For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மென்மையான சருமம் வேண்டுமா? அப்ப இத ஃபாலோ பண்ணுங்க...

By Maha
|

அனைவருக்குமே அழகான மற்றும் மென்மையான சருமம் வேண்டுமென்ற ஆசை இருக்கும். இதற்காக பலர் பல அழகு நிலையங்களுக்குச் சென்று சருமத்தைப் பராமரிப்பார்கள். ஆனால் அவ்வாறெல்லாம் நிறைய பணம் செலவழித்து அழகு நிலையங்களுக்கு சென்றால் மட்டும் அழகு வந்துவிடாது. பொதுவாக அழகு என்பது ஒருவர் மேற்கொள்ளும் செயல்களின் மூலம் தான் வருகிறது. சிலருக்கு இயற்கையாகவே சருமம் மென்மையாக இருக்கும். ஒருசிலருக்கு சருமம் கடினமாக இருக்கும்.

இவ்வாறு கடினமாக இருக்கும் சருமத்தை இயற்கையான முறையில் மென்மையாக்க வேண்டுமெனில், ஒருசில செயல்களை தினமும் பின்பற்ற வேண்டும் மற்றும் ஒருசில செயல்களை செய்யவே கூடாது. அப்படி சருமத்தை மென்மையாக வைத்துக் கொள்ள மேற்கொள்ள வேண்டிய சில பழக்கங்களை தமிழ் போல்ட் ஸ்கை பட்டியலிட்டுள்ளது. அதைப் படித்து அவற்றை பின்பற்றினால், நிச்சயம் சருமம் மென்மையாக இருக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தண்ணீர் அதிகம் குடிக்கவும்

தண்ணீர் அதிகம் குடிக்கவும்

தினமும் போதிய அளவில் தண்ணீர் குடிக்கும் பழக்கத்தைக் கொள்ள வேண்டும். இதனால் உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேறி, சருமம் பொலிவாகவும், மென்மையாகவும், வறட்சியின்றியும் இருக்கும்.

வியர்வை மிகவும் முக்கியம்

வியர்வை மிகவும் முக்கியம்

வியர்வை வெளியேறுவது என்பது மிகவும் இன்றியமையாதது. ஏனெனில் வியர்வையின் மூலம் நிறைய நன்மைகள் உடலுக்கு கிடைக்கும். குறிப்பாக, சருமத்துளைகளில் தங்கியுள்ள நச்சுக்களை அனைத்தும் வெளியேறி, சருமத்தை சுத்தமாக வைத்துக் கொள்ளும். எனவே தினமும் உடற்பயிற்சியை மேற்கொண்டு, வியர்வையை வெளியேற்ற வேண்டும்.

முகத்தை அடிக்கடி கழுவ வேண்டாம்

முகத்தை அடிக்கடி கழுவ வேண்டாம்

முகத்தை அடிக்கடி சோப்பு போட்டு கழுவினால், சருமம் வறட்சியுடன் காணப்படும். ஏனெனில் சோப்பானது சருமத்தில் உள்ள இயற்கை எண்ணெய்களை முற்றிலும் சருமத்தில் இருந்து வெளியேற்றிவிடும். எனவே ஒரு நாளைக்கு 1-2 முறை கழுவினால் போதுமானது.

ஸ்கரப் செய்யவும்

ஸ்கரப் செய்யவும்

சருமத்தில் தங்கியுள்ள இறந்தை செல்கள் மற்றும் அழுக்குகளை வெளியேற்ற, ஸ்கரப் செய்ய வேண்டும். இதனால் சரும மென்மைக்கு தடையாக இருக்கும், அந்த அழுக்கு படலத்தை முற்றிலும் வெளியேற்ற முடியும்.

டோனிங் செய்யவும்

டோனிங் செய்யவும்

ஸ்கரப் செய்ய பின்னர், ரோஸ் வாட்டர் கொண்டு சருமத்தை துடைத்தால், சருமத்துளைகள் சிறிதாகி, அழுக்குகள் உள்ளே புகாதவாறு தடுக்கும்.

