்தால், அப்போது கண்ட கண்ட க்ரீம்களைக் கொண்டு சருமத்தைப் பாதுகாப்பதை விட, சிவப்பு நிற பழங்களைக் கொண்டு சருமத்தை பராமரித்தால், நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும்.

அதிலும் வாரத்திற்கு ஒருமுறை சிவப்பு நிற பழங்களைக் கொண்டு, சருமத்திற்கு ஃபேஸ் பேக் போட்டு வந்தால், விரைவிலேயே அதற்கான பலனை பெறலாம். சரி, இப்போது எந்தெந்த சிவப்பு நிற பழங்களைக் கொண்டு, எப்படியெல்லாம் சருமத்திற்கு ஃபேஸ் பேக் போடலாம் என்று பார்ப்போமா!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மாதுளை

மாதுளை

மாதுளையைக் கொண்டும் சருமத்தைப் பராமரிக்கலாம். அதற்கு ஒரு கப் மாதுளை மணிகளை 3/4 கப் க்ரீம் சேர்த்து, நன்கு அரைத்து, அதனை முகம் மற்றும் கழுத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரில் கழுவினால், சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் பசை நீங்கி, சருமம் பொலிவோடு காணப்படும்.

ஸ்ட்ராபெர்ரி

ஸ்ட்ராபெர்ரி

சருமத்தை சரியாக பாதுகாப்பதில் ஸ்ட்ராபெர்ரி முக்கிய பங்கினை வகிக்கிறது. மேலும் ஸ்ட்ராபெர்ரி சருமத்தின் நிறத்தை அதிகரிக்கும் வல்லமைக் கொண்டது. ஆகவே பொலிவிழந்த சருமம் உள்ளவர்கள், ஸ்ட்ராபெர்ரியை பாலுடன் சேர்த்து அரைத்து, முகத்தில் தட்வி, ஊற வைத்து கழுவ வேண்டும்.

செர்ரி

செர்ரி

செர்ரிப் பழம் சருமத்தில் உள்ள பழுப்பு நிறத்தைப் போக்குவதில் சிறந்தது. அதற்கு செர்ரிப் பழத்தை அரைத்து, அதில் சிறிது ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து, சருமத்தில் தடவி 30 நிமிடம் ஊற வைத்து, வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.

தக்காளி

தக்காளி

தக்காளியும் சருமத்தில் ஏற்படும் பிரச்சனைகளைப் போக்கும் திறமைக் கொண்டது. ஆகவே தக்காளியை அரைத்து, அதனை முகத்தில் தடவி, சிறிது நேரம்த மசாஜ் செய்து நன்கு உலர விட்டு, பால் கொண்டு சிறிது நேரம் மசாஜ் செய்து, இறுதியில் குளிர்ந்த நீர் கொண்டு அலச வேண்டும்.

ப்ளம்ஸ்

ப்ளம்ஸ்

முகப்பரு அதிகம் உள்ளவர்கள், 2 ப்ளம்ஸ் பழத்தை எடுத்துக் கொண்டு, அதனை பால் சேர்த்து அரைத்து, முகத்தில் தடவி உலர வைத்து, குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இதனால் முகப்பருக்கள் நீங்குவதோடு, அதனால் உண்டாகும் தழும்புகளும் நீங்கி, சருமத்தை அழகாக வைத்துக் கொள்ள உதவும்.

தர்பூசணி

தர்பூசணி

நீர்ச்சத்து அதிகம் கொண்ட தர்பூசணியின் ஒரு துண்டை எடுத்து, சிறிது நேரம் மசாஜ் செய்து, உலர வைத்து, மீண்டும் மற்றொரு துண்டால் மசாஜ் செய்து, உலர விட்டு, மீண்டும் செய்ய வேண்டும். இவ்வாறு தினமும் மூன்று முறை செய்து வந்தால், சருமத்தில் உள்ள நச்சுக்கள் வெளியேறி, சருமம் பளிச்சென்று அழகாக இருக்கும்.

ஆப்பிள்

ஆப்பிள்

தினமும் ஆப்பிள் சாப்பிட்டால், எப்படி மருத்துவரை அணுக வேண்டிய அவசியம் இல்லையோ, அதேப் போல் ஆப்பிள் கொண்டு, முகத்திற்கு மாஸ்க் போட்டாலும், சரும பிரச்சனைகளைப் போக்கி, சருமத்தை க்யூட்டாக வைத்துக் கொள்ளலாம். அதற்கு ஆப்பிளை அரைத்து, அத்துடன் சிறிது ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து, ஈரமான சருமத்தில் தடவி, நன்கு 30 நிமிடம் காய வைத்து, பின் வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.

குருதிநெல்லி (Cranberries)

குருதிநெல்லி (Cranberries)

இந்த சிவப்பு நிற பழமும் சருமத்தில் ஏற்படும் அனைத்து பிரச்சனைகளையும் சரிசெய்யும் தன்மை கொண்டது. அதிலும் முகத்தில் வெள்ளைத் திட்டுக்கள் இருந்தால், அதனைப் போக்குவதற்கு, இந்த பழத்தின் சாற்றினைக் கொண்டு மசாஜ் செய்து வந்தால், எளிதில் போக்கலாம்.

ராஸ்ப்பெர்ரி

ராஸ்ப்பெர்ரி

கரும்புள்ளி பிரச்சனை உள்ளவர்கள், ராஸ்ப்பெர்ரியை முகத்தில் தேய்ப்பதோடு, கரும்புள்ளி உள்ள இடமான மூக்கு பகுதியில் நன்கு 15 நிமிடம் தேய்த்து, பின் பாலில் நனைத்த காட்டன் கொண்டு, துடைத்து எடுத்தால், கரும்புள்ளிகள் எளிதில் போய்விடும்.

சிவப்பு திராட்சை

சிவப்பு திராட்சை

சிவப்பு நிற திராட்சையின் சாற்றினைக் கொண்டு முகத்திற்கு மசாஜ் செய்து கழுவி வந்தால், சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் பசை நீங்குவதோடு, சருமத்தில் காணப்படும் முதுமைக் கோடுகளையும் தடுக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Red Fruits Face Packs For Skin Care

Red fruit face packs should be applied at least once in a week so that you have the best looking skin in any season. Take a look at some of the best red fruit face packs you can now apply for skin care.
Story first published: Wednesday, September 11, 2013, 15:31 [IST]
Desktop Bottom Promotion