For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அழகான முகம் வேண்டுமா? பூசணிக்காய் ஃபேஸ் பேக் போடுங்க...

By Maha
|

உடல் அழகைப் பராமரிப்பதற்கு நிறைய பழங்கள் மற்றும் காய்கறிகள் உதவியான உள்ளன. சருமம் முதல் முடி வரை, அனைத்தையும் பராமரிப்பதற்கு, பழங்கள் மற்றும் காய்கறிகளில் பப்பாளி, மாம்பழம், ஸ்ட்ராபெர்ரி, அவகேடோ, கேரட் மற்றும் பலவற்றை பயன்படுத்தியிருப்போம். ஆனால் காய்கறிகளில் ஒன்றான பூசணிக்காயை வைத்து அழகைப் பராமரிக்கலாம் என்பது பற்றி தெரியுமா?

ஆம், உண்மையில் சமையலில் பயன்படும் பூசணிக்காயை வைத்து சருமத்தை அழகாக்க முடியும். ஏனெனில் இதில் வைட்டமின்களான ஏ, சி, ஈ மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்டுகள் எண்ணற்ற அளவில் நிறைந்துள்ளன. அதிலும் இதில் உள்ள ஆல்பா மற்றும் பீட்டா கரோட்டீன், ரெட்டினோயிக் ஆசிட் போன்றவை, சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கவும், பழுப்பு நிற சருமத்தை பொலிவாக்கவும் பெரிதும் உதவியாக இருக்கும். மேலும் இதனை முடிக்கு பயன்படுத்தினால், அதில் உள்ள பொட்டாசியம் முடியின் வளர்ச்சியை அதிகரிக்கும்.

சரி, இப்போது இந்த பூசணிக்காயை வைத்து எப்படியெல்லாம் ஃபேஸ் பேக் போடலாம் என்றும், எந்த பொருளுடன் சேர்த்து ஃபேஸ் பேக் போடலாம் என்றும் பார்க்கலாமா!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பூசணிக்காய் கூழ்

பூசணிக்காய் கூழ்

பூசணிக்காயின் கூழை எடுத்து, தினமும் 10 நிமிடம் முகத்திற்கு தேய்த்து ஊற வைத்து கழுவினால், சருமத்தில் உள்ள இறந்த செல்கள் நீங்கி, சருமம் பொலிவாக இருக்கும்.

பூசணிக்காய் மற்றும் முட்டை

பூசணிக்காய் மற்றும் முட்டை

பூசணிக்காயின் கூழை, முட்டையின் வெள்ளைக்கருவுடன் சேர்த்து கலந்து, அத்துடன் சிறிது பால் மற்றும் தேன் சேர்த்து நன்கு கலந்து கொண்டு, அந்த பேஸ்ட்டை முகம் மற்றும் கழுத்தில் தடவி, 15 நிமிடம் ஊற வைத்து, குளிர்ந்த நீரில் கழுவினால், முகத்தில் உள்ள பருக்கள் நீங்கி, முகம் அழகாகக் காணப்படும்.

பூசணிக்காய் மற்றும் ஆப்பிள் சீடர் வினிகர்

பூசணிக்காய் மற்றும் ஆப்பிள் சீடர் வினிகர்

எண்ணெய் பசை சருமம் உள்ளவர்களுக்கு இந்த முறை சரியானதாக இருக்கும். அதற்கு பூசணிக்காயை நன்கு மசித்து, அதில் தேன் மற்றும் ஆப்பிள் சீடர் வினிகர் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி, 20 நிமிடம் ஊற வைத்து, குளிர்ந்த நீரில் அலச வேண்டும்.

பூசணிக்காய், பால் மற்றும் சர்க்கரை

பூசணிக்காய், பால் மற்றும் சர்க்கரை

முகம் கருப்பாக காணப்பட்டால், அதனை போக்குவதற்கு, பூசணிக்காய் கூழுடன், சிறிது சர்க்கரை மற்றும் பால் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி, 4-5 நிமிடம் ஸ்கரப் செய்து, 10-15 நிமிடம் ஊற வைத்து, பின்னர் குளிர்ந்த நீரில் கழுவினால், முகத்தில் உள்ள கருமை நிறம் மங்குவதோடு, பருக்கள் நீங்கி, கரும்புள்ளிகளும் மறைந்துவிடும்.

பூசணிக்காய் மற்றும் கடலை மாவு

பூசணிக்காய் மற்றும் கடலை மாவு

இந்த முறையில் ஃபேஸ் பேக்குடன், ஸ்கரப்பும் உள்ளது. அதற்கு மசித்த பூசணிக்காயில், கடலை மாவை சேர்த்து, சிறிது பால் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, சருமத்தில் தடவி, 10-15 நிமிடம் ஊற வைத்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இந்த ஃபேஸ் பேக் அனைத்து சருமத்தினருக்கும் நல்ல பலனைத் தரும். அதிலும் இதனை வாரத்திற்கு 2-3 முறை செய்ய வேண்டும்.

பூசணிக்காய் மற்றும் தயிர்

பூசணிக்காய் மற்றும் தயிர்

பூசணிக்காய் கூழுடன், தயிர், எலுமிச்சை சாறு மற்றும் தேன் சேர்த்து கலந்து, முகம் மற்றும் கழுத்தில் தடவி, 15 நிமிடம் ஊற வைத்து, இறுதியில் குளிர்ச்சியான நீரில் கழுவிட வேண்டும்.

பூசணிக்காய் மற்றும் பாதாம்

பூசணிக்காய் மற்றும் பாதாம்

இந்த ஃபேஸ் பேக், பழங்களைக் கொண்டு ஃபேஷியல் போட்டது போன்ற தீர்வைத் தரும். அதற்கு பூசணிக்காய் கூழை, பாதாம் பொடியுடன் சேர்த்து, தேன் ஊற்றி கலந்து, முகத்தில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்து, காய வைத்து, நீரில் கழுவ வேண்டும்.

பூசணிக்காய் மற்றும் சந்தனப் பொடி

பூசணிக்காய் மற்றும் சந்தனப் பொடி

முகப்பருவில் இருந்து விடுபட வேண்டுமெனில், இந்த முறையை பின்பற்றுங்கள். அதுவும் சந்தனப் பொடியை, பூசணிக்காய் கூழுடன் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி, 20 நிமிடம் ஊற வைத்து, குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். வேண்டுமெனில் அத்துடன் சிறிது தேன் சேர்த்துக் கொள்ளலாம். இதனால் முகப்பருக்கள் முற்றிலும் நீங்கிவிடும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Pumpkin Face Packs For The Perfect Skin! | அழகான முகம் வேண்டுமா? பூசணிக்காய் ஃபேஸ் பேக் போடுங்க...

After knowing beauty benefits of pumpkin, you would definitely like to try some face packs to get a clear, nourished and moisturised skin naturally. Here are few pumpkin face packs to help you out.
Story first published: Wednesday, May 15, 2013, 16:21 [IST]
Desktop Bottom Promotion