For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஆண்களுக்கு 'டோனர் லோஷன்' அவசியமா...?

By Super
|

அழகுப்படுத்திக் கொள்வது மற்றும் சரும பாதுகாப்பு என்று பார்க்கும் போது, ஆண்களுக்கு 'டோனர்' லோஷன் பயன்படுத்துவதில் ஆர்வம் இருப்பதில்லை என்பது புரிந்து கொள்ளக்கூடிய ஒன்று தான். ஆனால் அது அவசியமா என்பது தான் முக்கியமான ஒரு கேள்வி. 'ஆம்' என்பது தான் இதற்கான சரியான பதில். சொல்லப்போனால் ஆண்களின் சருமப் பாதுகாப்பில் விடுபட்டிருக்கும் ஒரு முக்கியமான அம்சம் இந்த 'டோனர் லோஷன்' என்று சொல்லலாம்.

சருமத்தின் நிறத்தையே முற்றிலும் மாற்றக்கூடிய அளவிற்கு இது அளிக்கும் பலனை பார்த்து நீங்களே ஆச்சரியப்படுவீர்கள். இப்போது ஆண்களுக்கான அழகுப்பொருட்கள் பட்டியலில் அவ்வளவாக பிரபலமடையாத இந்த ‘டோனர் லோஷன்' பற்றி இங்கே நீங்கள் தெரிந்து கொள்ளுங்கள்!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
‘டோனர்’ என்றால் என்ன?

‘டோனர்’ என்றால் என்ன?

கண்ணாடி போன்று தெளிவான லோஷன் போன்றோ அல்லது மினுமினுப்பான ஸ்ப்ரே போன்றோ காணப்படும். இந்த ‘டோனர்' சருமத்தை மெருகூட்டுவதற்காகவே பயன்படுத்தப்படுகிறது. டோனர் சருமத்தில் உள்ள நுண்ணிய துவாரங்களை இறுக்கி தூசிகள், வேண்டாத கிருமிகள் போன்றவை தாக்காதவாறு பாதுகாக்கிறது. மேலும் மன உளைச்சலின் தாக்கம் சருமத்தில் வெளிப்பட்டு பொலிவிழக்காமல் இருக்கவும் இது உதவுகிறது. அதிலும் இது ஒரு திரை போன்று சருமத் துவாரங்களை மூடி கரும்புள்ளிகள் போன்றவை வெளிப்படாமலும் பார்த்துக் கொள்கிறது. அதுமட்டுமின்றி ஷேவ்விங் செய்து கொண்ட பிறகு எரிச்சல் ஏற்படாமல் இருக்கவும் இது உதவும். மொத்தத்தில் ‘டோனர்' லோஷன் சருமத்தை பளபளவென்று பளிச்சென்று வைத்துக் கொள்ள உதவுகிறது. ஆகவே உங்கள் சருமத்திற்கேற்ற ‘டோனர்' லோஷனை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்

எண்ணெய் சுரப்பு மிகுந்த சருமம்

எண்ணெய் சுரப்பு மிகுந்த சருமம்

சிலருக்கு சருமத்தில் அதிகப்படியான எண்ணெய் சுரப்பு இருக்கும். இவர்களுக்கு சருமத்தில் சீபம் எனும் ஒரு வகை சுரப்பு அதிகமாக சுரப்பதால், நாள் முழுதுமே சருமம் எண்ணெயில் மினுமினுப்பது போல் காணப்படும். மேலும் இந்த சீபம் சுரப்பானது சருமத்தின் துவாரங்களை அடைத்துவிடுவதால், அவ்வப்போது அவற்றிலிருந்து எண்ணெய் வெளிப்பட்டு சருமத்தின் அழகை கெடுத்துவிடும். இதை தடுப்பதில் ‘டோனர்' லோஷன் முக்கிய பங்கு வகிக்கிறது. ‘டோனர்' லோஷன் பயன்படுத்தும் பட்சத்தில் சருமத்துவாரங்கள் ஒரு திரை போன்று மூடப்பட்டு பிசிறுகள் ஏதும் தெரியாதவாறு பளிச்சென்ற தோற்றத்தைப் பெறுகிறது.

வறட்சியான சருமம்

வறட்சியான சருமம்

வறட்சியான சருமத்திற்கு பிரீமியம் டோனர்களை பயன்படுத்துவதன் மூலம் சருமத்தில் நீர்ச்சத்து மிகுந்திருக்குமாறு பார்த்துக் கொள்ளலாம். முழுமையான பலன் கிட்ட வேண்டுமெனில், ‘கிளென்சிங், டோனிங் மற்றும் மாய்ச்சரைசிங்' என்று மூன்று அம்சங்களை கொண்ட சரும பாதுகாப்பு முறையை பின்பற்றினால் நல்லது. அப்படி செய்தால் சருமம் மிருதுவாகி, பொலிவான தோற்றத்திற்கு மாறும். மேலும், சருமம் வறட்சி நிலையிலிருந்து மாறி புதிய செல்கள் தோன்றி ஈரத்தன்மையுடன் காட்சியளிக்கும்.

மாய்ச்சுரைசர்

மாய்ச்சுரைசர்

டோனர் லோஷனை சருமத்திற்கு பயன்படுத்திய பின்னர் மாய்ச்சுரைசர் க்ரீம் போட்டால், அது இன்னும் மிகுந்த பலனைத் தரும் என்பது முக்கியமான ஒரு உண்மை.

ஷேவிங்கிற்கு பிறகு...

ஷேவிங்கிற்கு பிறகு...

பொதுவாகவே ஷேவிங் செய்து கொண்ட பிறகு ஆண்களுக்கு முக எரிச்சல் இருப்பது அன்றாட பிரச்சனை தான். இதற்கென்றே ‘ஆஃப்டர் ஷேவ் பாம்' கலந்த டோனர்கள் கிடைக்கின்றன. இதைப் பயன்படுத்தும் போது சருமம் புதிதாகவும், மென்மையாகவும், இதமாகவும் மாறி காட்சியளிக்கும்.

ஷேவிங் முன்பும் பயன்படுத்தலாம்

ஷேவிங் முன்பும் பயன்படுத்தலாம்

அதுமட்டுமல்லாமல், ஷேவிங் செய்வதற்கு முன்பும் டோனர் பயன்படுத்தலாம். இதனால் முகத்திலுள்ள ரோமங்கள் நேராக நிற்குமாறு செய்து ஷேவிங்கை அது சுலபமாக்குகிறது. இருப்பினும் எல்லா டோனர்களையும் ஷேவிங்கிற்கு முன்பு பயன்படுத்த முடியாது என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.

குறிப்பு:

குறிப்பு:

ஆண்களே! மேற்கூறியவற்றையெல்லாம் மனதில் கொண்டு சருமத்தை பராமரிக்கும் போது தவறாமல் டோனரைப் பயன்படுத்தினால், நிச்சயம் நல்ல அழகான மற்றும் மென்மையான சருமத்தைப் பெறலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Men’s Skincare- Is Using Toner Important?

When it comes to grooming, it's understandable that using a toner is perhaps at the bottom of a man's to-do list. But, the question is should guys use one? Most definitely! we tell you everything you should know about toners.
Desktop Bottom Promotion