தேவையற்ற சரும முடிகளை அகற்றவும்

தேவையற்ற சரும முடிகளை அகற்றவும்

சருமத்தில் தேவையில்லாத இடங்களில் முடிகள் இருந்தால், அவற்றை வாக்சிங் அல்லது ஷேவிங் மூலம் நீக்க வேண்டும். இதனால் சருமம் மென்மையாக இருக்கும்.

ஆவிப் பிடிக்கவும்

ஆவிப் பிடிக்கவும்

ஆவிப்பிடிப்பதால், சருமத்துளைகள் தளர்வடைந்து, சருமத்தில் உள்ள அழுக்குகள் அனைத்தும் வெளியேறி, சருமம் மென்மையாகும்.

பழங்கள் மற்றும் காய்கறிகளை அதிகம் சாப்பிடவும்

பழங்கள் மற்றும் காய்கறிகளை அதிகம் சாப்பிடவும்

பழங்கள் மற்றும் காய்கறிகளை அதிகம் சாப்பிடுவதால், சருமத்திற்கு தேவையான சத்துக்கள் கிடைத்து, சருமம் பொலிவோடும், மென்மையாகவும் மாறும். உதாரணமாக, சிட்ரஸ் பழங்களை சாப்பிட்டால், அதில் உள்ள வைட்டமின் சி சருமத்தில் ஏற்படும் முகப்பருக்களை எதிர்க்கும். அதேப் போன்று கேரட் மற்றும் பீட்ரூட்டை சாப்பிட்டால், அதில் உள்ள வைட்டமின் ஏ, சருமத்தை அழகாகவும் சுத்தமாகவும் வைத்துக் கொள்ள உதவும்.

மேக் அப்பை நீக்கவும்

மேக் அப்பை நீக்கவும்

முடிந்த வரையில் மேக் அப் போடுவதை தவிர்ப்பது மிகவும் நல்லது. குறிப்பாக, மேக் அப் போட்டால், இரவில் மறக்காமல் சுத்தம் செய்து விட்டு பின்பு தூங்க வேண்டும். ஏனெனில் அதில் உள்ள கெமிக்கல்கள், சருமத்தை வறட்சியடையச் செய்து, அதன் மென்மைத் தன்மையை இழக்கச் செய்துவிடும்.

முகத்தில் கைகளை வைக்க வேண்டாம்

முகத்தில் கைகளை வைக்க வேண்டாம்

அடிக்கடி முகத்தை தொட்டால், கைகளில் உள்ள கண்ணுக்கு தெரியாத கிருமிகள் சருமத்துளைகளில் நுழைந்து, சருமத்தின் அழகிற்கு பாதிப்பை ஏற்படுத்திவிடும். ஆகவே அடிக்கடி முகத்தை தொடும் பழக்கத்தை கைவிட வேண்டும்.

இரவில் மாய்ஸ்சுரைஸ் செய்யவும்

இரவில் மாய்ஸ்சுரைஸ் செய்யவும்

தினமும் இரவில் படுக்கும் போது, சருமத்தை ஆலிவ், பாதாம் போன்ற எண்ணெய்கள் கொண்டு, மசாஜ் செய்து தூங்கினால், சருமத்தில் உள்ள பாதிக்கப்பட்ட சருமச்செல்கள் புதுப்பிக்கப்படுவதோடு, சருமமும் மென்மையாகும்.

நன்கு தூங்கவும்

நன்கு தூங்கவும்

தினமும் குறைந்தது 8 மணிநேர தூக்கத்தை மேற்கொள்ள வேண்டும். இதனால் சருமம் பொலிவோடு, அழகாக இருக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Natural Smooth Skin Tips That Work

Naturally smooth skin is one of the parameters of beauty that no one can deny. So if you want to get smoother skin that shines with health, you have to follow some basic smooth skin tips. Here are some of the best smooth skin tips that will give you silky skin that you would love to touch.
Story first published: Monday, September 16, 2013, 14:03 [IST]
Desktop Bottom Promotion